செப்புப்பட்டயம்

அக்டோபர் 13, 2005

ரஜினியின் ‘சிவாஜி‘ பட கதாநாயகி ‘மழை‘ ஸ்ரேயா

கோப்பு வகை: Only ஜல்லிஸ், காப்பி-பேஸ்ட் — kundavai @ 2:14 பிற்பகல்

சென்னை அக்டோபர் 13:& ரஜினி நடிக்கும் புதிய படமான ‘சிவாஜி‘யின் கதாநாயகி வேட்டை ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. இந்தப் படத்தின் கதாநாயகியாக ‘மழை‘ படத்தின் கதாநாயகி ஸ்ரேயா நடிக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி‘ படம் வெள்ளிவிழா கொண்டாடியது அனைவரும் அறிந்ததே. வழக்கமாக 3 வருடங்களுக்கு ஒரு படம் நடிக்கும் ரஜினி, சந்திரமுகி நூறு நாட்களை கடந்ததுமே தான் நடிக்கும் புதிய படத்தின் பெயரை அறிவித்துவிட்டார்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம்.மின் தயாரிப்பில், தமிழின் நெம்பர் 1 இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ‘சிவாஜி‘ என்ற புதிய படத்தில் ரஜினி நடிப்பதாக அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் அந்த சமயத்தில் படத்தின் கதாநாயகி, இசையமைப்பாளர் ஆகியோரது பெயர்கள் வெளியிடப்படவில்லை.











Credits Vikatan.com

ஸ்ரேயா

இதனால் ‘சிவாஜி‘ படத்தில் ரஜினியின் ஜோடியாக நடிப்பவர் யார் என்பது குறித்து பல வதந்திகள் கோடம்பாக்கத்தில் உலா வந்து கொண்டிருந்தன. ஐஸ்வர்யா ராய், ராணி முகர்ஜி, த்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா என பாலிவுட், கோலிவுட் முன்னணி கதாநாயகிகளின் பெயர்கள் அடிபட்டன.

‘சிவாஜி‘ படத்தில் நடிப்பதற்காக மட்டுமின்றி, ‘படையப்பா‘, ‘பாபா‘, ‘சந்திரமுகி‘ ஆகிய படங்களிலும் கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேசப்பட்டதாக ரஜினியே சந்திரமுகியின் வெள்ளிவிழா மேடையில் கூறினார்.

ஆனால் ஐஸ்வர்யா ராய் இப்போது ஹாலிவுட் படங்களில் நடிப்பதில் பிஸியாக இருப்பதால், அவர் ரஜினியின் அழைப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே வதந்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன.

இந்நிலையில் ரஜினியின் ‘சிவாஜி‘ படத்தில் ‘மழை‘ படத்தில் கதாநாயகியாக நடித்த ஸ்ரேயா நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னடப் படத்தில் அறிமுகமாகி, வெகு விரைவிலேயே தெலுங்கின் அத்தனை முன்னணி கதாநாயகர்களோடும் நடித்து டோலிவுட்(தெலுங்கு சினிமா)டின் முக்கிய கதாநாயகியாக இருப்பவர் ஸ்ரேயா.

தமிழிலும், தெலுங்கிலும் ஒரே சமயத்தில் வெளிவந்த ‘எனக்கு 20 உனக்கு 18‘ படத்தில் த்ரிஷாவுடன் இரண்டாவது கதாநாயகியாக நடித்த அவர், சமீபத்தில் ‘ஜெயம்‘ ரவிக்கு ஜோடியாக ‘மழை‘ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இப்போது தமிழகத்தின் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் அதிர்ஷ்டம் ஸ்ரேயாவுக்கு அடித்திருக்கிறது. ‘சிவாஜி‘ படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் துவங்குகிறது.

8 மறுமொழிகள் »

  1. Is it confirmed ???

    But anywayz thanx for such a wonderful stills of Sherya ( Really u have beaten the strategy of our investigative journals like Reporter, Junior vikatan
    Attractive title + Gossip + some stills ..)

    Comment by Vignesh — அக்டோபர் 13, 2005 @ 4:35 பிற்பகல் | பதில்

  2. ஹிஹிஹி.
    எல்லாம் நான்
    பதிவு போட்ட நேரம்
    பாருங்கோ.
    எங்கயிருந்தாலும் நல்லாயிருக்க வாழ்த்துக்கள்.

    Comment by வசந்தன்(Vasanthan) — அக்டோபர் 13, 2005 @ 4:39 பிற்பகல் | பதில்

  3. Sirf Ek Heroine?

    Comment by Boston Bala — அக்டோபர் 13, 2005 @ 4:52 பிற்பகல் | பதில்

  4. அதுக்குள்ள இன்னொரு அண்ணியா?

    Comment by ராம்கி — அக்டோபர் 13, 2005 @ 7:16 பிற்பகல் | பதில்

  5. hm…….. ஷ்ரேயாவின் முழூ(நீல) படத்தை போட்டதன் மூலம் உம் பதிவு மோட்ஷம் அடைந்தது…

    Comment by ஆள்தோட்டபூபதி — அக்டோபர் 14, 2005 @ 6:07 மு.பகல் | பதில்

  6. பின்னோட்டமிட்டமைக்கு நன்றி, விக்னேஷ், வசந்தன், போஸ்டன் பாலா, ராம்கி, ஆல்தோட்ட பூபதி.

    பாலா – இன்னொருவர் இருப்பதாகவும் கேள்வி!.
    பூபதி(ஆல்தோட்டம்) – உங்கள் பின்னூட்டத்தினாலும்.

    Comment by மோகன்தாஸ் — அக்டோபர் 14, 2005 @ 6:42 மு.பகல் | பதில்

  7. oiizi

    Comment by opipo — ஜூலை 9, 2007 @ 2:27 பிற்பகல் | பதில்

  8. jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj

    Comment by kkkkkkkkkkkkkkkkkkkkkkkkk — ஜூலை 9, 2007 @ 2:29 பிற்பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.