எனது ஓவியங்கள்.

முக்கியமா ஒன்னு நான் ஓவியனெல்லாம் ஒன்னும் கிடையாது. சொல்லப்போனால் ஓவியம் வரையரதப்பத்தியும் ஒன்னும் தெரியாது. ம.செ ஓவியங்களைப்பார்த்து கத்துக்கிட்டதுதான். அதனால் ஓவியத்தில் தவறு இருந்தால் மன்னிச்சுறுங்க.

முன்பே ஒருமுறை தமிழ்மணத்தில் இணைவதற்கு முன் நான் வரைந்த படங்களை போட்டதாக ஞாபகம், ஆனாலும் அந்தப்படங்கள் நான் வரைந்ததுதானா என பலரும் சந்தேகம் எழுப்புவதால் அதன் சுருக்கப்பட்ட படங்களை போடுறேன். (சைஸ் கம்மிங்கோ).

நம்புக்கப்பா!!!







16 thoughts on “எனது ஓவியங்கள்.

  1. நான் நேத்தைக்கு சொன்னது உங்கள் ஓவியத்தையும் சேர்த்துதான். மிக அழகாக வந்திருக்கிறது. எனக்கு ம.செல்வன் ஓவியம் மிகுந்த விருப்பம். அவரின் சாயல் கண்டிப்பாக உங்கள் கைவண்ணத்தில் தெரிகிறது. தொடருங்கள். பாராட்டுக்கள்.

  2. வாவ்! ரொம்ப நல்லா இருக்குங்க மோகன்தாஸ். நான் நேற்று அந்த ஓவியங்கள் ம.செவினுடையது- ஏதோ புத்தகத்திலிருந்து எடுத்துப் போட்டது- என்றே நினைத்தேன். ஓவியம் தெரியாதவர்கள் இப்படி வரையமுடியும் என்பதே நம்பமுடியவில்லை. இந்தத் துறையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி உங்களைப் பட்டைதீட்டிக் கொள்ளுங்கள்.

  3. நன்றிங்க ஜெயஸ்ரி, எனக்கும் ஆசைதான் கத்துக்க, பார்ப்போம் எப்படிபோகுதுன்னு.

    PS: sorry for the trouble, deleted the previous comment.

  4. எனக்கு நம்பிக்கையில்லைங்கோ, தஞ்சாவூர் பெண்ணு கொஞ்சம் கருப்பா, குண்டா கூட இருந்திருக்கலாம்.

  5. Band Width உதைக்குதுன்னு நினைக்கிறேன். இருங்க சொந்த வெப்சைட்டில் போட்டுப் பார்க்கிறேன்.

  6. அற்புதமான ஓவியங்கள். தங்கள் கைவண்ணம் காவியம் படைப்பதாய் உள்ளது. பல குழந்தைகள் வரைந்த ஓவியங்களை எனது தளத்தில் காண்க. இம்மழலைகளுக்கு உங்கள் மனதில் தோன்றும் வழிகாட்டுதல்களை எழுதுங்கள்.

    அன்புடன்

    ஆகிரா

  7. படங்கள் சிறப்பாக இருக்கின்றன…!!!

    செந்தழல் ரவி

  8. ஆகிரா, நானெல்லாம் சும்மா வரைகிறேன்னு ஜல்லி அடித்துக்கொண்டிருக்கிறேன்.

    வந்து பார்க்கிறேன் ஆனால் அறிவுரையெல்லாம் சொல்லமாட்டேன். அதுதான் என் வழக்கம்.

    மற்றபடிக்கு நன்றிகள்.

  9. நல்ல விஷயத்தை அனானிமஸாவா வந்து சொல்வாங்க ரவி.

    லாகினோட வந்து இன்னொரு முறை சொல்லிட்டு போங்க பாஸ்.

  10. உங்கள் எழுத்தைவிட
    உங்கள் ஓவியங்கள்
    “மிகவும்”
    நன்றாக இருக்கின்றன.
    இந்தத் துறையிலும் தொடருங்கள்.

    – பி.கே. சிவகுமார்

  11. பிகேஎஸ் ஒரே கவிதையா சொல்றீங்க. (மடிச்சு மடிச்சு எழுதினா கவிதை தானே?)

  12. ரொம்ப அருமைங்க…

    எப்படி பல மரம் காணுறீங்க…

பின்னூட்டமொன்றை இடுக