செப்புப்பட்டயம்

தமிழ் கதை, சிறுகதை, தொடர்கதை, ஜல்லி, சுஜாதா, சினிமா, உலக சினிமா

காதலர் தின ஸ்பெஷல் ஜொள்ளு

பதிந்தவர் kundavai மேல் பெப்ரவரி 14, 2008

சொந்த ஜொள்ளு

விக்டோரியாவின் சீக்ரெட்டுகளே
சீக்கு வந்த கோழியாய்
ஆகிப் போனது ஹார்ட்டுகளே
அழகாத்தான் பறந்து வரீங்க நீங்க
அட அம்சமாவும் கொடுக்குறீங்க போஸ
அத்தன பேரையும் கட்டிக்கத்தான் ஆச
மாவு இருந்தாத்தான் சுட்டுருப்பேனே
தோசை அட நம்ம தோசை

கீழ விழுந்த ஆப்பிள பாத்த நியூட்டனா
மாத்திப்புட்டீங்க என்ன நீங்க மொத்தமா
பறக்கவிட்ட முத்தமெத்தனை தெரியலை
மறஞ்சு போன மாயமென்ன புரியலை
அத்தன வெயிட் ஆப்பிளுமே விழுகுது
அசறடிக்கும் முத்தமெங்கே போவது
பூமிக்கும் கிறக்கமாத்தான் இருக்குதோ
உங்க முத்தம் பட்டதும் பூமியுமே சுத்துது
தன்னத்தானே சுத்துது

வாடகை ஜொள்ளு - வைரமுத்து விட்டது

அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே (அன்பே)

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி (அன்பே)

கொடுத்து வைத்தப் பூவே பூவே
அவள் கூந்தல் மணம் சொல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே
அவள் குளித்தச் சுகம் சொல்வாயா
கொடுத்து வைத்தக் கொலுசே
கால் அழகைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே
மார் அழகைச் சொல்வாயா

அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
உயிருக்கு உயிரால் உறையிடுவேன்

மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளித்
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன் (அன்பே)

ஒரு பதில் -க்கு “காதலர் தின ஸ்பெஷல் ஜொள்ளு”

  1. Abul கூறுகிறார்:

    ///பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
    அடடா பிரம்மன் கஞ்சனடி
    சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
    ஆஹா அவனே வள்ளலடி////

    கலைஞர் அந்தக்காலத்திலேயே ஒரு பட‌த்துக்கு எழுதிய வசனத்தை வைரமுத்து சுட்டு பாட்டா எழுதிட்டார்

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>