குஷ்பு தற்கொலைமுயற்சி

Nanri: ThatsTamil.com

குஷ்பு தற்கொலைக்கு முயன்றதாக ‘பகீர்’ வதந்தி

செப்டம்பர் 29, 2005

சென்னை:

நடிகை குஷ்பு தற்கொலைக்கு முயன்றதாக இன்று வதந்தி பரவியது.

கற்பு விவகாரத்தில் அவர் தெரிவித்த கருத்தால் பெரும் சிக்கலில் மாட்டியுள்ள குஷ்புவுக்கும் அவரது மகனுக்கும் இன்று பிறந்த தினமாகும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பிறந்த நாளைக் கொண்டாட விரும்பாத குஷ்பு குடும்பத்தினர் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர்.

அவர்களுக்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் தொலைபேசி மூலம் வாழ்த்துக்களைத் தெவித்தனர்.

இந் நிலையில் குஷ்பு தற்கொலை செய்ய முயன்றதாக சென்னையில் புரளி பரவியது. வெகு வேகமாக இத் தகவல் தமிழகம் முழுவதும் பரவியது.

இதையடுத்து பத்திரிக்கை அலுவலகங்கள், டிவி நிலையங்கள், இணையத் தளங்களின் அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு பலரும் இந்தத் தகவல் உண்மையா என்று விசாரித்தனர்.

இதற்கிடையே குஷ்பு மீதான மக்களின் கோபத்தைத் தணிக்க சினிமாத்துறையைச் சேர்ந்த சிலர் வேண்டுமென்றே இந்த வதந்தியைப் பரப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

குஷ்பு கொடும்பாவி எரிக்க முயற்சி:

இதற்கிடையே நடிகை குஷ்புவைக் கண்டித்து சென்னை விருகம்பாக்கத்தில் அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்ற தமிழ்த் திருநாடு வீடு, நிலம், மனை தரகர்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்த 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.

குஷ்புவுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து கொண்டுள்ளது. இன்றும் அவரைக் கண்டித்து சென்னையில் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்த் திருநாடு வீடு, நிலம், மனை தரகர்கள் நலச் சங்கத்தின் சார்பில் அமைப்பின் தலைவர் கண்ணன் தலைமையில் 20 பேர் விருகம்பாக்கம் பகுதியில் ஊர்வலமாகசென்று உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.

அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

சுஜாதாவுக்கும் சிங்கியடித்தலும் :D

சுஜாதாவுக்கும் காலச்சுவட்டுக்கும் ஆகவே ஆகாது போலிருக்கிறது. மீண்டும் ஒரு சர்ச்சையில் சுஜாதா. குமுதத்தில் கேட்ட கேள்விக்கு பதிளலித்தது இப்போது சர்சையில் மீண்டும்.

http://tamil.sify.com/kalachuvadu/sep05/fullstory.php?id=13934947

சுஜாதா டாகுமெண்டரி சினிமாவைப் பற்றி சொல்லிய சிங்கியடித்தல் பொன்ற வார்த்தைகளுக்காக மீண்டும் ஒரு பிரச்சனை.

சுஜாதாவின் வெண்பாவும் யூரின் தெரபியும்

அதிகாலையில் என்னைப் பார்க்க வந்திருந்தவர் கையில், கணையாழியின் கடைசிப் பக்கங்கள் நூல் இருந்தது. அதில், காது மடக்கின இடத்தைப் பிரித்து, ‘இது நீர் எழுதினதுதானா? என்றார். சற்று அதட்டலான குரல்.

அது ஒரு வெண்பா. எமெர்ஜென்சி யைத் தளர்த்தி, பொதுத் தேர்தல் நடத்தி, இந்திரா காந்தி தோற்று, மொரார்ஜி தேசாய் பிரதமராக வந்த காலத்தில், நான் எழுதிய வெண்பா.

யூரின் தெரப்பி… சிறுநீர் சிகிச்சை பற்றிப் பல செய்திகள் அப்போது வந்தன. தேசாயின் தேக ஆரோக் கியத்துக்கு முக்கியக் காரணம், அவர் தினம் காலையில் பருகும் இளமை ஊற்று என்று வேதங்கள் சொல்கிற வைக்கோல் நிற சொந்த திரவம்தான் என்று செய்திகள் வந்தன. இதைப் பல பேர் கேலி செய்தார்கள். எனக்கு இன்னும் சுதீர்தாரின் கார்ட்டூன் ஞாபகம் இருக்கிறது (பாத்ரூம் கதவு மூடியிருக்க, உள்ளேயிருந்து ‘சியர்ஸ்! பாட்டம்ஸ் அப்!!’ சப்தம்.). நான் அந்த தேசாய் தெரப்பி பற்றித்தான் ஒரு மெலிதான வெண்பா எழுதியிருந்தேன். அதைத்தான் அந்தப் பெரியவர் எனக்குச் சுட்டிக்காட்டினார். அவ் வெண்பா இஃது,

மிசா மறைந்து எமெர்ஜென்சி விட்டுப்போய்
தேசாயின் ஆட்சியில் சந்தோஷம் – பேசாமல்
பாத்திரம் ஒன்று எடுத்துக்கொண் டெல்லோரும்
_த்திரம் குடிக்கவா ரும்.

“நல்ல வெண்பாதானே? கொஞ்சம் அங்கங்க அட்ஜஸ்ட் பண்ணா, தளை தட்டாது!” என்றேன்.

“மண்ணாங்கட்டி! உமக்கு என்ன தெரியும், யூரின் தெரப்பி பற்றி?”

“அதிகம் தெரியாது சார்.”

“சொல்றேன், கேள்!” – ஆள்காட்டி விரலைக் காட்டி, “இதை நீ எளிதாக எண்ணக் கூடாது’’ என்று சரமாரியாக சரித்திரத்தை எடுத்துவிட்டார். ‘‘ரோமாபுரி சாம்ராஜ்யத்தில், மாமன்னர் கள் காலத்தில் இதன் விற்பனைக்கு வரி இருந்ததாம். வயிற்றில் அல்சர் போன்ற வியாதிகளுக்குச் சஞ்சீவியாகக் கருதப் பட்டது. குளிக்கும்போது ஒரு சொம்பு இதையும் மொண்டுகொள்வது உத்தமம் என்று ரோமர்கள் நம்பினார்களாம். சைனாவில் மூலிகை மருந்துகளை சிறுநீருடன் கலந்து கொடுப்பது தொன்றுதொட்ட வழக்கம். திறந்த புண்களுக்கும் அது தடவப்பட்டதாம். எகிப்திலும் குடித்தார்கள், தடவினார் கள், குளித்தார்கள். ஒரு பெண் கர்ப்ப மாக இருக்கிறாளா என்று கண்டுபிடிக்க பார்லி விதைகள் மேல் அவள் பெய்ய, அது முளைத்தால் கர்ப்பமாம்.ஜெர்மனி யில், பழங்காலத்தில் இளைஞனின் சிறுநீரை தேனில் கலந்து கொதிக்க வைத்து, கண்ணுக்கும் புண்ணுக்கும் தடவினார்களாம். இங்கிலாந்தில் ராத்திரி அதிகம் குடித்தால் (மூச்சா இல்லை, மது) அதிகாலை சிறுநீரை கையிலும் காலிலும் சூடாகத் தேய்த்துக் கொண்டால், ஸ்டெடியாகிவிடுவார் களாம். குங்குமப்பூ சேர்த்துக் கொப்பளிப்பது, தொண்டை கட்டிக் கொள்வதைத் தவிர்க்கும். பிரான்ஸில், அதிகாலையில் சிறுநீரைக் குடிப்பதால் கால் வீக்கம் குறையும் எனக் கண்டறிந்தனர். மஞ்சள்காமாலைக்கும் ‘அது’ நல்ல மருந்தாம்! இன்றும் பலர் ரகசியமாக தினம் அரை டம்ளர் குடிக்கிறோம்.” – இவ்வாறு அடுக்கிக் கொண்டே போனார் பெரியவர்.

‘‘இப்படிப்பட்ட முக்கியமான சிகிச்சையை, 19&ம் நூற்றாண்டின் மருத்துவம் நான்சென்ஸ் என்று சொல்லிவிட, சிறுநீர் வைத்தியம் சிறுமைப்பட்டுப் பதவி இழந்தது. அண்மைக் காலத்தில் மாற்று சிகிச்சை முறைகளில் இதற்கு புத்துயிர் வந்திருக்கிறது” என்றார். தொடர்ந்து, “சிறுநீர் உண்மையில் கழிவுப் பொருளல்ல. அதில் விஷம் எதுவும் கிடையாது. 95 சதவிகிதம் தண்ணீர்தான். மற்றதில், இரண்டரை விழுக்காடு யூரியா. மிச்சம் என்ஸைம்கள், தாதுப் பொருள்கள், ஹார்மோன்கள் எனப் பலதும் உள்ளது, இதற்கு ஆன்ட்டிசெப்டிக் குணங்களும் உண்டு” என்று சொல்லிவிட்டு, “எனக்கு என்ன வயசிருக்கும், சொல்?” என்றார்.

“அறுபத்தைந்து?”

“எண்பத்தைந்து! எல்லாம் காபிக்கு முன் கால் தம்ளர் குடிப்பதால்தான்!”

“என்ன டேஸ்ட் இருக்கும்?”

“அது அவரவரைப் பொறுத்தது. பரிசோதித்துப் பாரேன். இதன் மகிமை புரிந்தால் சரி!” என்று சொல்லி விடைபெற்றார்.

நான் டாய்லெட்டுக்குச் சென்றேன். “தீர்மானித்துவிட்டேன். இனிமேல் இதைப் பற்றி வெண்பா எழுத மாட்டேன்” என்று உரக்கச் சொல்லிவிட்டு, டாய்லெட்டின் சங்கிலியை இழுத்தேன்.

யூரின் தெரப்பியையும் ‘மங்கள் பாண்டே’யையும் துறந்துவிட்டு, கொஞ்சம் பிரபஞ்சத்தை வியக்கலாம். நாம் இருப்பது சூரியக் குடும்பம். “மில்க்கி வே” என்னும் பால்வீதி காலக்ஸியில், ஒரு ஓரத்தில் உள்ள நடுவாந்திர சைஸ் நட்சத்திரம் சூரியன்! சூரியனைச் சுற்றி பூமி, மணிக்கு 66,000 மைல் வேகத்தில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. சூரியன், பால்வீதியின் மையத்தை வைத்துச் சுற்றிக்கொண்டு இருக்கிறது. பூமி சூரியனைச் சுற்றி வர, ஒரு வருஷம் ஆகிறது. சூரியன் பால்வீதியில் ஒரு ரவுண்டு வர, இருபத்திரண் டரைக் கோடி ஆண்டுகள் ஆகின்றன. இத்தனைக் காலமாவதால், “மெல்லத்தானே சுற்றும்” என்று எண்ணாதீர்கள். ஆகாச கங்கை என்னும் பால்வீதியை ஒரு சுற்று முடிக்க எத்தனை மைல் போக வேண்டும், தெரியுமா? நூறாயிரம் ஒளி வருஷங்கள்! அதாவது 5865696 – க்கு அப்புறம் பன்னிரண்டு சைபர். அத்தனை மைல். எனவே, சூரியன் ஒரு செகண்டுக்கு135 மைல் வேகத்தில் பயணம் செய்கிறது. இது ஒரு காலக்ஸியின், ஒரு நட்சத்திரத்தின் சரித்திரம் மட்டுமே! இப்படிப் பல கோடிக்கணக்கான காலக்ஸிகள், பல கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்… இதெல்லாம் வேஸ்ட்டா? நாம் ஒருவர்தான் இந்த அண்ட பேரண்டத்தில் உயிருள்ளவர்களா? இதையெல்லாம் யோசித்தால், ராத்திரி தூக்கம் வராது!

வாழ்க வெண்பா வளர்க வெண்பாவின் புகழ்.

நன்றி – ஆனந்தவிகடன், சுஜாதா

பாலகுமாரனும் பஞ்சவன்மாதேவியும்

பாலகுமாரன் அவர்கள் சில காலமாக ஆராய்ச்சியெல்லாம் செய்து உடையார் என்றொரு கதையெழுதி வருகிறார். அதைப்பற்றிய சில கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியவில்லை.

இங்கே நான் குறிப்பிடுவதற்கு முக்கியமான காரணம், பாலா தன் முதல் பாகத்தில் கல்கியை பற்றியும், அவருடைய நாவலில் வரும் நந்தினியை பற்றியும் கூறியதை வைத்தே, புத்தகம் கையில் இல்லாத காரணத்தால், சில வருடங்களுக்கு முன் படித்ததை நினைவு கூர்ந்து சொல்கிறேன். அதாவது நந்தினியை போன்ற ஒரு கற்பனை கதாப்பாத்திரம் கதையின் போக்கை தீர்மானிப்பதை பற்றி கருத்து கூறிய பாலா தன் கதையில் அதுபோன்று நிகழாது என்று கூறினார். இந்த விஷயத்துக்கு பின்னால் வருகிறேன்.

பாலாவின் இந்த கதையில் கரூவூர்த்தேவர் போன்ற சில மந்திர தந்திரங்கள் செய்யும், பாத்தி
ரங்களை அறிமுகப்படுத்துகிறார். கோவில் கட்டியதன் பங்கில் பெரும்பாலானவற்றை அவர்களிடமே கொடுக்கிறார். அவ்வளவு பெரிய கோவில் கட்டிய மன்னன்(கடவுளுக்கு) கடவுள் நம்பிக்கையில்லாதவனாக இருப்பான் என்று சொல்லவில்லை. ஆனால் பாலகுமாரன் கொஞ்சம் அதிகம் சொல்கிறாரோ என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட மன்னர்கள்(ராசராசன், ராசேந்திரன்) கொஞ்சம் முரடர்களாகத்தான் இருந்திருப்பார்கள் என்பது என் எண்ணம். இல்லாவிட்டால் போர்க்களத்தில் சண்டை செய்ய இயலாது. இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவர்கள் என்பதால் கட்டாயம் முரடர்களாக இல்லாதிருக்க முடியாது.

அவ்வளவு பெரிய மகத்தான கோவில் கட்டிய பெருமையை மன்னனுக்கு கொடுங்கள், இல்லை உதவிய மக்களுக்கு கொடுங்கள். அவர்களை பாராட்டுங்கள். இவையெல்லாம் இல்லாமல் கடவுளையும், மந்திரம் தந்திரம் செய்பவர்களையும் சிறிது உயர்வாக பாராட்டுவதாக எனக்குப்படுகிறது.

கல்கி குந்தவையையும் வந்தியத்தேவனையும் எழுதிவிட்டதால் இவர் குறிப்பிட வேண்டிய அவசியம் கூட கதையில் இல்லை, பாவம் அவரும் தான் என்ன செய்வார். பஞ்சவன்மாதேவியின் வரலாற்றை எழுதாமல், கோவிலின் உட்புற சுவற்றில் மன்னன் பதித்தவற்றை கொடுத்தவர்கள் பற்றியும், வடக்குபாடியை சாமந்தர்களின் தலைவனாக இருந்து சோழகுலத்தின் வெற்றிக்காக போராடியவர்களையும் எழுத முடியுமா என்ன?

அதுமட்டுமில்லாமல் பாலகுமாரன் சில தனிப்பட்ட காரணங்களுக்காக, தேவரடியார்களுக்கு
கொஞ்சம் அதிகம் இடம் கொடுப்பதாக தெரிகிறது. பெண்கள் அந்தக் காலத்தில் இத்தனை மதிப்பு பெற்றிருந்தார்கள் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ராசராசனைப் போன்ற ஒரு மன்னன் ஒரு தேவரடியாரை இவ்வளவு நம்பியிருந்தான் என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை. சிறிதுவிட்டால் கோவில் கட்டியதே பஞ்சவன்மாதேவிதான் என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

இருந்திருக்கலாம் ராசராசனின் அன்னியோன்மையாகவே இருந்திருக்கலாம். ராசேந்தி
ரனுக்கும் அவர்களை பிடித்திருக்கலாம் பள்ளிப்படை அமைத்திருக்கலாம். அதை ஒன்றை வைத்துக் கொண்டு அந்த தேவரடியார் அவர்களை உடையாரில் கதாநாயகி போல் அமைத்திருப்பதை படிக்க மனம் வரவில்லை.

கல்கி எழுதியதை எழுதமாட்டேன் என்று சொன்னால் இன்னும் எத்தனையோ விஷயங்கள்
இருக்கு அதையெல்லாம் விட்டுவிட்டு, நாடி ஜோதிடம் பார்த்தார், அதனால் தான் கோவில்
கட்டினார்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.

கருவூர்த்தேவரை பற்றி எழுதும் போது, அவரையும் எழுத ஒரு பைத்தியக்காரன் வருவான்னு,
தன்னைப்பற்றி, வஞ்சகப்புகழ்ச்சி செய்துக்குறார். அறிந்தவரையில் கருவூர்த்தேவர் கவிதை
எழுதுபவர். அவர் அந்தக் காலத்தில் கவிதையில்லாம் எழுதியதாக தெரிகிறது.

ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை கொல்ல சென்ற பொழுது, அவனுக்கு வழிகாட்டியவனின், நினைவை மறக்கடித்த கருவூர்த்தேவரை பற்றி எங்கு படித்தார்னு சொன்னால் நாங்களும் படிப்போமில்ல.

தேசிகன் அண்ணாவின் வேதாளமும் நானும்

கேள்விகள் கேட்கமாட்டேன் என்று உத்திரவாதம் அளித்ததால், தேசிகன் அண்ணாவின் வேதாளத்தை ஒருநாள் நான் சுமக்க சம்மதித்தேன். (அண்ணாவுக்கு தெரியாமல் தான்.)

ஆனால் வேதாளம் தோளில் ஏறியதுமே, முருங்கைமரம் ஏறியதுதான் சோகமே. முருங்கைமரத்திலிருந்து நேராய் வீட்டிற்கு போகச்சொன்னது எனக்கு உண்மையிலேயே பிடிக்கவில்லை. அனாவசியமாய் தொல்லைகளை சுமந்துகொண்டு வீட்டிற்கு வந்தால் செருப்படியென்று, வீட்டில் ஏற்கனவே சொல்லியிருந்ததார்கள்.

அகன்ற பெரியவீதி, இருபுறமும் அழகழகாக தூங்குமூஞ்சி மரங்களும், தூங்காமல் பறந்துகொண்டிருக்கும் வண்ணத்துப்பூச்சிகளும் வேதாளத்தை பார்த்து பயந்தன. வீட்டிற்கு வெளியில் அம்சமாய், குண்டுமல்லி பூத்து மணம்வீசிக் கொண்டிருந்தது, எத்தனை முறை சொன்னாலும், இந்த அக்காவிற்கு அறிவே இல்லை, சுத்தமாக வைத்திருக்காவிட்டால் தோட்டத்திற்குள் தேவையில்லாததெல்லாம் வந்துவிடுமென்று சொன்னால். நீயே தேவையில்லாததுதான் என்று பதில் வருகிறது.

முன்பக்கம் சாக்கடைகள் தூற்வாரப்பட்டு, சுத்தமாய் இருக்க. அதில் சிறுவர்கள் உட்கார்ந்து வி
ளையாடிக்கொண்டிருந்ததை பார்த்து சிரிப்புதான் வந்தது. நான் முன்பக்க கதவை திறந்துகொண்டு, உள்ளே நுழைந்தேன்.

அய்யோ மறந்துவிட்டேனே, அன்பரசு இருப்பானே, வேதாளத்தை பார்த்து அவன் பயந்துவிட்டால், ஒரு நிமிடம் யோசிப்பதற்குள், அன்பரசு கண்ணை மட்டும் உயர்த்தி பார்த்துவிட்டு உனக்கும் எனக்கும் சம்மந்தமில்லை என திரும்பி படுத்துக்கொண்டது, ஒருவேளை நேற்று அவனுடைய பிரட் பாக்கெட்டடை நான் சாப்பிட்டுவிட்ட கோபமாக இருக்கலாம்.

மெதுவாக அவன் கண்ணில் வேதாளம் பட்டுவிடாமல், உள்ளே நுழைந்தேன். இந்த அப்பா எப்பவுமே இப்படித்தான், ஒன்றிற்கு இரண்டு வண்டி வாங்கி ஓட்டிக்கொண்டிருப்பது கூட பரவாயில்லை, அதை வீட்டிற்கு முன்னாலா நிறுத்துவது, வாசலை மறைத்தபடி. கோபம் கோபமாய் வந்தது. பக்கவாட்டு சுவர்களில் நான் வரைந்திருந்த சில படங்களை பார்த்தபடி வேதாளம் மௌனமாய் இருந்தது. பரவாயில்லை.

உள்ளே நுழைந்ததும் மெதுவாக தலையை மட்டும் தூக்கி அலமாரியை எட்டிப்பார்த்தது, ஒரு ஓட்டைரேடியோ, சில ஐயப்பன் கேசட்டுக்களும், அம்மா தயிர் உறைஊற்றி வைத்திருந்த சொம்பும், ஒரு அடுக்கு முழுவதும். கீழிரண்டு அடுக்குகளில் தினமலர் பத்திரிக்கையும் வாரமலர்களும் அதிகமாயிருந்ததால், சிலசமயம் பூரான்களும் இன்னும் சில பெயர் தெரியா ஜந்துக்களும் வந்து பயமுறுத்தியிருக்கிறது.

மேல் சுவற்றில், சம்மந்தமேயில்லாமல், ஒரு குழந்தையும் காந்திதாத்தாவும் சிரித்துக்
கொண்டிருந்தார்கள். எனக்கு எப்பொழுதோ, யாரோ சொன்ன காந்தி ஜோக் ஞாபகம் வந்ததால்,
எனக்குள் சிரிக்க.

“என்ன சிரிப்பு?”

“இல்லை சும்மாத்தான். ஏதோ ஞாபகம்.”

“இவ்வளவு குப்பயாய், அழுக்காய், ஒட்டடையோட இருக்கே, சுத்தம் செய்றதேயில்லையா?”

“இல்லை, அம்மா சுத்தமா மொழுவி வைச்சா, துடைச்சிக்கிட்டு போயிரும்னு தான்
கொஞ்சம் அழுக்கா வச்சிருப்பாங்க. மற்றபடிக்கு நீ சொல்ற மாதிரியெல்லாம்
ரொம்பல்லாம் அழுக்காயில்லை, தெரிஞ்சிக்கோ”

“இல்லை உன் பதிலில் நான் திருப்தியாகவில்லை, நான் வேற ஒரு கேள்வி கேட்பேன், பதில்
சொல்லலைன்னா உன் தலை வெடிச்சிறும்.”

“முடியவே முடியாது, ஜாவாவில் எத்தனை கீவேர்டுன்னு ஈசியான கேள்வியே நீ கேட்டாலும், நான் யோசிச்சு தான் பதில் சொல்வேன் அதனால, நீ கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது, தலை போற மேட்டர்லெல்லாம் நான் விளையாடவே மாட்டேன் தெரிஞ்சிக்கோ.”

“அதெல்லாம் முடியாது, நான் கேட்கத்தான் போறேன். நீ பதில் சொல்லித்தான் ஆகணும்.”

மனசு பதற தொடங்கியது, அய்யய்யோ இது என்ன கேள்வி கேட்கப்போகுதோ தெரியாதே, இன்டர்வியூலெல்லாமே நான் தப்பு தப்பா பதில் சொல்வேனே. அய்யோ தலைவெடிக்கப்போகுதேன்னு நினைக்கிறப்போ. யாரோ தீண்டுவது போலிருந்தது, வேதாளத்தாலே கேள்விதானே கேட்க முடியும். இது எப்பிடி தொடுதுன்னு பார்த்தால்.

நான் ஒரு மேஜையில் படித்திருந்தேன், சக்திவாய்ந்த ஒரு விளக்கு என் முகத்திற்கெதிரா, பி
ரகாசமாய். யார் யாரோ என் பக்கத்தில் நிற்கிறார்கள். அய்யோ அவர்களுக்கு தலையேயில்லை, மொத்தமா உருண்டையா, இருக்கு, அதுங்கலெல்லாம் குதித்து குதித்து, நகர்வது தெரிந்தது. அந்த இடத்தை சுற்றப்பார்க்கிறேன். ஒரே வெள்ளையா இருக்கு, என்னையும் அந்த உருவங்களையும் தவிர யாருமேயில்லை. கீழே குனிந்து பார்த்தால், அய்யோ நானும் அதுங்களைமாதிரியேதான் இருக்கேன், எனக்கும் கால், கை, முகம்னு எதுவுமேயில்லாமல், உருளையாய்.

அந்த உருவங்களிடமிருந்து என்னவோ சத்தம் வருகிறது, நான் கூர்ந்து கேட்கிறேன். அவர்கள்
பேசுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

“இதெல்லாம் தேவையில்லாத ஆராய்ச்சி, இந்த வகையான ஜந்துக்கள் அழிந்துருச்சு, இந்த மாதிரி பாறையில் ஒட்டிக்கிட்டிருந்த ரத்ததுளியை வைத்து, நம் ஆட்களஇடம் ஆராய்வதை அடியோடி நிறுத்துவிடுங்கள்.”

நான் மயக்கமாகிக் கொண்டிருந்தேன்.