13,000 வைணவர்கள் கொல்லப்பட்டார்களா?

விவாதம் 13,000 வைணவர்கள் கொல்லப்பட்டார்களா? இஸ்லாமியர் படையெடுப்பை மட்டுமின்றி, ‘கங்கம்’ என்று அழைக்கப்பட்ட இன்றைய ஒரிசா பகுதியிருந்து வந்த இந்து மன்னர்கள் நிகழ்த்திய படையெடுப்புகளையும் கோயில் ஒழுகு குறிப்பிடுகிறது. கýங்கநாடு ‘ஒட்டிய தேச’மென்றும் கýங்கர்கள் ‘ஒட்டியர்களென்றும் கோயிலொழுகில் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். இவர்களது படையெடுப்பு ‘ஒட்டர் கலபை’ (கலகம்) என்று திரு அரங்கநாதர் கோவில் கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளது. ஒட்டர்கள் படையெடுப்பின்போது அழகிய மணவாளப் பெருமாளின் உலோகப் படிமத்தைத் திருவரங்கத்திýருந்து மதுரை அருகிலுள்ள அழகர் கோவிலுக்குக் கொண்டுவந்து பாதுகாத்துள்ளனர். ஓராண்டு கழித்து அதை மீண்டும் திருவரங்கத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். (கோயிலொழுகு வைஷ்ணவ ஸ்ரீ பதிப்பு, 2005; 245-246). எனவே இஸ்லாமியர் படையெடுப்பின்போது மட்டுமின்றி இந்துக்களான ஒட்டர் படையெடுப்பின்போதும் ‘திருவரங்கன் உலா’ நிகழ்ந்துள்ளது. ஒட்டர்கள் திரு அரங்கநாதர் கோவிலைத் தம் வசத்தில் வைத்திருந்தபோது அவர்களுக்கு உறுதுணையாக நின்றவர்கள் திருவரங்கத்து வைணவப் பிராமணர்கள்தான். ‘ஒட்டுக்காசு’ என்னும் வரியை ஒட்டரோடு கூடிநின்று இவர்கள் வசூýத்ததாக 28.03.1225ஆம் நாளிட்ட மாறவர்மன் முதலாம் சுந்தர பாண்டியனது கல்வெட்டு குறிப்பிடுகிறது (மேலது: 256-257). இச்செயலை ‘ரங்கத் துரோகிகளாய்’ என்று கோயிலொழுகு குறிப்பிடுகிறது (மேலது: 244) கோயிலொழுகு குறிப்பிடும் ரங்கத் துரோகிகள் இஸ்லாமியர் அல்லர். திருமண் தரித்த வைணவப் பிராமணர்களே. எனவேதான் ‘பத்து கொத்து’ என்னும் வரிசையில் அடங்கும் வைணவப் பிராமணர்களை நீக்கிவிட்டு ஆண்டுதோறும் கோவில் நிருவாகி ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையைச் சுந்தர பாண்டியன் உருவாக்கியுள்ளான் (மேற்கூறிய கல்வெட்டு). கி.பி. 1447ஆம் ஆண்டில் ஒரிசா நாட்டு இளவரசனாகிய குமார றம்பிரா என்பவனது தமிழ்நாட்டுப் படையெடுப்பு நிகழ்ந்தது. இப்படையெடுப்பு குறித்து வைஷ்ணவ ஸ்ரீ தமது கோயிலொழுகு பதிப்பில் (பக். 260) பின்வருமாறு எழுதியுள்ளார்.

கோயில்களில் உள்ள ஆபரணங்களையும் விக்ரகங்களையும் அபகரித்தான். இந்துக் கோயில்களை இடித்துத் தள்ளினான். இவனுடைய செயல் முகம்மது கஜியினுடைய செயலைவிட மோசமானதாக வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. ஒரு இந்து மன்னனே இந்துக் கோயில்களை இடித்த இந்தச் சம்பவம் கல்வெட்டுகளில் ‘ஒட்டர்கள் கலபை’ என்று வர்ணிக்கப்படுகிறது.
கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வைத்தியநாத காýங்கராயன் என்ற கோனேரி ராயன் வட தமிழகத்தின் மன்னனாக ஆட்சி புரிந்துவந்தான். சைவனான இவனால் திரு அரங்கநாதர் கோவிலுக்கு ஏற்பட்ட இடையூறுகளைக் கோயிலொழுகு விரிவாகக் குறிப்பிடுகிறது (மேலது: 586-587). அதைத் தற்கால நடையில் வைஷ்ணவ ஸ்ரீ கூறுவது வருமாறு:

கோனேரி ராஜா திருவானைக்காவýல் உள்ள சிலருடன் நட்புக் கொண்டு அவர்களைத் தங்களுடைய விருப்பப்படி வரி வசூýத்துக்கொள்ளவும், திருவானைக்காவினுடைய எல்லையாகத் திருமதில்கள் கட்டிக்கொள்ளவும் உதவிசெய்தார்.

ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைக் கோனேரி ராஜா தனக்கு வேண்டியவர்களான கோட்டை சாமந்தனார் மற்றும் சென்றப்ப நாயக்கர் ஆகியோருக்குக் குத்தகைக்குவிட்டார். ‘புர வரி’ ‘காணிக்கை வரி’ ‘பட்டு வரி’ ‘பரிவட்ட வரி’ போன்ற வரிகளை விதித்து ஸ்ரீரங்கம் கோயில் ஸ்ரீபண்டாரத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த உயர்ந்த திருவாபரணங்களையும் பொற்காசுகளையும் கவர்ந்து சென்றான்.

இதை எதிர்க்கும் வகையில் அழகிய மணவாளதாசர் என்ற பெரியாழ்வாரும் இரண்டு ஜீயர்களும் திருவரங்கத்தின் வெள்ளைக் கோபுரத்தின் மீதேறிக் கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டனர். அப்பாவு அய்யங்கார் என்பவரும் தெற்கு இராஜகோபுரத்தின் மீதேறிக் கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இவர்களுள் முதல் மூவருடைய உருவச் சிலைகளை வெள்ளைக் கோபுரத்தின் நடைபாதையிலும் தெற்கு கோபுர வாயிýன் கீழ்ப்புற நிலையில் அப்பாவு அய்யங்காரின் உருவச் சிலையையும், கந்தாடை இராமானுச முனிவர் என்பவர் செதுக்கிவைத்தார். இந் நிகழ்வு குறித்து இரு கல்வெட்டுகளும் உள்ளன.

இந்நால்வரும் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு அரங்கநாதர் கோவில் நிர்வாகத்தில் கோனேரிராயனின் தலையீடு இருந்துள்ளது. இது அவனது மட்டுமீறிய சைவப் பற்றினால் விளைந்ததல்ல என்றும் சைவம், வைணவம் இரண்டையுமே போற்றியவன் என்றும் அவனது வரலாற்றை எழுதியுள்ள குடவாயில் பாலசுப்பிரமணியன் கருதுகிறார் (கோனேரி ராயன், பக்: 37). வைணவக் கோயில்களுக்கு அவன் செய்த திருப்பணிகளையும் வழங்கிய கொடைகளையும் குறிப்பிடும் கல்வெட்டுச் சான்றுகளை எடுத்துக்காட்டுகிறார். ‘திருவரங்கத்தில் நிகழ்ந்த இந் நிகழ்ச்சிகள் அரசியல் பின்னணியில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளே அன்றி வைணவ விரோதத்தால் அல்ல என்பது உறுதியாகின்றது’ என்ற முடிவுக்குவருகிறார் (மேலது, பக்: 35). இதே கருத்தை வைஷ்ணவ ஸ்ரீயும் ஏற்றுக்கொண்டுள்ளார் (கோயிலொழுகு, பக்: 607).

அரசியல் காரணங்களுக்காகவே அரங்கநாதர் கோயில் சொத்துகளின் உரிமையிலும் வருவாயிலும் கோனேரிராயன் தலையிட்டுள்ளான் என்பதை இரு அறிஞர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். மன்னர்கள் ஆட்சியில், படையெடுப்பு என்பது பெரும்பாலும் கொள்கையை நோக்கமாகக் கொண்டதே. இதில் இந்து மன்னர்கள், இஸ்லாமிய மன்னர்கள் என்ற வேறுபாடில்லை என்பதே உண்மை. தம் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் பழி தீர்க்கவும் தமது உறவினர், தாம் பின்பற்றும் சமயம் என்ற உறவுகளையும் எல்லைகளையும் பொருட்படுத்தாது மீறி நடப்பார்கள். ஒட்டர்களின் படையெடுப்பும் கோனேரிராயனின் செயல்பாடும் இத்தகையதுதான். இவ்வுண்மைகளை உணராது, வரலாற்றில் இஸ்லாமியர் மட்டுமே கொடுங்கோலர் என்று சித்தரித்து, ‘வந்தார்கள்-வென்றார்கள்’ என்னும் தலைப்பில் மதன் எழுதிய நூலுக்கு முன்னுரை வழங்கிப் பாராட்டியுள்ள சுஜாதாவுக்கு இவ்வுண்மைகள் புரியாததில் வியப்பில்லை.

கூரநாராயண ஜீயர் என்பவர் வைணவ விரோதிகளான திருவானைக்கா சைவர்களை ஒழித்தது குறித்துக் ‘கோயிலொழுகு’ (பக்: 433-434) குறிப்பிடும் செய்தி வருமாறு:

‘அந்த ஜீயரும் சைவர்களோடு கூடியிருந்து அவர்களுக்கு நன்மை பண்ணுகிறோம் என்று சொல்ý ஒரு மஹேஸ்வர பூஜைக்கு ஏற்பாடு செய்தார். கிழக்கே காட்டழகிய சிங்கர் கோயிலுக்கு பின்வழியில் பெரிதாகக் கொட்டகை அமைத்து அதிலே ஒரு பாகசாலையை (சமையல் செய்யுமிடம்) நிர்மாணித்தார். அந்த இடத்தில் ஒரு பெரிய கொப்பரையில் (விளிம்பு கொண்ட அகலமான வாயை உடைய ஒரு பாத்திரம்) நன்றாக நெய்யைக் காய்ச்சி வைத்தார். சைவர்கள் அனைவரையும் சாப்பிட அழைத்து அவர்கள் பந்தியிலே உட்கார்ந் திருக்கும்போது தம்முடைய மார்பிலே நரஸிம்ஹ யந்திரத்தை கட்டிக்கொண்டு காய்கிற நெய்க் கொப்பரையிலே அவர் குதிக்க அந்தக் கொட்டகையில் இருந்த சைவர்கள் அனைவரும் தீய்ந்து சாம்பலாகிப்போனார்கள்.

இது எத்தகைய அறம் என்பதை சுஜாதா விளக்கினால் நல்லது. இப்படி சைவர்களைக் கொன்றழித்தவர்கள் இஸ்லாமியர் அல்லர், வைணவர்களே.

நஞ்சூட்டிய உணவை வழங்கியும் நஞ்சு கலந்த தீர்த்தத்தைக் கொடுத்தும் ‘யதிராஜர்’ உடையவர் என்று வைணவர்கள் போற்றும் இராமானுஜரைக் கொல்ல முயன்றவர்கள் வைணவப் பிராமணர்களே தவிர இஸ்லாமியர் அல்லர்.

‘சிவனுக்கு மேற்பட்ட தெய்வமில்லை’ என்று எழுதப்பட்ட ஓலையில் கையெழுத்திடும்படி இராமானுஜரை வற்புறுத்தியவன் சைவ வெறி கொண்ட சோழ மன்னன்தான். அவனுக்குப் பயந்து காவி உடைகளைந்து வெள்ளுடையைத் தரித்து திருவரங்கத்திýருந்து இராமானுஜர் ஓடிப்போனதும் சுஜாதா அறியாத செய்தியல்ல. இராமானுஜரின் சீடர்களான கூரத்தாழ்வாரும் பெரியநம்பியும் தம் பார்வையை இழக்கக் காரணமாக இருந்தவனும் மேற்கூறிய சோழ மன்னன்தான். இராமானுஜரோடு தொடர்புடையவர்கள் ரங்கநாதர் கோயிலுக்குள் வரக் கூடாது என்று அர்ச்சகர்கள் முடிவெடுத்ததன் விளைவாகக் கூரத்தாழ்வாரை ரங்கநாதர் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. அந்த அளவு அர்ச்சகர்களுக்கு அச்சம் ஏறப்டுத்தியவர்கள் சோழ மன்னர்களே தவிர இஸ்லாமிய மன்னர்களல்ல.

திருவரங்கத்தில் நடைபெறும் அரையர் சேவையில் ஒடுக்கப்பட்டோரை இணைக்கும் அடையாளமாக, பள்ளும் பறையும் இசையுடன் பாடும் வழக்கம் ஏன் நிறுத்தப்பட்டது என்பதை சுஜாதா ஆராய்வாரா?

கோனேரி ராயன் செயலை எதிர்த்துக் கோபுரத்திýருந்து குதித்து உயிர் துறந்த அப்பாவு அய்யங்காரின் சிலைக்குச் சில மரியாதைகளையும் நைவேத்தியங்களையும் கந்தாடை இராமானுச முனிவர் ஏற்படுத்தினார். இதை அப்பாவு அய்யங்காரின் சிலைக்குமேல் உள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது. இன்று நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றனவா என்றால் இல்லை. அதை நிறுத்தியவர்கள் வைணவர்களா இஸ்லாமியர்களா?

கோம்பை எஸ். அன்வர் கடிதத்தில் குறிப்பிடப்படும் ‘பாஞ்சஜன்யா’ குறித்துச் சில செய்திகள்: இப்பெயரில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பத்திரிகை இந்தியில் வெளிவருகிறது. இதே பெயரில் வைஷ்ணவ ஸ்ரீ ஆ. கிருஷ்ணமாசார்யா நடத்தும் தமிழ் மாத இதழ் திருவரங்கத்திýருந்து வெளிவருகிறது. இது வைணவ சனாதனத்தைப் பரப்புவதையும் வைணவம் தொடர்பான தத்துவம், இலக்கியம் வரலாறு போன்ற செய்திகளை வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக்கொண்டது.

ஆ. சிவசுப்பிரமணியன்
நாகர்கோவில்

7 thoughts on “13,000 வைணவர்கள் கொல்லப்பட்டார்களா?

 1. னல்ல ஆழமான அலசல்.

  இதெல்லாம் மனதில் தங்களைத் தவிர மற்றவரெல்லாம் தாழ்ந்தவர் என்றும், தாங்கள் கூறுவதும் எழுதுவதும் மட்டுமே சரி என்றும் அலையும் இந்த மேல் ஜாதி வர்க்கத்திற்கு எங்கே புரியப் போகிறது.

  வேண்டுமெனில் போகிற போக்கில் இவ்வாறு எழுதி வைத்த வரலாற்றாசிரியர்கள் பெட்ரோ டாலருக்கு விலை போனவர்கள்(அன்று பெட்ரோல் கண்டு பிடிக்காததெல்லாம் அவர்களுக்கு அவசியமில்லை) என்றோ, அல்லது அப்படி சம்பவங்கள் நடக்கவே இல்லை என்றோ வாய் கூசாமல் பொய்களை வாரியிறைக்கவும் தயங்க மாட்டார்கள்.

  அவர்களுக்கு எப்படியாவது அவர்கள் நோக்கங்கள் நிறைவேற வேண்டும். அவ்வளவே!

  னம்மூர் காரருக்கு வந்தனங்கள்.

 2. அது காலச்சுவட்டில் வந்தது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கிரெடிட் போடாதாதற்கு வருந்துகிறேன்.

 3. அரிய தகவல்களால் அலசப்பட்ட பதிவு.

  வரலாற்றில் எங்கெல்லாம் இந்துக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அதற்கெல்லாம் இஸ்லாமியர்களே காரணம் என்ற மதத்துவேசத்தை விதைக்க, சுஜாதா போன்றவர்களும் வரலாற்றை விற்று முனைந்திருப்பது வருத்தமளிக்கிறது.

  மறுபதிவிட்டமைக்கு நன்றி மோகன்தாஸ்

 4. செ.திவான் என்கிற வரலாற்றாய்வாளர் இது குறித்து விளக்கமாக எழுதிகிறார்.

 5. பின்னூட்டமிட்டமைக்கு நன்றி, ஆதவன், நல்லடியார், இறைநேசன்.

 6. வணக்கம் திரு மோகன்தாஸ்,

  அரிய தகவல்களை அளித்துள்ளீர்கள். இணையத்திற்கு நான் புதியவன். இதுவரை கேள்விப்படாத இவற்றை எமக்கு அறியத் தந்தமைக்கு நன்றி. சுஜாதா போன்ற நாடறிந்த எழுத்தாளர்கள் பொறுப்பின்றிப் பிழையான தகவல்களை அளிப்பது குறித்து வேதனை தான் விஞ்சுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s