சாரு நிவேதிதா – ஒரு மழை இரவில் நடந்த சந்திப்பு…

கழுத்தில் ஆறேழு தங்கச் சங்கிலிகளைப் போட்டுவிட்டால், தமிழ் சினிமாவில் வில்லனாக்கிவிடலாம் என்பது போன்ற தோற்றம். ‘ஜீரோ டிகிரி’, ‘கோணல் பக்கங்கள்’ என காமமும் வியர்வையும் கலந்து மணக்கும் சாருவின் எழுத்துக்கள், சமயத்தில் வியப்பளிக்கும்… சமயத்தில் வெறுப்படிக்கும். அப்படி ஒரு ரகளையான பாணியைத் தனது பிரத்யேக மொழியாக்கி வளைய வரும் சாரு, இலக்கிய எல்லைகளைத் தாண்டியும் பிரபலம். ஒரு மழை இரவில் நடந்தது இந்தச் சந்திப்பு…

‘‘தமிழ் இலக்கியச் சூழல் இப்போ மோசமா இருக்கு. பாரதி மாதிரி, ப.சிங்காரம் மாதிரி தீவிரமாகவும் உலகத் தரத்திலும் இயங்கக்கூடிய படைப்பாளிகள் ரொம் பவே குறைந்து விட்ட னர். கவிதைகளில் தருமு.சிவராமுக்குப் பிறகு அவ்வளவு உக்கிரமாக, பித்த நிலையில் எழுத ஆட்கள் இல்லை. உரை நடையில் அசோகமித் திரன் அளவுக்கு எழுதும் படைப்பாளி யைத் தேட வேண்டி இருக்கிறது. ஒரு சில பேர் இருந்தா லும், அவர்களும் பரவலாக அறியப் படாமல் வட்டத் துக்குள்தான் வாழ் கிறார்கள்.

பெரு நாட்டு அதிபராக இருந்தவர் லோசா… தன் ஆட்சியில் ஆயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொன்று குவிக்க உத்தரவிட்டவர். ஆனால், அவர் பிரமாதமான எழுத்தாளர். ‘தி ரியல் ஸ்டோரி ஆஃப் அலெக்சான்ட்ரா மாய்தா’ என்கிற அவருடைய நாவல், ஒரு புரட்சிக்காரனைப் பற்றிய ஆக அற்புதமான படைப்பு. ஓர் எழுத்தாளராக அவரை நான் கொண்டாடுவேன். அப்படிக்கூட இங்கே பலரைக் கொண்டாட முடியாதே!

லக்ஷ்மி மணிவண்ணன், அழகிய பெரியவன், என்.டி.ராஜ்குமார் எனச் சிலர் சொல்கிற மாதிரி எழுதுகிறார்கள். மாலதி மைத்ரி எழுத்துக்களில் ஒரு தெறிப்பு இருக்கு. ஆனாலும், உலகத் தரத்தில் எழுத யாரும் இல்லை. என் எழுத்துக்கள் உலகத் தரத்துக்கானவை. அதற்கான வாசிப்பும் உழைப்பும் என்னிடம் இருக்கிறது. மலையாளத்திலும் வெளிநாடுகளிலும் என்னைக் கொண்டாடுகிறார்கள். அங்கே எல்லாம், நம்ம ஊரில் ஒரு நடிகனுக்குக் கிடைக்கிற மரியாதையும் வரவேற்பும் எனக்குக் கிடைக்கின்றன. ஆனால் இங்கே என்னை எவ்வளவு பேருக்குத் தெரியும்? எழுத்தாளனை மதிக்காத, கொண்டாடாத ஒரு சமூகம் எப்படி உருப்படும்..?’’

‘‘சிறு பத்திரிகைச் சூழல் எப்படி இருக்கிறது?’’

‘‘உண்மையில் இங்கே உள்ள பல எழுத்தாளர்கள், சாமான்யர்களைவிட கட்டுப் பெட்டிகளாக பத்தாம்பசலிகளாக இருக்கிறார்கள். ஜாதிய மனோபாவம் சிறு பத்திரிகை உலகிலும் பரவிக் கிடக்கிறது.

விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்ளாமல் வக்கீல் நோட்டீஸி லிருந்து அடியாள் அனுப்புவது வரையான ஆபத்துக்கள் நடக்கின்றன. உச்சகட்டமாக கும்பலாக வந்து நேரடியாகவே தாக்குகிறார்கள். உனக்கும் எனக்கும் நடுவிலேயே கருத்துச் சுதந்திரம் இல்லையென்றால், சமூகத்தில் அதை எப்படி எதிர்பார்க்க முடியும்?

அப்புறம், கோஷ்டிப் பூசல்… ஆளாளுக்கு ஒரு கோஷ்டி சேர்த்துக்கொண்டு பண்ணுகிற கோமாளித் தனங்கள். என்னை ஒரு மலையாள பத்திரிகையில் பேட்டி எடுக்க இருந்தால், ‘சாருவா… அவனெல்லாம் ஒரு எழுத்தாளனே இல்லை. குப்பை!’ என்று தமிழ்நாட்டிலிருந்து தகவல் போகிறது. இந்த மாதிரியான கோஷ்டிப் பூசல்களால்தான், தகுதியானவர்களுக்கு வர வேண்டிய விருதுகளும் கிடைக்காமல் போகின்றன. ‘இவருக்கு விருது கொடுத்தால் சண்டை வரும். அவருக்குக் கொடுத்தால் வம்பு’ என்று கொடுக்கப் பயப்படுகிறார்கள். இதனால் நம் படைப்புகள் வேறு மொழிகளுக்குப் போய்ச் சேர வாய்ப்பு இல்லாமல் போகிறது. அரசியலைக் குறைத்து அவரவர் படைப்பில் கவனம் செலுத்தினால், தமிழ் இலக்கியத்துக்கு நல்லது நடக்கும்.

இன்னொரு பக்கம் ஆரோக்கியமாவும் இருக்கு. பல்கலைக்கழகங்களோ, அரசியல் இயக்கங்களோ, அரசாங்கமோ, சினிமாவோ, வெகு ஜனப் பத்திரிகைகளோ தமிழை முன்னெடுத்துச் செல்ல முடியாது. சிற்றிதழ்களாலும் சிற்றிதழ் எழுத்தாளர்களாலும்தான் அது நடக்கிறது… தொடர்ந்து நடக்கும்!’’

‘‘பெண் படைப்பாளிகளின் படைப்புகளில் பாலுணர்வு தூக்க லாக இருக்கின்றன என்பது மாதிரி யான சர்ச்சைகள், அவர்களின் படைப் புச் சுதந்திரத்தை பாதிக்கும்தானே?’’

‘‘முதலில் பெண் படைப்பாளிகளின் எழுத்தில் ஆபாசம் அதிகமாக இருப்பதாகச் சொல்வது யார் தெரியுமா? நம் திரைப்படப் பாடலாசிரியர்கள். இந்த மாதிரி உலக காமெடி எல்லாம் இங்கேதான் நடக்கும். அதை விட்டுத் தள்ளுங்க. உடலைப் பற்றி, காமத்தைப் பற்றி இன்னும் ஆழமாக வலிமையாக எழுதப் பெண் படைப்பாளிகள் முன்வர வில்லை என்பதுதான் என் ஆதங்கம்.

நோபல் பரிசு வாங்கின ஆஸ்திரியா நாட்டு பெண் எழுத்தாளர் எல்ஃப்ரிட் ஜெலினெக் எழுதிய ‘பியானோ டீச்சர்’ என்கிற நாவலைப் படியுங்கள். முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் உடல் வேட்கையை, காமத்தை அடிச்சு நகர்த்தி இருப்பார். நாவல் வந்ததும் ‘அது என் சொந்த அனுபவங்கள்தான்’ என்று துணிச்சலாகச் சொன்னார். அந்த உண்மையில், உக்கிரத்தில் ஒரு சதவிகிதம்கூட இங்கே இல்லை. உடல் எவ்வளவு மகத்தான விஷயம்… அதைக் கொண்டாட வேண்டாமா?

தமிழில் இப்போது பாலுணர்வு பற்றி எழுதுபவர்களில் முக்கியமான ஆள் நான்தான். என் எழுத்துக்களைப் பற்றி இதுவரை எந்த பெண் படைப்பாளியும் கருத்து சொன்னதாகவோ, விவாதித்ததாகவோ விமரிசனம் பண்ணியதாகவோ எனக்குத் தெரியவில்லை. என் எழுத்தை அவர்கள் வாசித்திருப்பார்களா என்பதுகூடத் தெரியவில்லை. அந்த அளவுக்கு வாசிப்பு கிடையாது. இன்னும் கட்டுமானங்களை, கட்டுப்பாடுகளை முழுதாக உடைக்க முன்வராவிட்டால், அப்புறம் எப்படி ஜெலினெக் மாதிரியெல்லாம் எழுத முடியும்?’’

‘‘சரி, குஷ்பு பேசிய கற்பு பிரச்னை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?’’

‘‘கற்பாவது மண்ணாங்கட்டியாவது! இதை பெரியார் எப்பவோ சொல்லிட்டார். அந்தப் பெரியார் வழியில் வந்த தம்பிகள்தான் இன்னிக்கு தாம்தூம்னு குதிக்கிறாங்க. இவங்க சொல்ற கற்பு என்ன? ராமன் _ சீதா மாதிரி ஒருவனுக்கு ஒருத்தி. ஆனால், நம் தலைவர்கள் எத்தனை பேர் அப்படி இருக்காங்க?

நீங்க ஒரே ஒரு நாள் ஃபேமிலி கோர்ட்டுக்கு போய் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தீங்கன்னா தெரியும்… நம்ம தேசம் எப்படி இருக்குன்னு? விவாகரத்து கேட்டு வருகிற பல தம்பதி களுக்கு இருக்கிற பிரச்னையே ‘என் மனைவிக்கு இன்னொருத்தனோட தொடர்பு இருக்கு, கணவனுக்கு இன்னொருத்தியுடன் காதல் இருக்கு’ என்பது மாதிரிதான். நீங்க காட்டுக் கத்தா கத்துகிற கற்பு எங்கே போச்சு? அப்புறம் ப்ரீ&மேரிடல் செக்ஸ். கல்யாணத்துக்கு முன்னாடி யார் யாருடன் எப்படி இருக்கிறார்கள் என்பதெல்லாம் அவங்கவங்க விருப்பம் சார்ந்த விஷயம். யாரும் யாரையும் ஏமாற்றக் கூடாது; ஏமாந்து விடக் கூடாது. உறவுகளில் பாதுகாப்பாக இருக் கணும். அவ்வளவுதான் விஷயம்! அது பற்றிய பாலியல் கல்வியைக் கற்றுக் கொடுப்பது பற்றி யாரும் பதறக் காணோம். போராடக் காணோம். சும்மா கற்பு, ஒழுக்கம்னு கத்திட்டே இருக்கிற நம் நாட்டில்தான் கற்பழிப்புச் சம்பவங்கள் நிறைய நடக்கிறது. செக்ஸின் தலைமையிடம்னு சொல்லப்படுகிற தாய் லாந்தில் கற்பழிப்பு என்பதே இல்லை. அப்ப என்ன கற்பு… கருமம்னுக்கிட்டு?

திருமாவளவன் ‘டெக்கான் கிரானிகல்’ இங்கிலீஷ் பேப்பரில் கற்பைப் பற்றி முற்போக்காகப் பேட்டி தருகிறார். இன்னொரு பக்கம் அவர் கட்சிக்காரர்கள் கையில் விளக்கு மாறுடன் கழுதைகளுடன், குஷ்பு வீட்டின் முன்னால் போராட்டம் நடத்துகிறார்கள். இதுதான் இங்கே இவங்க அரசியல்.

கற்பைப் பற்றி குஷ்பு தவறாகப் பேசிட்டாங்களாம்… ஆளாளுக்கு செருப்பு தூக்குவது, வழக்கு தொடுப்பது, கொடும்பாவி கொளுத்துவது என காமெடி நாடகம் நடத்துகிறார்கள். குஷ்பு அப்படி அந்தப் பத்திரிகையில் என்ன பேசினார் என்பதே பலருக்கு சரியா தெரியாது.

‘உங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அந்தக் கருத்தை நீங்கள் சொல்கிற உரிமைக்காக என் உயிரையும் கொடுப்பேன்’னு ரூஸோ சொன்னது எவ்வளவு மகத்தான கருத்து. ஆனால் இங்கே, நம் அரசியல் தலைவர்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து சமூகத்தையே ரௌடிக் கூட்டமாக மாத்தி வெச்சிருக்காங்க. கொடும் பாவியைக் கொளுத்துகிறவன் நாளைக்கு உயிரோடவும் கொளுத்து வான்… பஸ்ல பிள்ளைங்களை உயிரோட எரிச்சாங்களே அப்படி நடக்கும்!

அதுக்காக நான் குஷ்புவை ஆதரிப்பதாக அர்த்தமில்லை. அது தனிக் கச்சேரி. அந்தப் பேட்டியில் குஷ்பு பேசின அத்தனையும் உளறல். குஷ்பு மாதிரி நடிகைகள் எல்லாம் தொழிலதிபர்கள். லட்ச லட்சமா பணம் பார்க்கிறவர்கள். அவங்களுக்கு மக்களைப் பற்றி, சமூகத்தைப் பற்றியெல்லாம் கவலையே கிடையாது. இப்பவும் சாந்தி தியேட்டர் எதிரே தன் பிள்ளைக்குச் சாப்பாடு வாங்குகிற காசுக்காக உடம்பை வித்து வாழ்கிறார்களே.. அவங்களுக்காகப் போராட நான் ரெடி. குஷ்புவுக்காக நான் எதுக்குப் போராடணும்?

அது இருக்கட்டும், இது மாதிரியான பிரச்னைகளுக்கு ஆரம்பமாக இருந்த தங்கர்பச்சானின் பேச்சு இருக்கே… அதையும் கண்டிக்கணும். அதுவும், ‘கேவலம் அறுநூறு ரூபாய் பாக்கிக்காக ஒரு சிகை அலங்கார நிபுணரெல்லாம் ஷ¨ட்டிங்கை நிறுத்துறாங்க’னு ஒரு தொழிலாளியையும் அவங்க வாங்குகிற கூலியையும் கேவலப்படுத்திப் பேசினார் பாருங்க… அதுக்குத்தான் போராடணும். தங்கர்பச்சான் _ குஷ்பு பிரச்னைகள் தமிழ்நாட்டின் பிரச்னையா என்ன… இது சும்மா, பேயும் பிசாசும் அடிச்சுக்குது!’’

‘‘கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாதுன்னு ஆரம்பிச்சு ஓட்டல் களில் நள்ளிரவு நடனம் ஆடக் கூடாது என்பது வரை ‘கலா சாரக் காவல்’ எண்ணத்தோடு அரசியல் கட்சிகளும், கல்வித் துறையும், காவல் துறையும் எடுத்துவரும் நடவடிக்கைகளை வரவேற்கிறீர்களா?’’

‘‘காட்டுமிராண்டித்தனம்! நம்ம தேசத்தில்தாங்க நடக்குது இவ்வளவு கூத்தும்! இங்கே பொது இடங்களில் சிகரெட் விற்கலாம். ஆனால், புகைக்கக் கூடாது. 11 மணிக்கு ஓட்டல் பார்களை மூடிவிட வேண்டும். ஆனால், அரசாங்கத்தின் டாஸ்மாக் மட்டும் 12 மணி வரை விற்கலாம். சிகரெட், சாராயத்தை விற்க, அரசாங்கமே அனுமதிக்கும். ஆனால், சினிமாவில் மட்டும் இவை இரண்டுமே காட்டக் கூடாது.

அதே போல, கல்லூரிகளிலும், பகலைக்கழகங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் என்ற பெயரில் நடப்பதெல்லாம் கோமாளிக் கூத்து. ஆட்சி அதிகாரத்தில் யார் அமர வேண்டும் என்று தீர்மானிக்கிற வாக்கு அளிக்கும் வயதும் உரிமையும் உள்ள மாணவர் களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை இவர்களுக்கு வழங்கியது யார்?

கல்விக்கூடங்கள் என்பது ஒரு சுதந்திர வெளி. அங்கே இருந்துதான் சிறந்த விஞ்ஞானிகளும் கல்வியாளர்களும் தலைவர் களும் உருவாகி வருகிறார்கள். அவர்களை அடிமைக் கூட்டமாக ஆக்க ஆசைப்பட்டால், இனி வரும் காலங்களில் ஒரு நல்ல மாணவனையோ, மனிதனையோ சமூகத்துக்கு உருவாக்கித் தர முடியாது.

அப்புறம், இந்த ஹோட்டல் விவகாரம். ரோட்ல டான்ஸ் ஆடினா பிடிங்க… அது த்ரிஷாவா இருந்தா மன்னிச்சு விட்ருவீங்க. ஆனா, நட்சத்திர ஹோட்டலுக்குள் நாலு சுவத்துக்குள் நடனம் ஆடினால் தவறாம். சொல்லப் போனால், அது ஒருவரது பிரைவஸிக்குள் அத்துமீறல் என்று காவல்துறை மீதும் மீடியா மீதும் மான நஷ்ட வழக்கே போடலாம்.

ஆனால், அதே நட்சத்திர ஓட்டல் களுக்குள் வேறு ஒரு அநியாயம் நடக்கிறது. சமீபத்தில், நானும் என் நண்பர் ஒருவரும் அப்படி ஒரு ஓட்டலுக் குக் குடிக்கப் போயிருந்தோம். நண்பர், கிராமத்தைச் சேர்ந்தவர். கறுப்பாக இருப்பார். அதனால் அவரை உள்ளே அனுமதிக்க வில்லை. என்ன அநி யாயம்! அவரும் காசு தானே கொடுக்கிறார்! தீண்டாமை இன்னும் ஒழியலை. எங்கேயும் ஒழியலை. அது வேற வேற முகம் எடுத்துட்டே இருக்கு… அதை எதிர்த்துத்தான் நாம் போராடணும்!’’

‘‘விஜயகாந்த் அரசியலுக்கு வந்திருக்காரே…’’

‘‘செம காமெடி! ‘ஏன் அரசியலுக்கு வந்தீங்க?’னு ஒரு கேள்விக்கு, அவர் சொல்ற பதில், ‘நான் சின்ன வயசிலேருந்தே சமூக சேவை செஞ்சிருக்கேன். இப்பவும் தையல் மெஷினெல்லாம் குடுக்கிறேன்’ என்கிறார். நான்கூடத்தான் பீச்சுக்குப் போறேன்… பிச்சை போடறேன். அதுக்காக அரசியலுக்கு வந்திடலாமா?

சினிமாவால் சமூகத்தைக் கெடுத்தது போதாதுன்னு இப்போ அரசியலுக்கும் வர்றாங்க. ரஜினிக்கு ஆன்மிகம் மாதிரி, விஜயகாந்துக்கு அரசியல். பல கோடிகளைப் பத்திரமா பேங்க்ல டெபாஸிட் பண்ணிட்டு, இமயமலைக்கு ட்ரிப் அடிக்கிறது எவ்வளவு சூப்பர் ஆன்மிகம்!

துறவின்னா யாரு… காமம், போகம், யோகம் எல்லாத்தையும் தாண்டி அதிகாரத்தையும் துறக்கணும். ஆனால் துறவி என்கிற பெயரில், ஜனாதிபதியையும் நீதிபதிகளையும் வந்து வாசலில் நின்னு பார்க்க வெச்சு, அதிகாரத்தை நிறுவுகிறவர்கள்தானே இங்கே துறவி! அரசியல், ஆன்மிகம் இலக்கியம்னு அத்தனையும் கெட்டுக் கிடக்கிற சமூகத்தில், விஜயகாந்த் அரசியலுக்கு வருவதா ஆச்சரியம்?’’

‘‘பிரேமானந்தாவில் இருந்து ஜெயலட்சுமி வரைக்கும் தமிழகத்தின் திடீர் பிரபலங்கள் அத்தனை பேரும் செக்ஸ் குற்றச்சாட்டுக்களிலேயே சிக்குவது தொடர்கதையாக இருக்கிறதே…’’

‘‘அக்பர் வரலாறு… அலெக்ஸாண்டர் வரலாற்றைவிட தமிழகத்தின் சாமியார்கள், ‘பெரிய மனிதர்கள்’, அழகிகள் வரலாறு நமக்குத் தெளிவாகத் தெரியும். புண்ணியம் & மீடியாவுக்கு!
மனைவியுடன்…

நம் சமூகத்தில் நடக்கிற பெரும்பாலான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் செக்ஸ்தான். செக்ஸ்னா அசிங்கம் என்று சொல்லிச் சொல்லி வளர்க்கிற சமூகத்தில், செக்ஸ் குற்றங்கள்தான் அதிகமாக நடக்கும். காலத்துக்கும் தேவைகளையும் ஆசைகளையும் அழுத்தி அழுத்தி உள்ளேயே பூட்டிட்டு அலைந்தால், பசி அதிகமாகும். வக்கிரம்தான் தலைதூக்கும். பசி அதிகமாகி விட்டால், பிடுங்கிச் சாப்பிடுகிற மாதிரி எங்கே யாவது வாய்ப்பு கிடைக்கிறபோது, எதற்கும் தயாராகிவிடுகிறார்கள்.

அண்ணாச்சி முதல் ஜெயலட்சுமி வரை நடக்கும் அத்தனை விவகாரமுமே நம் சமூகத்தின் சாம்பிள்கள் தான். ‘என்னை எவ்வளவு கஷ்டப்படுத்தறே… உன்னை கால்ல போட்டு மிதிச்சுக் காட்டறேன் பார்’னு ஒரு பெண் கிளம்பினால் என்னவாகும் என்பதற்கு ஜீவஜோதி முதல் ஜெயலட்சுமிவரை உதாரணங்கள் இங்கே அதிகம்!’’

‘‘உங்களுக்கு ஈழத் தமிழர்களின் நட்பு அதிகம்… அவர்களின் வாழ்வு எப்படி இருக்கிறது?’’

‘‘இணைய தளத்தில் என் கட்டுரைகளைப் படித்து, நண்பர்கள் ஆனவர்கள் நிறையப் பேர். அவர்களின் வாழ்வு துயரமானது. நிறையச் சம்பாதிக்கிறார்கள். வசதியாகவும் சிலர் வாழ்கிறார்கள். ஆனால், தங்கள் தாய் மண்ணில் போய் ஒரு பிடி சோறு சாப்பிட முடியலையே என்கிற துயரம் எப்பவும் அடிமனதில் அழுத்திட்டே இருக்கு. எனக்குச் சொந்த மண், மொழின்னெல்லாம் ஒண்ணும் கிடையாது. நிலப்பரப்பு எல்லாம் என்னோடதுதான்னு நினைப்பேன். ஆனால், சொந்த மண்ணே மறுக்கப்படுகிறபோது வருகிற சோகம் வேறு. அதை அனுதினமும் அவர்கள் அனுபவிக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், ஷோபா சக்தி மாதிரி உக்கிரமான படைப்பாளிகள் உருவாகி வருகிறார்கள். இங்கே தமிழ் தமிழ் என்று கத்திட்டு, படப் பெயரை மாற்றச் சொல்லி, டாடா சுமோக்களில் போய்ப் போராட்டம் நடத்துபவர்களை விட, அவர்கள் பல மடங்கு நம்பகமானவர்கள். அன்னிக்குப் பார்க்கிறேன்… கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் ‘அண்ணைத் தமிழ் வாழ்க!’னு மூணு சுழி ‘ண’ போட்டு எழுதி இருக்காங்க. இதுதான் இங்கே அரசியல்! இதுதான் நம்ம சமூகம்!

ஃப்ரான்ஸ்தான் என் கனவு தேசம். அங்கே ஒரே தெருவில் தேவாலயம், ஸ்கூல், செக்ஸ் ஷாப் எல்லாம் இருக்கு. ஆனால், எதுவும் எதுவாலும் டிஸ்டர்ப் ஆவதில்லை. அது மாதிரி ஒரு சூழல் வரும்போதுதான் இந்தியா உருப்படும்!’’

Credits : Anantha Vikatan

18 thoughts on “சாரு நிவேதிதா – ஒரு மழை இரவில் நடந்த சந்திப்பு…

 1. //நானும் என் நண்பர் ஒருவரும் அப்படி ஒரு ஓட்டலுக் குக் குடிக்கப் போயிருந்தோம். நண்பர், கிராமத்தைச் சேர்ந்தவர். கறுப்பாக இருப்பார். அதனால் அவரை உள்ளே அனுமதிக்க வில்லை. என்ன அநி யாயம்! அவரும் காசு தானே கொடுக்கிறார்! தீண்டாமை இன்னும் ஒழியலை. எங்கேயும் ஒழியலை. அது வேற வேற முகம் எடுத்துட்டே இருக்கு… அதை எதிர்த்துத்தான் நாம் போராடணும்!’’ //

  இது உண்மையென்றால் கண்டிக்கத்தக்கது வருந்த வைக்கிறது.
  ஏன் இதையெல்லாம் சாரு ரொம்ப சீரியசாக எடுத்துக்கமா இருக்கார். தினமலர் பத்திரரிக்கையில் கொஞசம் செல்வாக்கு உள்ளவராத்தான் தெரியிறார் சாரு . இப்படிக் கொடுமையெல்லம் அந்த பத்திரிக்கை மூலம் பொது உலகிற்கு கொண்டு வரலாமே?.

 2. /பெரு நாட்டு அதிபராக இருந்தவர் லோசா… /
  ?
  அதிபராக விரும்பிப் போட்டியிட்டுத் தோற்றவர்

 3. /‘உங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அந்தக் கருத்தை நீங்கள் சொல்கிற உரிமைக்காக என் உயிரையும் கொடுப்பேன்’னு ரூஸோ சொன்னது எவ்வளவு மகத்தான கருத்து./

  அதைச் சொன்னது, வோல்டயர் என்று ஞாபகம்

 4. குஷ்புவெல்லாம் கருத்து சொல்ல வந்துட்டான்னு கருத்து சொல்றதும் சாரு கருத்து சொல்ல வந்துட்டாரேன்னு கருத்து சொல்றதும் ஒண்தான்னு நான் கருதுறேன்! 🙂

  அது சரி மோகன்தாஸ்….விகடன்கிட்டேர்ந்து சுட்டு, சுட்டு போடறீங்களே! தாராள மனசுதான் ஸார்… உங்களுக்கு. பிரச்னை ஏதும் வராது இல்லே?!

 5. சாரு பத்தி சில நாள் முன்பு நண்பர் ஒருவர் திண்ணையில் எழுதியதை எத்தனை பேர் படிச்சீங்க?

 6. நன்றி கல்வெட்டு, பெயரிலி மற்றும் ஜெ ரஜினி ராம்கி.

  ராம்கி, பிரச்சனை வராதென்று எண்ணுகிறேன். தெரியவில்லை.

 7. சாருவின் கருத்துகளில் தெரியும் முரண்கள் திகைக்க வைக்கின்றன.

  ஒருபுறம் – விழிப்புணர்வும் தெளிவும் வேண்டுமென்கிறார். மற்றொருபுறம் தன்னைத் தமிழ்நாடு கொண்டாடவில்லை என்ற ஆதங்கம்! ஏன்?

  குஷ்புவிற்கு கருத்து சொல்லும் உரிமை வேண்டுமென்கிறார். சரிதான். அவருக்கு அந்த உரிமை கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் அதை தவறாக பயன்படுத்த முயன்ற போது தான் எதிர்ப்புக்கு உள்ளானார்.

  இந்தியா டுடேயில் அவர் கூறிய கருத்திற்கு எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை. ஆனால் இப்படி கருத்து கூறியது சரியா? என தினத்தந்தி நிருபர்கள் கேள்வி கேட்ட போது அவர் அது என் தனிப்பட்ட கருத்து அது சரியானதே என்று மட்டும் சொல்லியிருந்தார் என்றால் இன்று இந்தப் போராட்டமே வந்திருக்காது. ஆனால் அவர் அதை நியாயப்படுத்துவதற்காக தமிழினத்திற்கே நற்சான்றிதழ் வழங்க முயன்று உளறிக் கொட்டிய ”எந்த தமிழன்…..” என்று முழுக்க முழுக்க ஒரு இனத்தை ஒட்டுமொத்தமாக இழுக்காகப் பேசினாரோ, அங்கே தான் அவர் தன் அனுபவமின்மையைப் பறை சாற்றிக் கொண்டார்.

  அவர் அந்த இடத்தில் கொஞ்சம் நிதானம் காட்டியிருந்தார் என்றால் அவர் சொன்ன கருத்து ஒரு தனிமனித கருத்தாக மதிக்கப்பட்டு முற்றுப் புள்ளி பெற்றிருக்கும்.

  தனது கருத்தை ஒரு இனத்தின் மொத்த கருத்தாகவும் அவர் நிறுவ முயன்றது பொழுதுதான் – ஒரு இனத்தையே தன் கருத்தியல் வன்முறைக்கு உட்படுத்தினார். அவருடைய கருத்து சுதந்திரம் மறுக்கப்படவில்லை. அவரது கருத்தியல் பலாத்காரம் தான் மறுக்கப்பட்டது.

  மேலும் சாருநிவேதிதா – காமத்தைப் பற்றி உக்கிரமாக யாரும் எழுதவில்லை என்கிறார். யாரோ ஒரு மேலை நாட்டு பெண்மணி தனது அனுபவங்களை காமக் கதையாக எழுதியது தான் சிறப்பானது என்கிறார். அது உங்கள் கருத்தாக இருக்கலாம் சாரு. நீங்கள் படையுங்கள் – காமக் கதைகளை. வாசிப்பவர் வாசிக்கட்டும் – விருப்பமில்லாதவர்கள் வேறு எதையாவது எடுத்து வாசிக்கட்டுமே? ஏன் இந்த ஆதங்கம்?

  வெளிப்படையாக பேசுகிறீர்கள் – அது உங்களால் மட்டும் தான் முடியும் என்று எண்ணாதீர்கள். உங்களை வெளிப்படுத்திக் கொள்ளவும், நீங்கள் எழுதியவற்றை வாசிப்பதற்கும் ஆட்கள் இருந்தார்கள். இன்று இதே வசதியை இணையம் செய்து தர – வலைப்பூக்களில் பலரும் வெளிப்படையாக விவாதத்திற்கு வருகிறார்கள். எழுதுகிறார்கள். ஆக, இன்னும் கொஞ்ச வருடங்களில் நீங்கள் விரும்பும் மாற்றமும் கிடைக்கும்.

  மேலும் இலங்கைத் தமிழர்கள் மீது நீங்கள் அன்பு கொண்டவர் என்பதை அறியும் பொழுது – உங்கள் மீது ஒரு பாசம் எழுகிறது – நீங்களும் என்னைப் போன்ற ஒரு மனிதர் என்று.

 8. Mohan,

  there is a link at bottom of Vikatan site———–
  ã Copyright 2005 Vikatan.com All Rights Reserved.———

  So reproducing the complete article without giving the original link may not be correct.

  – Alex

 9. Yep, I do know that, and regarding the original url there is some problem. That is as per the new programming technique’s they wont allow us to find the exact url. Try it your self you can find it. Everytime you are going to see that vikatan.com url only. Thats why I am giving credits to Aanaththavikatan.

 10. Okay Joe thanks. I do know that how to find the url. But for soem particular reason I think they are hiding the url from us. That is also the reason behind why I am not giving the url. No probs from now if I post any vikatan article I will give url also. Thanks Joe, Alex Pandiyan for your advice.

  Thanks and Regards
  Mohandoss Ilangovan

 11. Thanks KVR, as of now I changed my mindset and after this I am not going to reproduce anything from anysite.

  Thanks and Regards

 12. ‘சாரு நிவேதிதா’வைப்பற்றி பலருக்குப் பலவிதமான கருத்துக்கள் இருந்தாலும்,
  அவர் ஒரு நல்ல மனிதர். அவருடைய மனைவியும் இனிமையான சுபாவம் உடையவர்.
  இருவரையும் அவர்கள் வீட்டிலேயே ஒரு நாள் சந்தித்துப் பேசியிருக்கிறேன்.

 13. துளசி கோபால்

  முதல் தடவையா நம்ம வீட்டுக்கு வந்திருக்கீங்க. வரணும்..வரணும்.

  மோகன்தாஸ்

 14. மோகன்தாஸ்,

  என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? அப்பப்ப வந்துக்கிட்டுதான் இருக்கேன். பின்னூட்டம்தான் போடலை(-:

 15. அக்கா அப்பிடியே வந்து சோழர்கள் வரலாற்றுக்கும் பின்னுட்டக் குத்து விட்டுட்டு போறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s