Of Big Bangs, Parallel Universes and 11 dimensions – The String Theory

நீண்டகால யாஹூ உபயோகிப்பாளன் என்ற முறையில் யாஹூவின் இந்த புதிய பீட்டா மெயிலைப்பற்றி தீவிரமாகப்படித்துவருகிறேன்.

கூகுளைப்போல யாஹூவும் டாட் அய்ட்டத்தை உபயோகத்தில் கொண்டுவந்துள்ளது. என்னோட பேவரைட் ஐடிதான் கிடைக்கலை. mohandoss.i@yahoo.com() டாட்டுக்கு பிறகு நான்கு கேரக்டர்கள் வரணுமாம். அதுனால வேற ஒரு ஐடியை எடுதுக்கொண்டேன்.(ஹிஹி உண்மையில் இரண்டு. இன்னும் ஆசை போக மாட்டேங்குது.)

அப்புறம் ஒரு ஆன்லைன் வேர்ட் புரொசசிங் டூல் ஒன்னு வந்திருக்கு. இன்னும் சிறிது காலத்தில் ப்ளாக் எழுதும் மக்களிடம் வரவேற்பு நிச்சயமாய்க்கிடைக்கும் என்று நினைக்கிறேன். இதில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன் உபயோகப்படுத்தி பாருங்கள்.

அப்புறம் கொஞ்சம் சைன்ஸ் பத்தி, அறிவியல் உலகத்தில் இருக்கும் மோசமான வேலைகள் பற்றி ஒரு கட்டுரை படித்தேன் சமீபத்தில். நீங்களும் படித்துப்பாருங்கள்.

கட்டுரை குறிப்பு இலகிய மனம் கொண்டவர்கள் படிக்கவேண்டாம்.

வழக்கம் போல ஒரு சூப்பரான ஐட்டம் படிக்கக்கிடைத்தது. ஆனால் தமிழில் எழுதும் எண்ணம் இல்லாததால் அப்படியேத் தருகிறேன். தனித்தமிழ் மக்கள் மன்னிக்கவும். இதைப்பத்தி ஒரு சைன்ஸ் பிக்சன் கதை எழுதியாகிவிட்டது. அடுத்தவாரம் போடுகிறேன். (செத்தீங்கடே)

உங்கள் அனைவருக்குமே, Big Bang Theory, Parallel Universes பத்தி தெரிஞ்சிருக்கும். சில அறிவுஜீவிகளுக்கு 11 dimensions and The String Theory பற்றியும். அதைப்பற்றி சில டாக்குமெண்டரிக்களை பார்க்கமுடிந்தது.

என்னால் முடிந்த சில பில்டப்புகளை மட்டும் கொடுக்கிறேன். ஐன்ஸ்டின் தியரி ஆப் எவரிதிங் என்ற ஒன்றை நிரூபிக்க நினைத்திருந்தார். தலைவரின் வார்த்தகளின் படி “ஐன்ஸ்டைன் ஐம்பதாண்டுகளுக்கு முன் இறந்து போகுமுன், The Theory of Everything என்ற உலகின் நான்கு வகை ஆதார சக்திகளை, குறிப்பாக புவிஈர்ப்பு விசை யையும் க்வாண்டம் சக்திகளையும் ஒரே சமன்பாட்டில் ஒருமித்து அறிய முற்பட்டார்… முடியவில்லை! இன்னும் அது விஞ்ஞானிகளுக்குக் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டு இருக்கிறது.”

இந்த ஸ்டிங் தியரியால் அது முடியும்னு சொல்றாங்க(????) சில டாக்குமெண்டரிக்களும் கிடைத்தது. கூகுள் அனுமத்தித்திருக்கும் நாடுகள் மட்டுமே பார்க்கமுடியும். முக்கியமாய் இந்தியாவிலிருந்து பார்க்கமுடியாது. நான் சில தகடுத்திதங்கள் செய்து பார்த்தேன்.

நான் சில தகடுத்திதங்கள் செய்து பார்த்த, வெளியில் சொல்லக்கூடிய முறைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்.

உண்மையிலேயே விளக்கமான டாக்குமெண்டரிகள். அனைவரும் பார்க்கவேண்டியது. யாரோ எழுதியிருந்தார்கள், வாத்தியாரும் கூட, ஐன்ஸ்டின் சொன்ன கடவுள் டைஸ் விளையாடுவதில்லை என்பதைப்பற்றி, அந்த வரிகளில் உள்ள தவறுகளைக்கூட டாக்குமெண்டரியில் சொல்லியிருந்ததாக ஞாபகம். நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

ஒன்னாம் நம்பர்
இரண்டாம் நம்பர்
மூன்றாம் நம்பர்

கட்டக்கடேசியா,

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். அடுத்த வருஷமும் வருவோமுல்ல தொல்லை பண்ண.

Credits: geetham.net, pbs.org, yahoo.com, writely.com, popsci.com.

குவாண்டம் சுஜாதா மற்றும் என் காதல்

“பாக்டரைசிங்க்பற்றி எழுதிய இடத்தில் சில வார்த்தைகள் விடப்பட்டது(சரிபார்க்காததால்), அதாவது அந்த பெருக்குத்தொகையை பகுப்பது என்பது முடியாத ஒன்றேன்று. இது எனக்கு மட்டும் நடந்ததில்லையே…..”

நான் வேகவேகமாய்த் தட்டச்சிக்கொண்டிருக்க, பின்னாலிருந்து பூனம் கூப்பிடுவது கேட்டது. கேட்காதது போல் தட்டச்சிக்கொண்டிருந்ததால் சப்தம் இன்னும் அதிகமானது,

“மோகன்…”

“இங்கப்பாரு, நான் கொஞ்சம் டென்ஷனாயிருக்கேன். இப்ப டிஸ்டர்ப் பண்ணாத.”

நான் திரும்பிக்கூட பார்க்காமல் சொல்லியபடியே வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். ஆனால் அலுவலகத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவள் தன் சுழல் நாற்காலியை வேகமாய் என்பக்கம் நகர்த்தி வந்து சட்டென்று கணிணிக்கு வந்துகொண்டிருந்த மின்சாரத்தொடர்பை துண்டித்தாள்.

“இங்கப்பாருங்க இனிமேல் முடியாது. நாலு மாசமாவே நீங்க சரியில்லை, ஏதோ நாம லவ் பண்ணுற ஆளாச்சேன்னு, உங்களோட வேலையையும் சேர்த்து நான் பண்ணிக்கிட்டிருக்கேன். பெரிய வேலை வெட்டி முறிக்கிற மாதிரி தமிழ்ல எழுதிக்கிட்டு இதுல டென்ஷன் வேறயாம். இனிமேல் நம்மால முடியாது, நானும் நீங்க திருந்திருவீங்கன்னு பார்க்கிறேன். ம்ஹும் அப்படித்தெரியலை. இனிமேலும் நீங்க இப்படித்தான் என்னைக்கூட கண்டுக்காம எழுதிக்கிட்டிருப்பீங்கன்னா?” கொஞ்சம் நிறுத்திவள், “எல்லாம் அவ்வளவுதான்…”

அவள் கொஞ்சமும் கோபம் குறையாதவளாய் சொல்லத்தொடங்க, எனக்கு என் நிலைமை புரிந்தது. புனே வந்த முதல் மாதத்தில் என்னுடன் வேலை செய்யும் விதமாய் அறிமுகமான பூனம் தமிழ்ப்பெண்தான். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் எங்களுக்கிடையில் நட்பு வளர்ந்து இந்த எட்டு மாதங்களில் காதலாகி இப்பொழுது இருவர் வீட்டிலும் கல்யாணம் பேசும் அளவிற்குவந்து நிற்கிறது. இன்று அவள் கோபமானதற்கு சில காரணங்கள் இருக்கத்தான் செய்தது, மதியம் ஒரு மணிபோல் என்னிடம் வந்து அவள் மதிய உணவிற்கு அழைக்க முக்கியமான வேலையாய் மறுத்துவிட்டேன். சிறிது நாட்களாகவே நாங்கள் இருவரும் ஒன்றாய் பேசிக்கொண்டிருக்கும் நேரமும் குறைந்து போனதால் ஏகக்கடுப்பில் இருந்த பூனம், நான் இப்பொழுது கொஞ்சம் கோபமாகப்பேச எல்லாவற்றையும் எடுத்தெரிந்து பேசிவிட்டாள்.

அவ்வளவு சுலபமாய் எல்லாம் அவ்வளவுதான்னு போய்விடமுடியாது தான் அது அவளுக்கும் தெரியும். ஆனால் இந்த வார்த்தையை அவள் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையை நான் ஏற்படுத்திவிட்டேன்னு அவள் சொல்ல நினைத்திருக்கலாம். ஒருவாறு அதில் அவள் வெற்றியும் பெற்றிருந்தாள், ஏனென்றால் அவளில்லாத ஒரு வாழ்க்கையை இனிமேல் கற்பனை செய்து கூட பார்க்கமுடியாத ஒரு நிலையில் இருந்தேன் நான். இதன் போன்ற காரணங்களால் வேறென்ன மன்னிப்பு கேட்கும் படலத்தை தொடங்கினேன்.

“இங்கப்பாரு பூனம் நீயே இப்படி சொன்னா எப்படிடா, நானே டென்ஷன்ல இருக்கேன், நீவேற ஏம்மா இப்படி மனசை கஷ்டப்படுத்துற.”

நான் அவளின் கோபத்தை குறைப்பதற்காய் பேசத்தொடங்கினேன், எங்கள் கியூபில் மூன்று பேர் உட்கார்ந்து வேலை பார்க்கமுடியும் ஆனால் என்ன காரணத்தாலோ அந்த மூன்றாவது இடம் பெரும்பாலும் காலியாகவே விடப்பட்டிருந்தது எனது மேலாளரால். அவருக்கும் நன்றாய்த்தெரியும் நாங்கள் காதலிப்பதும் திருமணம் செய்துகொள்ள இருப்பதும்.

ஆனால் அவள் இன்னும் முகத்தைக்கூட திரும்பிப்பார்க்காத காரணத்தால்,

“சரிடா, இப்ப என்ன பண்ணணும்னு சொல்ற. நான் பண்றேன், கோடிங் எழுதவா, இல்லை ரிவ்யூ பண்ணவா, இல்லை நான் தமிழ்ல எழுதிக்கிட்டிருக்குறது பிடிக்கலைன்னா சொல்லு கொஞ்ச நேரத்துக்கு கம்ப்யூட்fடரை மூடி வைச்சிற்றேன். என்ன பண்ணட்டும் நான்.” அவள் அருகில் சென்று நான் மெல்லக்கேட்க, திரும்பிப் பார்த்தவள்,

“நாம இப்பவே வெளியில் போகணும்.”

“அப்ப வேலையை யார் பார்க்குறது. ஆன்சைட் குவார்டினேட்டர் ஆப்படிச்சிடுவான்.”

“எல்லார்க்கிட்டையும் பேசியாச்சு, நாம எப்பவேணும்னா போகலாம். முதல்ல நாம இங்கேர்ந்து நல்லா ஹோட்டலுக்கு போறோம். அப்புறம் புனே சிட்டிக்கு போய் ஐநாக்ஸிலேயோ இல்லை இ-ஸ்கொயரிலோ, கிங்காங் படம் பார்க்கிறோம். அப்புறம் நாளைக்கு ஷீரடிக்கு போறோம் போறப்ப அப்படியே அஜந்தா எல்லோராக்கும் போய்ட்டு வர்றோம். இந்த நாலு நாளும் நீங்க கம்ப்யூட்டர் பக்கத்திலோ, தமிழ் பாண்ட் பக்கத்திலேயோ போகவேக்கூடாது. போகவும் விடமாட்டேன்.”

நான் நினைச்சேன் இப்படி ஏதாவது இருக்கும்னு, எல்லாத்தையும் நல்லா முன்னாடியே திட்டம் போட்டு வைச்சிக்கிறது. பின்னாடி நான் எங்கத்தட்டினா எப்பிடி ஆடுவேன்னு தெரிஞ்சிக்கிட்டு வேலையைப்பார்க்கிறது. இன்னும் சொல்லப்போனால் நான் கணிணி முன்னாடி உட்கார்ந்து தலையை முட்டிக்கிட்டிருக்கிற நேரமாப்பார்த்து வேணும்னே கூப்பிட்டிருக்கிறாள். நான் என்ன சொல்வேன்னும் அவளுக்கு தெரிஞ்சிருக்கும். திட்டம் போட்டு என்னை மடக்கியிருந்தாள்.

“இங்கப்பாரு எனக்கு இந்த கார்டுன் படமெல்லாம் பார்க்கிறதில் ஆர்வமில்லை வேணும்னா நாம வேற படத்திற்கு போகலாம் அதேபோல் ஷீரடியும் வேண்டாம். நீ அங்கப்போய் சாய்பஜன் பாட ஆரம்பிச்சிறுவே நமக்கு ஆகாது. வேணும்னா எல்லா லவ்வர்ஸ் மாதிரி நாமலும் லோக் கர்(Loaghgarh) போகலாம். ஷீரடிக்கு எத்தனை தடவைத்தான் போறது அதுவுமில்லாம ஷீரடிக்குன்னா குவாலிஸோ வாடகைக்கு எடுக்கவோ இல்லை வால்வோவோ பிடிக்கணும், லோக் கர்னா நாம இரண்டுபேரும் வண்டியிலேயே போய்விடலாம். என்ன சொல்ற அடுத்த நாளும் வெளியில் போகணும்னா சிங்காட் போகலாம் என்ன சொல்ற?”

அவள் சொல்லவதை நான் மறுத்துவிடுவேன்னு நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு நான் அவள் திட்டத்தை இன்னும் செளுமைபடுத்தியது பிடித்திருந்தது போலும் அவள் கண்கள் பிரகாசமாவதை என்னால் கவனிக்க முடிந்தது. ஷீரடிக்கு போக வேண்டாமென்று சொன்னதற்கு என் கடவுள் மறுப்பு மட்டுமே காரணம் கிடையாது. காதலர்கள் செல்வதற்கான இடம் இல்லை அது மட்டுமில்லாமல் மனதில் துளியும் நம்பிக்கையில்லாமல் கைகூப்பி கடவுளை வணங்குவதில் எனக்கு சுத்தமாய் விருப்பமில்லை.

அதுவுமில்லாமல் லோக் கர், சிங்காட் என்ற சொல்லப்படும் இடங்கள் புனேவில் சிவாஜியால் கட்டப்பட்ட மலைக்கோட்டைகள். நானும் பூனமுமே சிலமுறை லோக் கர் போய்வந்திருக்கிறோம். இருசக்கர வாகனத்தில் காதலர்களாக, லோக்கருக்கு செல்வது ஒரு அற்புதமான அனுபவம். இடையில் வரும் அணைக்கட்டில் சிறிது நேரம் அலவளாவிவிட்டு, லோக்கருக்குச் சென்றால் வழிப்பயணம் ரம்மியமாகயிருக்கும், அந்த கோட்டையை விட அதற்கு செல்வதற்கான வழிதான் எனக்கு பிடித்திருந்தது. பிரயாணம் செய்வதில் ஆர்வமுடையவனாய் இருந்ததாலும், இருசக்கர வாகனத்தில் மனதிற்கு பிடித்த காதலியுடன் வேகமாய் செல்வது சுகமான அனுபவம். இடையிடையில் நிறுத்தி அந்த குளிர்காலத்தின் மலைப்பிரதேசத்தில் தேநீர் அருந்துவதன் அருமையை உணர்ந்த காரணத்தால் தான் உடனே அவள் சொன்ன திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் உடனே சம்மதிக்கவும் செய்தேன்.

பூனமும் கொஞ்சம் கொஞ்சமாய் நான் இருந்த டிப்ரஷன் நிலையிலிருந்து மீண்டு சாதாரணமான நிலைக்கு வருவதை உணர்ந்திருக்கலாம். அவளுக்கு தேவையானதும் இதுவே. எனக்கும் இந்த மாறுபாடு தேவையாய் இருந்தது. நாளைந்து நாட்களுக்கு கணிணியை விடுத்து, ப்ரோக்கிராம்களை விடுத்து, கொஞ்சம் சுகமாய் ஊர்சுற்றுவதில் மனமடையும் வித்தியாசத்தை உணர்ந்துதான் இருந்தேன்.

என் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டவளாய், அவள் கிளம்ப நாங்கள் அலுவலகத்திலிருந்து வெளியில் வந்தோம். பிறகென்னவோ நினைத்தவளாய்,

“தாஸ் நாம வடாபாவ் சாப்பிடுவோமா?” கேட்க எனக்கு சிரிப்பாய் வந்தது. இந்தப் பெண்களுக்குத்தான் எவ்வளவு துணிச்சல், நாம் அவர்களின் பேச்சிற்கு கட்டுப்பட்டு நடக்கும் சூழ்நிலையில் பெரும்பாலும் அவர்களுடைய மனநிலையை நம்மீது திணிக்காமல் விடுவதில்லை. பூனத்திற்கு நன்றாகவேத்தெரியும் நான் வடாபாவ் சாப்பிடமாட்டேனென்று. ஆனால் இன்று கூப்பிட்டதும் மறுக்காமல் சென்றேன். ஒரு வடாபாவ் ஆர்டர் செய்தவள் என்னை நன்கு உணர்ந்தவளாக எனக்காக ஒரு தனி வடையை மட்டும் சொல்லியிருந்தாள். இந்த ஊரில் வடை என்பது நடுவில் ஓட்டையில்லாமல், வட்டமாய் உருளைக்கிழங்கு வைத்து நம்மூர் பஜ்ஜியைப்போலிருக்கும்.

அந்த வடையை பாவ் எனப்படும் சின்ன பிரட்டின் நடுவில் வைத்து சாப்பிட்டிக் கொண்டிருந்தவள்.

“தாஸ் எப்பவும் ஒரு குட்டிக்கதை சொல்வீங்களே இப்பவும் ஒன்னு சொல்லுங்க கேக்கணும் போலிருக்கு.”

எனக்கும் ஆச்சர்யம்தான் இருந்தாலும் கேட்டுவிட்டாளே என்பதற்காக,

“இங்கப்பாரு பூனம் இந்தக்கதையை எங்கப்பா எப்பவும் சொல்லுவாறு, கொஞ்சம் தண்ணியடிச்சிட்டா மகன்மேல பாசம் பொத்துக்கிட்டு ஊத்தும் ஒரே கதையா வரும். அதில ஒன்னுதான் இது, அப்பா சொந்தமா யோசிச்சதா இல்லை எங்கையாவது படிச்சதான்னு தெரியாது ஆனா எனக்கு பிடிச்சக்கதைகளில் இதுவும் ஒன்று.

அதாவது, ஒருத்தன் தெருவழியா நடந்து எங்கேயே போய்க்கிட்டிருந்தானாம் அப்ப அவனோட செருப்பு அருந்துருச்சாம், பக்கத்தில் தைப்பதற்கும் ஆளில்லாமல் இருக்க, போகும் இடத்திற்கும் அறுந்த செருப்பை கொண்டு போகமுடியாமல் பக்கத்தில் இருந்த வீட்டிற்கு சென்று, ‘ஐயா இந்த செருப்பு அருந்துருச்சு, முக்கியமான வேலையாப்போறேன். உங்கவீட்டில் விட்டுட்டு போறேன் வர்றப்ப எடுத்துக்குறேன்’ அப்படின்னு சொன்னானாம். அந்த வீட்டிலேயும் ஒத்துக்கிட்டாங்க. அந்த காரியத்துக்கு போய்ட்டு வந்து செருப்பை எடுத்துட்டு போனானாம்.

அடுத்த சில நாள்களில் ஏதோ பிரச்சனையால் அவன் இறந்துபோக, அவன் உடலை முன்னாடி அவன் செருப்பை விட்டுட்டு போன வீடிருக்கும் தெரு வழியிலேயே எடுத்துட்டு போனாங்களாம். அப்ப அடாத மழை பெஞ்சிச்சாம். கரெக்டா அந்த செருப்பை விட்டுட்டு போன வீட்டிற்கு எதிரில் வந்ததும் கொஞ்சமும் நகர முடியாத சூழ்நிலை.

இங்கத்தான் எங்கப்பா சொல்வாரு இதே இந்த பொணத்தை மழை விடறவரைக்கும் உங்க வீட்டில் வைத்திருக்கிறோம்னு சொன்ன விடுவாங்களா வீட்டில் அதனால பிஞ்ச செருப்புக்கு இருக்குற மரியாத செத்த பொணத்துக்கு கிடையாதுன்னு. இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்வாருன்னு கேட்குறியா, ஏன்னா நான் வேகமா வண்டி ஓட்டுவேன் யார் யாரோ சொல்லியும் நான் கேட்டதேயில்லை. அதற்காக ஒருநாள் தண்ணியடிச்சிட்டு பாசமா சொன்ன கதைதான் இது நல்லாயிருந்துதா.” நான் கேட்க,

“உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாது வேறென்ன சொல்ல.” சொல்லிவிட்டு என் தலையில் கொட்டினாள். நான் கொஞ்சம் சாதாரணமாய் ஆகியிருந்ததை அறிந்தவள் போல்,

“சரி இன்னிக்கு அப்படியென்னத்தான் பிரச்சனை.” அவள் எதைக்கேட்க வருகிறாள்னு புரிந்துதான் இருந்தது எனக்கு.

“பிரமாதமான பிரச்சனையெல்லாம் ஒன்னுமில்லைடா, ஆனாலும் கொஞ்சம் டென்ஷனாயிட்டேன் அவ்வளவுதான்.” நான் சொல்ல,

“தாஸ், எந்தப்பிரச்சனையாயிருந்தாலும் நேரடியா பேசிடு. நேரடியா பேசாம, ம் குறிச்சி வைச்சிட்டேன், காத்திருக்கிறேன், அப்படியெல்லாம் மனசை குழப்பிக்காத. இதையெல்லாம் விட உனக்கு ஒரு அட்வைஸ் நான் கொடுக்கணும்னா இதையெல்லாத்தையும் விட்டுறு. கேட்டா வாத்தியார் சொன்னார் அது இதும்பே, வாத்தியார் எங்கச்சொன்னார் உன்கிட்ட எழுதிக்கிழிக்க, நீயா ஏகலைவனா மாற நினைக்கிறது ரொம்பப் பெரிய தப்பு.”

எனக்கு உண்மையிலேயே சிரிப்புத்தான் வந்தது. என்னை நன்றாய்ப் புரிந்துகொண்டிருக்கிறாள் பூனம் இருந்தாலும் அவள் சொன்ன உருவகத்தில் தவறிருந்ததால்,

“பூனம் உண்மைதான் வாத்தியார் இப்படி எழுதச் சொல்லலைதான். இருந்தாலும் ஏகலைவன்ங்கிறது அவ்வளவு சுலபமான வார்த்தைப் பிரயோகம் கிடையாது. நானென்னவோ நாயைப்பார்த்து அம்பெய்த மாதிரியில்ல சொல்ற, நானெல்லாம் இன்னும் வில்லையே எடுக்கலை. வாத்தியாருக்கு ஏகலைவனாயிருக்குறதுல ஒன்னும் தப்பே கிடையாது, ஏற்கனவே நிறைய ஏகலைவர்கள் இருக்கலாம் இருக்காங்க. எனக்கு அந்த தகுதியிருக்குதான்னு தான் முதல்ல பார்க்கணும்.

இதையெல்லாம் விடு, இந்த விஷயங்கள் நம்ம மனசுக்கு தாக்கத்தை ஏற்படுத்தத்தான் வேண்டும் நான் ஒன்னும் எருமைமாடு கிடையாது. என்ன நடந்தாலும் அப்படியே இருக்கிறதுக்கு, கொஞ்ச நேரத்துக்கு பாதிப்பை இந்த விஷயங்கள் ஏற்படுத்தணும் அதுதான் நல்லதும்கூட. அது அப்பவே முடிஞ்சிறுச்சு. அதனால இதைப்பற்றிய பிரச்சனையில்லை. நீதான் ரொம்ப சங்கடப்படுத்திட்ட, தமிழை விட, வாத்தியாரை விட, நீதான் எனக்கு ரொம்ப முக்கியம் அதை மட்டும் நீ புரிஞ்சிக்கிட்டா போதும். நம்ம கல்யாண விஷயமா உங்க வீட்டில் என்ன சொன்னாங்க அதைச்சொல்லு முதல்ல.”

“என்னமோ தெரியாது மாதிரி கேட்குறீங்க, நீதான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்ற, எங்கவீட்டில் இப்பவேக்கூட தயார்தான். என்னை கல்யாணம் பண்ணிக்கொடுக்க.” கொஞ்சம் யோசித்தவளாய்.

“அதான் சரியாய்டன்னு சொல்றீங்க, நாம இப்ப வெளியில் போயே ஆகணுமா, எனக்கு நாலுநாளா நிறைய வேலை செஞ்சதுனால தூங்கணும் போலிருக்கு என்னை ஹாஸ்டலில் எறக்கிவிட்டுடுங்க. நான் போய் தூங்குறேனே.”

அவள் கேட்க எனக்கும் பாவமாய்த்தான் இருந்தது. ஆனாலும் படத்திற்கு போகவும் லோக் கர் போகவும் ஆசையைக் கிளப்பிவிட்டதால் முடியாதென்று சொல்லி வண்டியை வேகமாய்ப் புனே சிட்டியை நோக்கி செலுத்தினேன்.

ஆறாம் விரலும் அர்த்தமான இரவும்

“இன்னிக்கென்ன நாயா? பூனையா?”

இதுதான் என் பொண்டாட்டிங்கிறது. நாம தேடித்தேடி பொய்யெல்லாம் சொல்லணும்னு அவசியமேயிருக்காது. அவளாவே கரெக்டா கண்டுபிடித்துவிடுவாள். ஆனால் கல்யாணம் ஆன புதிதில் இப்படிக்கிடையாது. எங்களுக்கிடையேயான அலைவரிசையில் நிறைய வேறுபாடுகள் இருந்தது. ஆனால் இந்த பத்து வருடங்களில் அவள் என்னை புரிந்துகொண்டது ரொம்ப அதிகம்.

“சொல்லுங்க கேக்குறேன்ல, இன்னிக்கு எந்த நாய், நரி ரோட்டில் அடிபட்டுக்கிடந்துச்சு, அய்யா எந்த ஆஸ்பத்திரிக்கு போய் ரத்தம் கொடுத்துட்டு வர்றீங்க. ஆபிஸ்லேர்ந்து கிளம்புறப்ப போன் பண்ணிட்டுத்தானே கிளம்புனீங்க?”

இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு பத்ரகாளி போன்ற ஒரு உருவகத்தை கொண்டுவர அவள் நினைத்தாலும் அந்த சாந்தமான அழகான முகத்திற்கு ஒத்துவரவில்லை. வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, அவளை நெருங்கிவந்து லேசாய் கன்னத்தை கிள்ளினேன்,

“அம்முன்னா அம்முதான், எப்பிடிடா கரெக்டா கண்டுபுடுச்ச, எவனோ ஒரு லூசுப்பய வண்டியே நாய் மேல ஏத்திட்டான், அது கதறித்துடிக்குது அவன்பாட்டுக்கு கண்டுக்காம போறான். ரொம்ப குட்டிடா இரண்டுமாசம் கூட ஆயிருக்காது, ஒரே ரத்தம் வேற. எனக்கு மனசு கேக்கலை. நம்ம அன்புக்கு இப்படி ஆகியிருந்தா பார்த்துட்டு அப்பிடியே உட்டுருவோமா சொல்லு?”

நான் மெதுவாய் அவளைக் கொஞ்சத்தொடங்க, கையைத் தட்டியவளாய்,

“இன்னிக்கு நம்ம மணீஷோட பிறந்தநாள் ஞாபகமிருக்கா. இவ்ளோநேரம் இங்க வாசல்லயே உட்கார்ந்துக்கிட்டிருந்தா, ‘நைனா எப்பவருவாங்க’ன்னு கேட்டுக்கிட்டே. வண்டிச்சத்தம் கேட்டதும் கோபத்தில உள்ள போய் உக்காந்திருக்கா. நீங்களே போய் சமாதானப்படுத்துங்க, நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு. நம்மளால முடியாது,”

கோபம் அம்முவுக்குத்தான் அதிகமிருக்கும் ஆனால் வெளியில் காண்பிக்கமாட்டாள். மணீஷோட பிறந்தநாளுக்கு வெளியில் அழைத்துச்செல்வதாய் ஏற்பாடு. இப்பொழுது எல்லாம் அரோகரா ஆகியிருந்தது. மணீஷ் என்ன சின்ன பொண்ணு, எட்டு வயசாகுது. நாளைக்கு கொஞ்சநேரம் அதிகமா போகோ சேனல் பாத்துக்கோன்னு சொல்லிட்டா சமாதானமாயிருவா. ஆனா இங்க அப்படி முடியுமா? காலைலேர்ந்து ஆரம்பிக்கணும் தாஜா பண்ண, அவளுக்கு முன்னாடி எழுந்திருச்சி காபிபோட்டுத்தந்து, அவள் வேண்டாம் வேண்டாம்னு சொல்லும்பொழுதும் சமையல்ல அவளுக்கு உதவி செஞ்சு, சாயங்காலநேரமாய் அவளுக்குத்தெரியாமல் வெளியில் சென்று மணீஷிற்கு நொறுக்குத்தீனியும் இவளுக்கு மல்லிகைப்பூ வாங்கிவந்து இப்படி நிறைய செய்யவேண்டியிருக்கும் சமாதானப்படுத்த. இதெல்லாம் பண்ணுறமோ இல்லையோ அன்னிக்கு மட்டும் அவள் சமையல்ல நொட்டாங்கு சொல்லாமயிருக்கணும்.

இதையெல்லாம் நினைத்துக்கொண்டவனாய் மணீஷாவை சமாதானம் செய்ய வீட்டிற்கு உள்ளே நுழைந்தேன். அவ என்னைக் கவனித்தாலோ இல்லையோ அன்பு வந்துட்டான் முன்னாடி வாலை ஆட்டிக்கிட்டே. பொண்டாட்டி புள்ளயக்கூட சமாதானப்படுத்திரலாம், அய்யோ இவனை சமாதானப்படுத்த முடியாது. சிலசமயம் கோபத்தில் அம்மு நேரடியாகவே சொல்லிவிடுவாள்.

“உங்களுக்கு என்னையும் என் புள்ளையும் விட இவன்தான் முக்கியம்” என்று.

நமக்கு விளங்குதோயில்லையோ, அன்புக்கு கோபம் வந்திரும். அவளைப்பார்த்து குரைத்து தன் எதிர்ப்பைக்காட்ட, அம்முவின் வேதாளம் சீக்கிரமே முருங்கைமறம் ஏறிக்கும். அவ்வளவுதான் அன்புவின் வாய்க்கு போடவேண்டிய பெல்டை போட்டுட்டுத்தான் மறுவேலைன்னு அம்மு ஒத்தைக்காலில் நிற்க, சாதாரணமா அவனோட கழுத்து சங்கிலியை போட நினைத்தாலே கோபமாகிவிடும் அன்பு; ஒரே ராகமாய் அவளைப்பார்த்து குரைக்கத்தொடங்க, அப்புறமென்ன ரெண்டு வேளைக்கு எனக்கும் அன்புக்கும் வெளியில் தான் சாப்பாடு.

சமையல்கட்டிற்கே போகமாட்டாள், ஆனால் அவளும் அவள் பொண்ணும் மட்டும் எப்படியோ சாப்பிட்டிருப்பார்கள். இத்தனைக்கும் அன்புமேல அம்முவுக்கு பாசமில்லைன்னு எல்லாம் சொல்லமாட்டேன். அவனுக்கு உண்ணி எடுத்து விடுவதில் தொடங்கி, அவனைக்குளிப்பாட்டி, வாக்கிக் அழைத்துச்சென்று எப்பவாவது வீட்டில் அசிங்கம் பண்ணிட்டான்னா கழுவிவிட்டு அத்தனையும் அவள்தான் செய்வாள். என்ன நான் கொஞ்சம் செல்லம் கொடுப்பேன் அவள் மொத்தமாய்க் கண்டிப்புதான்.

ஒருநாள் இப்படித்தான் ஆபிஸில் முக்கியமான வேலை செய்துகொண்டிருக்கும் பொழுது இவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு. இரண்டு வார்த்தை பேசமாட்டேங்கிறா, அழுகுறா. எனக்கு தூக்கிவாறிப்போட அவசரஅவசரமாய் வீட்டிற்கு கிளம்பிவந்துபார்த்தால். அன்பு தேமேன்னு ?£லில் படுத்திருக்க பக்கத்தில் அவனைத்தடவிக் கொடுத்தபடியே இவள் அழுதுகொண்டிருந்தாள்.

என்னாடின்னு கேட்டா, அன்புவிற்கு உண்ணி வராமயிருக்கிறதுக்கான ஷேம்புவை போட்டு குளிப்பாட்டிவிட்டிருந்தாளாம். சமையல்கட்டில் ஏதோ அவசரவேலையாய் நன்றாய் கழுவிவிடாமல் விட்டிருக்கிறாள். அன்பு உடம்பை நக்கிவிட்டிருக்கிறான், பிறகென்ன தலைவர் வாந்தியெடுத்து, பெரிய பெரிய பிலிம்மெல்லாம் காட்டியிருக்கிறான்.

இவள் ஒரே அழுகையாய் அழத்தொடங்க, நான் அவனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தேன். இவள் அதற்கு பிறகும் நிறுத்தாமல் அழுதுகொண்டேயிருக்க, ஸ்கூல்லேர்ந்து வந்த மணீஷா அம்மா அழுவதைப்பார்த்து அவளும் அழத்தொடங்க, நம்ம ஆளு, ?¦ரோ அன்பு டாக்டர்கிட்ட அழகா ஊசியை போட்டுக்கிட்டு; நல்லா ஒரு பாக்கெட் பிஸ்கெட்டையும் ஒரெயடியாய் விழுங்கிவிட்டு; ஜம்முன்னு வண்டியில் காத்துவாங்கிக்கிட்டே வந்து இறங்கினான்.

உள்ள நுழைஞ்சானோ இல்லை, நேராய் மீன் பொம்மையை எடுத்துக்கிட்டு ஒவ்வொருத்தரிடமாப் போய் விளையாடிக் கொண்டிருந்தான். அம்முவுக்கு அவன் திரும்புவும் ஆடிஓடி விளையாடத்தொடங்கவும் தான் உயிரே வந்தது போல் இருந்தாள். இரண்டு பேர்க்கிட்டையும் முடிச்சிக்கிட்டு என்கிட்ட பொம்மையை எடுத்துக்கொண்டு வர எனக்கு கோபமுன்னா கோபம், பின்ன என் பொண்டாட்டி புள்ளையை அழவச்சிட்டான்ல!!!, நான் விளையாட வரமாட்டேன்னு சொல்ல. உடனே அம்மு,

“அந்தாளு கிடக்குறாரு! நீவாடா குட்டி நாம விளையாடலாம்’ னு சொல்லி கொஞ்ச நேரம் சார்கிட்ட விளையாடிக்கிட்டிருந்தாள். பின்னர் டாக்டர் போட்ட ஊசி வேலைசெய்யத்தொடங்க அன்பு அப்படியே தூங்கிட்டான். அப்புறம் மணீஷாவும் தூங்கினதுக்குப்பிறகும் அம்மு அன்பின் பக்கத்தில் உட்கார்ந்து அவனைப் பாவமாய்ப் பார்த்தபடியே தடவிவிட்டுக்கொண்டிருக்க, நான் மெதுவாய்,

“நானும் பாவந்தானே அம்மு, இன்னிக்கு பூரா இவனால ஒரே அலைச்சல்.” ஆரம்பிக்க, திரும்பி முறைத்தவள்.

“பேசாமப்போய்ப் படுத்துக்கோங்க, அன்பை அப்படி பார்த்ததிலிருந்து எனக்கு மனசே சரியில்லை, பாவம் புள்ள காலைலேர்ந்து சாப்டதையெல்லாம் வாய்லெடுத்துட்டு கஷ்டமா படுத்துறுக்கான். உங்களுக்கெல்லாம் எப்படித்தான் மனசுவருதோ தெரியலை. மரியாதையாய் போயிருங்க, இல்லைன்னா ஒருமாசத்துக்கு அவ்வளவுதான்…” சொன்னவள் என்னைத் திரும்பிக்கூட பார்க்காமல் அவன் கால்களை நோண்டிக்கொண்டிருந்தாள். அன்பு விழித்திருக்கும் பொழுது காலில் இருக்கும் உண்ணியை எடுக்கவிடமாட்டான்.

எனக்கோ அன்னிக்கு இரவைக் கெடுத்துட்டானே பாவின்னு கோபத்தோட அவனைப்பார்த்தேன். அவனோ, அவள் தடவிக்கொடுக்கும் சொகுசில் ஒரு கண்ணை மட்டும் உயர்த்தி என்னை ஏளனமாகய்ப்பார்த்தான். இப்படியாக அவளுக்கு அன்பு என்று நாங்கள் செல்லமாய்க் கூப்பிடும் அன்பரசன் என்ற லேப்ரடார் கோல்டன் ரெட்ரீவர் வகை நாய்க்குட்டியை ரொம்ப அதிகமாகவே பிடிக்கும்.

அன்பை அப்படியே இரண்டு கைகளாலும் தூக்கிக்கொண்டு மணீஷாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தேன். பின்னர் அவளை பக்கத்தில் இழுத்து உட்காரவைத்துவிட்டு,

“என்னம்மா செல்லம் கோபமா நைனாமேல, பாருடா நம்ம அன்பு மாதிரியே ஒரு குட்டி நாய், ரோட்டில ஒருத்தன் அடிச்சிபோட்டுட்டு போய்ட்டான். பாவமில்லையாடா அது. நம்மள மாதிரி ஒரு உயிர்தானே அதுவும், அதான் நைனா ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுபோய் வர்றேன்.”

நான் சொல்லச்சொல்ல மணீஷாவின் கண்களில் நீர்முட்டத் தொடங்கியிருந்தது.

“இல்ல நைனா எனக்குத்தெரியும் இப்புடித்தான ஏதாவதிருக்கும்னு. ஆனா அம்மாத்தான்…” சொல்லிவிட்டு திரும்பியவளை அம்மு முறைக்க மணீஷ் நிறுத்திக்கொண்டாள்.

பின்னர் நானும், அன்பும் மணீஷாவும் சேர்ந்துகொண்டு கொஞ்ச நேரம் அம்முவை வம்பிழுத்துக்கொண்டிருக்க, அவள் நேரமாகியிருந்ததால் வெளியில் செல்லவேண்டாமென்று சொல்லிவிட்டு சமைக்கத்தொடங்கினாள்.

அன்றிரவு,

“என்னங்க நான் உங்கக்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.”

“ஏய் இங்கப்பாரு உங்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன் இந்தச் சமயத்தில் உன்னோட எண்ணங்களை என்மேல திணிக்காதேன்னு.” நான் சப்தமில்லாமல் அதே சமயம் கோபமாய்க் கேட்டேன்.

“நான் என்ன அவுசாரியா உங்க பொண்டாட்டிதானே, கண்டதையும் காண்பிச்சு கேக்கணும்ங்ற அவசியம் எனக்கு கிடையாது தெரிஞ்சிக்கோங்க.” அவளும் கோபமாய்ச் சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்ள. நான்,

“சரி சொல்லித்தொலை என்ன விஷயம்.” கொஞ்ச நேரம் அவளிடம் இருந்து பதிலெதுவும் வரவில்லை. பின்னர் திரும்பிப்பார்த்தவள்,

“நம்ம மணீஷைப்பத்தித்தான். எனக்கு அவ பண்றது சுத்தமாப் பிடிக்கலை.”

இதை நான் எதிர்பார்த்தேன்தான். அவள் என்னைப்பற்றியோ என் குடும்பத்தைப்பற்றியோ சொல்ல அதுபோன்ற ஒரு சூழ்நிலையை உண்டாக்க மாட்டாள். ஆனால் மணீஷாவைப்பற்றி குறைசொல்ல மட்டுமே இப்படிச் செய்வாள். அப்பொழுது இவளுக்கு டெலிவரி டைம், அதுவரைக்கும் நார்மல் டெலிவரின்னு சொல்லிக்கிட்டிருந்த டாக்டர்ஸ் அந்த டைம் பார்த்து குழந்தையோட தலை கொஞ்சம் பெரிசாயிருக்கு ஆப்ரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டாங்க. கடைசியில் அம்மா பொண்ணு இரண்டுபேரும் டெலிவரி முடிஞ்சு நல்லபடியாயிருக்காங்கன்னு சொன்னவுடன்தான் எனக்கு உயிரேவந்தது.

மணீஷா என்னைப்போலவே இடதுகாலில் ஆறு விரல்களுடன் பிறந்திருந்தாள். குட்டிக்குட்டியான கைகள், பஞ்சு போன்ற உடம்பு, பிறந்த கொஞ்சம் நாட்களுக்கு நான் அவளை தூக்கவேயில்லை. எனக்குப் பயம் கீழேப் போட்டுவிடுவேனோ என்று. அதற்குப்பிறகு சில நாட்களில் சரியாகிவிட்டது. அதிலிருந்து இன்றுவரை பெரும்பாலும் அவள் என்னிடம் தான் இருப்பாள். இன்னும் சொல்லப்போனால் அப்படியே அவள் என்னைப்போலவே வளர்ந்துவந்தாள். அதனால் மணீஷாவைப்பற்றி குற்றம் சொன்னாள் எனக்கு பிடிக்காது என்றுதான் அம்மு இத்தனையும் செய்வது.

மணீஷா டெல்லியில் பெரிய வீட்டு குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாள். இந்த வயதிலேயே மணீஷா மூன்று மொழிகளில் அழகாய்ப் பேசுவாள். தமிழும் இந்தியும் நாங்கள் டெல்லியில் இருப்பதால் எங்கள் பேச்சுவழக்கில் வந்தது, பள்ளியில் படிப்பதால் ஆங்கிலமும். என் டெல்லிவாழ் நண்பர்கள் பெரும்பாலோனோர் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர்கள் ஆதலால் அவளுக்கு சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் ப்ரெஞ்சும் சொல்லிக்கொடுத்து வந்தார்கள். மற்ற குழந்தைகளைப் போலில்லாமல், ஓவியம் வரைவது, என்னுடன் செஸ் விளையாடுவது என அவள் படிப்பைத்தவிர மற்றவிஷயங்களில் நன்றாகத்தான் ஈடுபாட்டோடு இருந்தாள். ஆனால் அம்மு எதைச்சொல்லவருகிறாள் என்று எனக்கு புரியவில்லை.

“அம்மு எதைச்சொல்ற, இன்னிக்கு மணீஷாவை நீதான் அப்படி கோபமாயிருக்கும் படி இருக்கச் சொன்னங்கிறத என்கிட்ட சொன்னாலே அதைச் சொல்றியா? அவ சின்ன குழந்தைம்மா இதிலென்ன தப்பிருக்கு சொல்லு?”

“இங்கப்பாருங்க உங்களுக்கு புரியலை, அவளுக்கு இந்த வயசில இருக்கக்கூடாத தௌ¤வு இருக்கு. யார்க்கிட்ட எப்படி பேசினா விஷயம் ஆகும்னு தெரிஞ்சிருக்கா. இன்னிக்கு நடந்தத மட்டும் வைச்சு சொல்லலை, ஆனாலும் பாருங்க இன்னிக்கு நான் உங்கமேல கோபமாயிருந்ததால நீங்க வர்றவரைக்கும் அவளும் உங்க மேல கோபமாயிருக்குற மாதிரி இருந்தா, பின்னாடி நீங்க வந்ததும் உங்களுக்கு ஏத்தமாதிரி பேசுறா.

இந்த டெல்லி சூழ்நிலை எனக்குச் சரியாப்படலைங்க, இந்த வயசுல நான் செய்யத்தயங்குற பல விஷயங்களை ரொம்ப சாதாரணமா செய்றா. எல்லாம் நீங்க கொடுக்குற இடம். நாலு அடிவைச்சா சொல்பேச்சு கேட்டுறுவா. நீங்கத்தான் சிங்கத்துக்கு பிறந்ததால மட்டும் சிங்கக்குட்டி சிங்கமாகிவிடுறதில்லை, சிங்கம் தன் குட்டியை நக்கி நக்கித்தான் சிங்கமாக்குதுன்னு விளங்காத தத்துவம் எல்லாம் சொல்லி அவளை அடிக்க விடமாட்டேங்குறீங்க.

இன்னிக்கு பாருங்க அவங்க ஸ்கூல்ல இவ பிறந்தநாளுக்கு ஒரு கெட்டுகெதர் வைச்சிருந்தாங்க. அங்க வந்த இவ ப்ரண்ட்ஸ்ல யார் இவளுக்கு கிப்ட் கொடுத்தாங்களோ அவங்க கிட்ட மட்டும்தான் போய்ப்பேசுறா. இதுல ஒரு பையன் கிட்ட நேர்லையே கேட்டாகுது. நீ கிப்ட் வாங்கிட்டு வரலையான்னு. எனக்கென்னமோ இது சரியாப்படலை. அப்பிடியே உங்க சாமர்த்தியம், இதை நான் பார்த்ததும் ஒன்னுமே நடக்காதது போல அந்தப் பையனுக்கும் கொண்டு போயிருந்த சாக்லேட்டை கொடுக்குறா.

எனக்கென்னமோ நாம அவளை தப்பா கைட் பண்றமோன்னு தோணுது. எதுக்கெடுத்தாலும் ஒரே பிடிவாதம். தான் சொல்றததான் எல்லோரும் கேட்கணும்னு. அன்னிக்குத்தான் நீங்க பார்த்தீங்களே உங்க பிரண்ட்ஸ்ங்களோட நாம ஏர்ப்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவுக்கு சாப்பிடப்போயிருந்தப்ப நடந்தத. இவளாலத்தானே நாமெல்லாம் அன்னிக்கு பனியில உக்கார்ந்து சாப்பிட்டோம். அன்னிக்கே உங்கக்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன் ஆனால் விட்டுட்டேன். இன்னிக்கு இவ ஸ்கூல்ல பண்ணது ரொம்ப ஜாஸ்தி.

டெல்லி மாதிரி எஜூகேஷன் கிடைக்காதுதான் ஒத்துக்குறேன். ஆனா இந்த வயசிலேயே இவளை நாம மாத்திட்டாத்தான் உண்டு. இல்லைன்னா பெரிய பிரச்சனையாயிரும் சொல்லிட்டேன்.”

மூச்சுவிடாமல் பேசிவிட்டு நிறுத்தியவள், என்னையே பார்த்தாள். எனக்கும் இது ஒருவாறு தெரிந்துதான் இருந்தது. அப்படியே மணீஷா நார்த் இண்டியன் குழந்தைகளைப்போல் வளர்ந்திருந்தாள். என்னையே சிலநேரம் கோபப்படுத்திவிடும் அளவிற்கு மணீஷாவின் பிடிவாதம் வளர்ந்திருந்தது. இதைப்பற்றி நானும் சில மாதங்களாகவே யோசித்து வந்திருந்தேன். அதை இன்று அம்மு சொல்லவும்.

“சரி இப்ப என்ன பண்ணலாம்னு சொல்ற?” நான் கேட்க. அவள்,

“நாம டிரான்ஸ்பர் வாங்கிட்டு தமிழ்நாடு போய்டலாம், அவளோட பேஸ் நல்லபடியா வந்ததும் வேண்டுமானால் திரும்பும் டெல்லியோ இல்லை நார்த் இண்டியாவில் வேற இடமோ வந்திடலாம். நம்ம ஊரு வழக்கப்படி வளர்ந்தா கொஞ்ச நாளில் சரியாய்டுவா. அவளுக்கு இருக்கிற ஒரே பிரச்சனை இதுதான். ஆனா கொஞ்சம் சீரியஸான பிரச்சனை. மற்றபடிக்கு நம்ம பொண்ணுக்கென்ன என்னைமாதிரி முட்டாளா? உங்களமாதிரியே அறிவுக்கொழுந்து. அதெல்லாம் சரியா பிக்கப் பண்ணிக்குவா…” அம்மு எனக்கு ஐஸ்போட ஆரம்பிக்க அவள் பேச்சை இடைமறித்தவனாய்.

“இங்கப்பாரு இதைப்பத்தி நானும் கொஞ்ச நாளாவோ யோசிச்சிட்டுத்தான் வர்றேன். ஆனா நாம மெட்ராஸ் போனாலும் நான் அடையார் பக்கத்தில் வீடு பாக்கமாட்டேன் நல்லா ஞாபகம் வைச்சிக்கோ. இன்னும் சொல்லப்போனால் அடையாறுக்கு ஆப்போஸிட்டாத்தான் எங்கையாவது வீடு எடுப்பேன். நீ இதை சாக்கா வைச்சு உங்கம்மா, அப்பாக்கிட்ட கொஞ்சலாம்னு நினைச்சேன்னா அதை இப்பவே மறந்திரு. நாம மெட்ராஸ் போனா அதற்கு ஒரே காரணம் மணீஷாவின் பழக்கவழக்கத்தை சரி பண்றதுதான்.”

நான் சொல்ல வேகமாய்க் என் கையைக் கிள்ளியவள்,

“எக்கேடோ கெட்டு ஒழிங்க.” சொல்லிவிட்டு அந்தப்பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

அவள் சுலபமாய்ச் சொல்லிவிட்டாள் மெட்ராஸ்க்கு டிரான்ஸ்பர் வாங்குங்கன்னு. நான் அதன் சாதக பாதகங்களை கணக்கிடத்தொடங்கினேன். பிறகு சிறிது நேரத்திலேயே இதில் இருக்கும் பாதகங்கள் அனைத்துமே மணீஷாவின் நல்லதுக்குத்தான் என நினைத்தவனாய் தூங்கத்தொடங்கினேன்.

—-

Thinnai.com

Operation மஜ்னு பாத்து இருந்துக்கோங்கப்பு – updated

நேத்திக்கு நைட், ஆபிஸ்லேர்ந்து வீட்டிற்க்கு வந்திட்டிருந்தேன். செல்ப் குக்கிங்க்காக பிரெட்டும், முட்டையும் இன்ன பிற வெங்காய, தக்காளிகளையும் வாங்கும் பொழுது தான் பார்த்தேன். அந்தக்கடை டிவியில் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படம் போட்டுக்கிட்டிருந்தான்.

சரி இன்னிக்கு நைட் கோவிந்தான்னு நினைச்சிக்கிட்டே வீட்டிற்கு வந்து பார்த்தா, எங்க கேபிளில் ஏஎக்ஸ்என் வர மாட்டேங்குது. அதுக்கு பதிலா ஒரு புதுசேனல் வந்துகொண்டிருந்தது. அவசரத்தில் பார்த்தா சிஎன்என் மாதிரியிருந்தது. சரி உலக நிலவரத்தை தெரிஞ்சிக்கலாம்னு பார்த்தா, ரொம்ப சீரியஸா மீரட்டில் நடந்த ஒரு விஷயத்தைப்பத்தி போட்டுக்கிட்டிருந்தாங்க.

என்னடா இது சிஎன்என்னுக்கு வந்த சோதனைன்னு பார்த்தாத்தான் தெரிஞ்சது, அது சிஎன்என் ஐபிஎன்(CNN – IBN) ஆம், புதுசேனல், முன்னாடி என்டிடிவி யில இருந்தாரு ஒருத்தரு பேரு ஞாபகத்தில் இல்லை. லாலு பிரசாத் யாதவை பேட்டியெடுக்குறதுன்னா அவரைத்தான் அனுப்புவாங்க உண்மையிலேயே நல்ல திறமையான ஜர்னலிஸ்ட், பிரணாய் அண்ணாச்சிக்கும் இவருக்கும் என்ன பிரச்சனையோ நான் அறியேன் பராபரமே. கொஞ்ச நாளைக்கு முன்னாடியே என்டிடிவியை விட்டுட்டுபோய்ட்டாரு. வேற ஏதோ ஒன்னுல இடையில் பார்த்தேன். இப்ப இவரோட புதுச்சேனல் தான் சிஎன்என் ஐபிஎன். நிற்க,

விஷயம் என்னன்னா, நேத்திக்கு மீரட்டில், ஆப்பரேஷன் மஜ்னுன்னு ஒரு ஐட்டத்தை நடத்தியிருக்காங்க. அது என்னன்னா பார்க்கில் உட்கார்ந்துக்கிட்டு லவ்விக்கிட்டிருந்த காதலர்கள், குடும்பஸ்தர்கள் இவங்களையெல்லாம் அடிபின்னிக்கிட்டிருந்து ஒரு அம்மா. பளார் பளார்னு அறையறதும், முதுகில் அடிக்கிறதும். எனக்கு ஒரு நிமிஷம் இதெல்லாம் இந்தியாவில் தான் நடக்குதான்னு ஆச்சர்யம். அடிவாங்கினதுல பெரும்பாலானதுங்க பொண்ணுங்க, கல்லூரியில் படிக்கிறதுங்கன்னு நினைக்கிறேன். சின்ன சின்னதா பாக்க பாவமா இருந்துச்சு.ஏன்னா ஒரு பொம்பளை போலீஸ் இந்த மாதிரி பண்ணி, நேர்லயோ இல்லை டிவியிலோ பார்த்தில்லை ஆனால் நிறைய கேட்டிருக்கிறேன்.

திருச்சியில் கூட பவானின்னு ஒரு இன்ஸ்பெக்டர் அம்மா, ரொம்ப நல்லவங்க ஆனா சத்திரத்தில உக்காந்துக்கிட்டு, ஐஜி, ஹோலிகிராஸ், அப்புறம் இந்த தாவணிபோட்ட சீதாலட்சுமி இராமசாமியெல்லாம் ஒம்பிழுக்குறதுக்குன்னே ஒரு கூட்டம் இருக்கும். நான் கடைசி செமஸ்டர் படிக்கிறப்ப நல்லா ஞாபகமிருக்கு ஒரு போலீஸ் வண்டி சத்திரத்திலேயே நிற்கும், மப்டியில சில பொம்பள கான்ஸ்டபிள்கள்.

கொஞ்சம் பிரச்சனை பண்ணினா வண்டியில திருவிழா கொண்டாடிருவாங்க. நம்ப பிரண்ட்ஸ் இரண்டொறுத்தரு காதலிங்களோட அங்க விளையாடிக்கிட்டு(?!?!?!?!) இருக்க தர்மஅடிவாங்கினாங்க இரண்டுபேரும். ஒரு தடவை பேச்சுப்போட்டிக்கு சீப் கெஸ்டா இந்த அம்மா வந்திருச்சு, இதுல பெரிய இழவா எனக்கு வேற ஏதோவொரு ப்ரைஸ் விழுந்துருச்சு. நமக்கா கை காலெல்லாம் நடுங்குது. அப்புறமா ஒருவழியா வாங்கிட்டு கீழே வந்ததும்தான் மூச்சேவந்தது. மீண்டும் நிற்க,

ஆனால் இந்த மீரட் சம்பவத்தை நான் சிலசமயம் கர்நாடகாவில் பார்த்திருக்கிறேன். அதுவும் லால்பாக், கப்பன் பாக்கில். பெங்களூரில் வேலைசெய்தப்ப ஐந்து நாள் கடுமையா வேலையிருக்கும்அதனால நிச்சயமா வாரக்கடைசி இரண்டு நாள், கிரிக்கெட் விளையாட இந்த வகையறா பாக் ஏதாவதொன்றுக்கு போயிருவோம். அய்யோ அய்யோ, வெளிநாடெல்லாம் தோத்துறும் லால்பாக்கிற்கு, ஒரே லிப் டு லிப் கிஸ்தான், சில இடங்களில் இன்னும் கொஞ்சம் விரசமாயிருக்கும். அதைப்பத்தி சொல்ல விரும்பலை.

இதன் போன்ற காரணங்களால் ஒரு தடவை எங்க வீட்டில் இருந்து, அம்மா, அப்பா, அக்காயெல்லாம் பெங்களூர் வந்திருந்தாங்க, பின்ன புள்ள வேலைபாக்குதுல்ல வருஷத்துக்கு ஒருமுறையாவது பாக்கணுமில்லை. வீட்டில், லால்பாக் கப்பன் பார்க் கூட்டிட்டு போகச்சொல்ல நான் நௌஇந்தது எனக்குத்தான் தெரியும். திரும்பவும் ஒருமுறை நிற்க,

நான் சொல்லவந்ததோ கேக்கவந்ததோ இதுதான், பொதுஇடத்தில் இந்த மாதிரி நடக்குறத போலீஸ் தடுக்குறது சரியா தப்பான்னு தெரியலை. கர்நாடகாவில் வாட்ச்மேன்கள் குச்சுவைச்சிக்கிட்டு அதுங்க உக்காந்திருக்குற பெஞ்சில் வேகமாத்தட்டி பாத்திருக்கிறேன். கண்டபடிக்கு கெட்டவார்த்தையெல்லாம் சொல்லிதிட்டுவாங்க. ஆனால் பளார் பளார்னு அடிக்கிறத நேத்தித்தான் முதல்தடவையாப்பார்த்தேன். அதுவும் பெண்களை, ஒரு பொண்ணு அழுதுக்கிட்டே ஓடினது இன்னமும் கண்ணிலையே நிக்குது

என்னைப்பொறுத்தவரை ஜோடிகள் வெளியில் இப்படி செய்வதை சரின்னும் சொல்ல முடியலை தப்புன்னும் சொல்லமுடியலை. ஆனா அந்த போலீஸ்காரம்மா அடிச்சது தப்பாத்தான் தெரியுது. நாளயுமன்னியும் கல்யாணமாகி பொண்டாட்டியைக்கூட்டிக்கிட்டு பார்க் போறங்கல்லாம் பாத்து நடந்துக்கோங்கப்பு. அவ்வளவுதான் நான் சொல்றது. ஒன்னுக்கடக்க ஒன்னுன்னா நாம அடிவாங்கினாலும் வடிவேலுமாதிரி தட்டிவிட்டுட்டு போயிறலாம். பொம்பளையாளுங்களையெல்லாம் அடிக்கிறாங்க பாத்துக்கோங்க.

இப்ப இது பெரிய பிரச்சனை ஆய்டுச்சுன்னு தெரியுது, நேத்தி சன்டிவியில் கூட போட்டாங்க. ம்ம்ம்ம் ஒன்னுமே புரியலை உலகத்திலே.

Drive against roadside Romeos

PS: பேரு பார்த்துட்டோமுல்ல கூகுளிட்டு அது ராஜ்தீப் சர்தேசாய்
Credits: IBNlive.com

சோழர்களும் கேசரிப்பிரச்சனையும்

பராந்தகன் இறந்ததற்கும், முதலாம் இராஜராஜன் அரியணை ஏறுவதற்கும் இடையேயுள்ள காலப்பகுதி, முப்பது ஆண்டுகள் கொண்ட குறுகிய காலமாகும். ஆயினும் அது சோழ வரலாற்றின் மிகக் கடுமையான பகுதியாகும். இப்பகுதிக்கான ஆதாரங்கள் அறிஞர்களால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் முழு விவாதத்திற்கு பிறகே யார் யார் எப்போது அரியணை ஏறினர் என்பதை ஒருவாறு நிர்ணயிக்க முடியும்.

கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள்

முதலில் நமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களின் தன்மையை ஒருவாறு அறிய வேண்டும், இவற்றில் கல்வெட்டுக்கள் மற்றும் செப்பேடுகளே முக்கிய ஆதாரங்களாகும்.

இந்த காலநிலையைப்பற்றிய கல்வெட்டுக்களைத்தவிர, பல செப்புப்பட்டயங்களும் நமக்குச் சான்றுகளாக உள்ளன. இச்சான்றுகளிலிருந்து முதலாம் பராந்தகனுக்கும் இராஜராஜனுக்குமிடையேயான சோழமன்னரின் வமிசாவழியை நாம் முடிவு செய்யவேண்டும்

கண்டராதித்தன்

இராஜகேசரி கண்டராதித்தனின் ஆட்சிக்குத் திருவாலங்காடு, லெய்டன் பட்டயங்களும் திருச்சிராய்ப்பள்ளி மாவட்டத்தில் கிடைக்கும் 8-ம் ஆண்டைச்சேர்ந்த பிள்ளையார் மற்றும் ஆழ்வார் அரிகுலகேசரி தேவ என்று குறிப்பிடும், பல இராஜகேசரி கல்வெட்டுக்களும் தென் ஆற்காட்டில் கிடைக்கும் மும்முடிச் சோழ கண்டராதித்தனின் 2-ம் ஆண்டைச்சேரந்த கல்வெட்டு ஒன்றும் சான்று கூறுகின்றன.

இவனது பட்டத்தரசி

செம்பியன் மாதேவி என்ற மனைவி மூலம் பிறந்த உத்தமசோழன் என்ற சிறுகுழந்தையை விட்டுச்சென்றான். இவ்வரசி மிகுந்த சிவபக்தியுடையவள். இளவயதிலேயே தன் கணவனையும் பின் தன் மகனையும் இழந்த செம்பியன் மாதேவி, கி.பி. 1001 வரை பல ஆண்டுகள் வாழ்ந்தாள். இவ்வரசி எடுப்பித்துள்ள சிவன் கோயில்களும், இவற்றைப்பராமரிக்கும் பொருட்டு தன் மகனுடைய ஆட்சியில் விடப்பட்ட பல அறக்கட்டளைகளை இதற்கு சான்றுகூறுகின்றன.

அரிஞ்சயன்

அரிகுலகேசரி, அரிஞ்சயன் அல்லது அரிந்தமன் ஆகிய பட்டங்களின் பொருள் ஒன்றாயிருப்பதன் அடிப்பஆயில், இவை முதலாம் பராந்தகனின் இளையமகனையே குறிப்பிடுகின்றன. அரிஞ்சய பரகேசரி தன் சகோதரன் கண்டராதித்தனை அடுத்து சிறிது காலம் ஆட்சிசெய்தான்

அரிஞ்சயனைப் பொருத்தமட்டில் இவனது ஆட்சியைப்பற்றிக் கூறும் சில செப்பேடுகளுடன் 12-ம் ஆட்சிஆண்டைச் சேர்ந்த இராஜகேசரிக் கல்வெட்டு ஒன்றும் கிடைத்துள்ளது. இதன் மூலம் அரிஞ்சயன் நெடுநாள் வாழ்ந்து அரசுரிமையைப் பெற்றிருந்தபோதும், இவ்வுரிமையைச் சிறிதுகாலமே அவன் நுகரமுடிந்தது.

வீமன் குந்தவையார், கோதைப்பிராட்டியார் என்ற இவனுடைய இரு மனைவியர், இவனுக்குப்பின்னும் உயிர்வாழ்ந்து, இவனது மகனுடைய ஆட்சிக்காலத்தில் பல தானங்களைச் செய்தனர். வீமன் குந்தவை என்பவள் வேங்கிநாட்டு மன்னனாகிய இரண்டாம் வீமன் சாளுக்கியனின் புதல்வி.

சுந்தரசோழன்

அரிஞ்சயனுக்குப்பின் அவனுக்கும் அன்பில் பட்டயங்களில் கூறப்படும் அவனது ஒரே பட்டத்து அரசியான வைதும்பை இளவரசி கல்யாணிக்கும் பிறந்த ஒரே மகனே அரியணை ஏறினான். இவன் பெயர் இரண்டாம் பராந்தகச் சுந்தர சோழன். இவன், மதுரை கொண்ட இராஜகேசரி என்றும் அழைக்கப்பட்டான்.

காஞ்சிபுரத்தில் பொன்னாலான தன்னைடைய மாளிகையில் சுந்தரசோழன் இறந்தான். அதனால் அதன் பிறகு, ‘பொன் மாளிகைத் துஞ்சின தேவன்’ என்றே அழைக்கப்பட்டதாலும், இம்மன்னன் வடபகுதியில் தங்கி, தன் நாட்டின் நிலவரங்களை அயராது கவனித்தான் என்று அனுமானிக்கலாம். மலையமான்களின் வமிசத்து வானவன் மாதேவி என்ற இவன் மனைவி, கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இவளுடைய சிலை ஒன்று இவள் மகள் குந்தவையால் தஞ்சைக்கோயிலில் வைக்கப்பட்டது.

தலைகொண்ட என்பதற்குப் பொருள்

இக்காலப்பகுதியின், வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ள தலைகொண்ட என்ற சொற்றொடரின் பொருள் என்ன என்பதை காணலாம். சோழ மன்னன் ஒருவனின் தலையைக் கொண்டதாக, வீரபாண்டியனும், வீரபாண்டியனது தலையைக்கொண்டதாக மற்றவரும் கூறியிருக்கின்றனர்.

பாண்டிய மன்னனால் தலையை வெட்டி எறியப்பட்ட சோழ மன்னர் யார் என்பதைப்பற்றி சர்ச்சைகள் இருந்துவருகின்றன. ஆனால் இந்தச் சொற்றொடர், தன்னை வெற்றிகொண்ட மன்னனிடம் தன் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் வகையில், ஒரு மன்னன் தலைசாய்ந்து நிற்பதையே குறிக்கும்.

இதே காலத்தில், இரண்டாம் ஆதித்தன் வீரபாண்டியனைப் போரில் கொன்று, வெட்டப்பட்ட அவனுடைய தலையைச் சோழநாட்டின் தலைநகருக்குக் கொணர்ந்தான் என்று திருவாலங்காட்டுப் பட்டயங்கள் திட்டவட்டமாகக்கூறுகின்றன. இவ்வாறிருக்க ‘தலைகொண்ட’ என்ற விருதை வீரபாண்டியன் ஏற்றிருப்பது தான் ஒரு சோழ மன்னன் அல்லது இளவரசன் மீது தற்காலிகமாகக்கொண்ட வெற்றியைப் புகழ்ச்சியுடன் கூறிக்கொள்வதையே குறிக்கும்.

கேசரி பிரச்சனை

அதாவது சோழ மன்னர்கள் தங்களின் பெயர்களுக்கு பின்னால் பரகேசரி, மற்றும் இராஜகேசரி என்ற பட்டப்பெயர்களை ஒரு ஒழுங்குமுறையில் வைத்துக்கொண்டனர். அதாவது பட்டத்தில் இருக்கும் மன்னன் இராஜகேசரியாக இருந்தால் அடுத்து பட்டத்திற்கு வரும் மன்னர் பரகேசரி. இது அப்படியே அடுத்த முறை மாறும் அதாவது இராஜகேசரியாக. இப்பொழுது உள்ள பிரச்சனையைப் பார்ப்போம்.

அதாவது, மதுரை கொண்ட இராஜகேசரி என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுவது யார்? என்பதைப்பற்றிய கேள்வி. கண்டராதித்த இராஜகேசரி, ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்று கல்வெட்டுக்களில் உள்ளது.

பராந்தகன், வாழ்நாளிலேயே இராஜாதித்தன் இறந்தபிறகு, இளவரசுப்பட்டம் பெற்ற இவனது ஆட்சி தொடங்கி இருக்கவேண்டும். கண்டராதித்தன் ஒரு பரகேசரி என்றும் திருவாலங்காட்டு பட்டயங்களில் இவனுக்கு அடுத்துக் கூறப்பட்டுள்ள அரிந்தமனே, மதுரை கொண்ட இராஜகேசரி ஆவான் என்றும் கருதப்படுகிறது.

ஆனால் ஏற்கனவே கூறியபடி இந்தவாதம் தவறானது. இராஜாதித்தன், இளவரசுப்பட்டம் பெற்ற பொழுது இராஜகேசரி விருதைப் பெற்றிருக்கலாம், ஆனால் இவன் தன் தந்தைக்கு முன்பே இறப்பதனால், இவனுடைய விருதையே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனால் பராந்தகப் பரகேசரியை அடுத்தவந்த மன்னன், ஒரு இராஜகேசரியே ஆவான் கண்டராதித்தன் ஒரு இராஜகேசரியே என்பது பொதுவான கருத்தாகவே உள்ளது என்றாலும். இது இராஜாதித்தன் தன் தந்தைக்கு முன்பே இறந்ததன் விளைவே இது என்பது தளிவாக உணரப்படவில்லை.

அரியணையில் அமர்ந்திருக்கும் மன்னர் இராஜகேசரியா? அல்லது பரகேசரியா? என்பதைப் பொறுத்தே இளவரசனோ அல்லது இளவரசர்களோ, இராஜகேசரி அல்லது பரகேசரி என்ற விருதினை ஏற்ற வழக்கத்திலிருந்து, வாரிசுப்பிரச்சனையை நாம் தளிவாக தீர்க்கமுடியும்.

அரிஞ்சயனின் மகன் சுந்தரசோழன் ஒரு இராஜகேசரி என்று அன்பில் பட்டயங்கள் கூறுகின்றன. இவனே மதுராந்தகன் என்ற பட்டத்தையும் பெற்றிருந்தான். இவன் பாண்டியர்களுடன் போரிட்டான் என்பதையே ‘பாண்டியனை சுரம் இறக்கின‘ என்ற இவனுடைய பட்டத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். இக்குறிப்புக்களின் படி, இரண்டாம் பராந்தகச் சுந்தரசோழனே இவன் எனவும். இவனுடைய கல்வெட்டுக்கள் சிலவற்றில் மதுரை கொண்ட இராஜகேசரி எனக் குறிப்பிடப்பட்டான்.

சாமுராய்கள் & Last Samurai, The (2003)

சாமுராய்கள் பற்றி நான் முதன்முதலில் அறிந்தது பள்ளிப்பருவத்தில் இரண்டாம் உலகப்போரைப் பற்றி ஆசிரியர் சொல்லிக் கொண்டிருந்த பொழுது அமேரிக்கா ஜப்பானின் மீது அணுகுண்டு போட்டதற்கான காரணங்களில் ஒன்றாக குறிப்பிட்டது எனக்கு மிகுந்த ஆச்சர்யமளித்தது. அதாவது ஜெர்மானியர்களையோ இத்தாலியர்களையோ போலில்லாமல், ஜப்பானியர்கள் இறக்கும் வரை போரிடுபவர்கள் என்றும் 1945ன் இறுதிகளில் ஜெர்மனி, மற்றும் இத்தாலி சரணடைந்துவிட ஜப்பானியர்கள் மட்டும் சரணடையாமல் இறக்கும் வரை சண்டையிட முடிவுசெய்ததாகவும். அமேரிக்கா ஜப்பானிற்குச் சென்று தரைவழியாகவோ, கடல்வழியாகவோ ஜப்பானை வீழ்த்துவதன் பொருட்செலவும் நேரத்தையும் கருத்தில் கொண்டு ஜப்பானை சரணடையச்செய்யவே அணுகுண்டு போட்டது என்பதான ஒன்றை என் வரலாற்று ஆசிரியர் சொல்லியிருந்தார்.

அந்தக்காலத்தில் ஆசிரியர் சொல்வதே வேதவாக்கு, எதிர்த்து கேள்வி கேட்கவோ, இல்லை அதற்கு எதிரான ஒன்று இருக்குமென்றோக்கூட அறியாத வயது அது. அப்படி ஜப்பானியர்கள் சண்டை செய்ததற்கு முக்கிய காரணமாக ஆசிரியர் சொன்னது, ஜப்பானியர்கள் அனைவரும் சாமுராய்கள் என்று அதாவது தோல்வியை ஏற்றுக்கொள்ளாதவர்கள், சாகும்வரை போராடுபவர்கள். அதே போல் சரணடைந்தபிறகு ஜப்பானிய மன்னர், மக்களிடம் அவர்களை காப்பாற்ற முடியாததற்கு மன்னிப்பு கேட்டதாகவும் சொல்ல மனதில் ஜப்பானியர்கள் பற்றிய மதிப்பு அதிகமானது. உண்மையில் ஜப்பானியர்களைப்பற்றியோ, சாமுராய்களைப்பற்றியோ எதுவுமே தெரியாத நிலையில் ஏற்பட்ட ஒரு ஆர்வம் அது.

சாமுராய்

சாமுராய் எனப்படுவது ஜப்பானில் தொழிற்மயமாக்கத்திற்கு முன் இருந்த ஜப்பானிய ராணுவத்தில் இருந்துவந்த ஒரு இனத்திற்கான பட்டம். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரை இந்த வகையான சாமுராய்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர். புஷிடோ என்ற அறியப்படும் இந்தச் சட்டம் சாமுராய் என்பவர் எப்படி வாழவேண்டும், அவர்களுடைய ஒழுக்கமுறைகளை எப்படிப்பட்டவை எனக்குறிப்பிடுகிறது.

சாமுராய்களின் மிகப்பிரபலமான செயலான, தோற்றுப்போய்விட்டால் எதிரியிடம் சரணடையாமல், தன்னைத்தானோ அல்லது மற்ற சாமுராய்களின் வாளாலோ கொல்லப்படுவது கூட அவர்களுடைய சட்டதிட்டங்களில் ஒன்றே. இதில் செபுக்கு என குறிப்பிடப்படும் முறையில் அவர்களின் வயிற்றில் இடத்திலிருந்து வலமாக வெட்டி சரணடையாமல் கொல்லப்படுவர். இதுவே பெண்கள் இந்த செபுக்குவை செய்யும் முறை வேறுபடும், அவர்கள் தங்களின் வாய்வழியாக வாளை நுழைத்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அதற்கு முன்னர் அவர்களுடைய கால்கள் கயிற்றால் பிணைக்கப்படும், ஏனென்றால் அவர்களின் இறப்பிற்கு பிறகு அவர்களின் உடல் தவறான பார்வைக்கு உள்ளாவதைத் தடுக்கவே. சாமுராய்களின் ஒழுக்க முறைகளில் மிகவும் முக்கியமானது ஒரு தலைவருக்கு கீழ்படிந்து வாழ்வது, சுயக்கட்டுப்பாடு, மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய, புராதனக் கோட்பாடுகளுடன் வாழ்வது. இவர்கள் பெரும்பாலும் மன்னர்களின் பாதுகாவலர்களாகவும் அவர்களின் சேவகர்களாகவுமே இருந்து வந்தனர்.

ஹியான் காலம் (794 – 1185)

சாமுராய்களின் தேவை இந்தக்காலத்தில் அதிகரித்தது, நிலச்சுவாந்தார்கள் அவர்களுடைய உடைமைகளைப்பாதுகாக்க இதுபோன்ற சாமுராய்களை வேலைக்கு அமர்த்தினர். இந்தக்காலத்தின் முடிவில் இருபெரும் சாமுராய் இனம் இருந்துவந்தது. ஒன்று மினமோட்டோ இனம், மற்றொன்று டைய்ரா இனம். இவர்கள் ஜப்பானின் பெரும்பகுதியை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். பிறகு தங்களுக்கிடையில் ஆதிக்கத்திற்கான போட்டியில் ஈடுபட்டுவந்தனர்.

கமாகுரா காலம்(1192 – 1333)

கி.பி. 1185ல் மினமோட்டா இனத்தினர் டைய்ரா இனத்தினரை வென்றனர். இதன் காரணமாக மினமோட்டா யோரிட்டோமோ ஒரு இராணுவ ஆட்சியை காமகுரா காலத்தில் தோற்றுவித்தார். ஷோகுன் எனப்படும் இராணுவத்தின் உயர்ந்த அதிகாரியாய் இருந்ததால் அவர் ஜப்பானின் மன்னராக தன்னை அறிவித்துக்கொண்டார்.

முரோமச்சி காலம்(1333 – 1573)

இந்தக் காலத்தில் ஜப்பானின் பல உள்பிரிவுகளாக பிரிந்து தனித்தனியா சாமுராய் இனங்களின் கையில் இருந்துவந்தது. இவர்கள் தங்களுக்கிடையில் பெரும்பாலும் போரிட்டு தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்தனர். இந்தக்காலத்தில் சாமுராய்களின் ஆதிக்கம், அல்லது தேவை அதிகமாகயிருந்தது. போர்காலத்தைத்தவிர இடைப்பட்ட காலத்தில் சாமுராய்கள் நிலங்களில் விவசாயமும் செய்துவந்தனர்.

அகிரா குரோசோவா எடுத்தப்படங்கள் பெரும்பான்மையானவை இந்தக்காலத்தைப்பற்றியதுதான்.

அழுசி-மோமோயாமா காலம்(1573 – 1603)

டோயோடோமி ஹிடேயோஷி ஜப்பானின் சிறுசிறு பகுதிகளை ஒன்றிணைத்தப்பின், மக்களை இனவகைப்படுத்தும் முறையை தோற்றுவித்தார். இதுபின்னர் டோகுகவா லேயாசு என்பவராலும் அவருடைய வழித்தோன்றல்களாலும் நிறைவேற்றப்பட்டது. ஹிடேயோஷி சாமுராய்களை வகைப்படுத்தினார் அதாவது விவசாயம் செய்யும் சாமுராய்களையும், போரிடும் சாமுராய்களையும் வேறுபடுத்தினார். அதற்குப்பின்னர் போரிடும் சாமுராய்கள் மட்டும் தான் வாளை அணிந்திருக்கலாம் என்ற சட்டத்தையும் கொண்டுவந்தார்.

இடோ காலம்(1603 – 1868)

இந்தக்காலத்தில் மக்களின் இனப்பாகுபாட்டில் முதல் இடத்தில் இருந்தவர்கள் சாமுராய்கள், இவர்களுக்குப்பின்னர் விவசாயிகள், கலைஞர்கள், மர மற்றும் இரும்பு வேலை செய்பவர்கள் என ஜப்பானிய இனப்பாகுபாடு இருந்துவந்தது.

அவர்களின் நிரந்தர குடியிறுப்பு பிரதேசத்தை உருவாக்கிக் கொள்ள கட்டுப்படுத்தப்பட்டார்கள் சாமுராய்கள். பின்னர் அவர்களுக்கான கூலி தானியங்களாய் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் அவர்களின் நிரந்தரக்குடியிறுப்பு சிறிது சிறிதாக அழிக்கப்படத்தொடங்க, 1615ல் டோகுகவாவின் எதிரி அழிக்கப்பட்டுவிட, ஒருவகையான அமைதியான சூழ்நிலை ஜப்பானில் தொடங்கப்பட்டது. பின்னர் இது 250 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. இதன் காரணமாக சாமுராய்களின் தேவை இல்லாமல் போனது. சாமுராய்கள் போரிடுவதை விட்டுவிட்டு மற்ற தொழில்களை செய்பவர்களாக மாறினர். கிட்டத்தட்ட 1868ல் ஜப்பானில் சற்றேறக்குறைய சாமுராய் இனம் வழக்கொழிந்தது.

சாமுராய்களின் கொள்கை

ஆரம்பக்காலத்தில் இருந்து புத்த மதக்கொள்கை மற்றும் ஜென் கொள்கைகளைப் பின்பற்றி வந்தனர் சாமுராய்கள் அதேசமயம், மிகக்குறைவாக கன்பூஷியஸின் மற்றும் ஷின்டோவின் கோட்பாடுகளும் இவர்கள் வாழ்க்கையில் பின்பற்றப்பட்டிருக்கிறது.

ஆயுதங்கள்

சாமுராய்களைப்பற்றிய கதைகளைப்போலவே அவர்களுடைய ஆயதங்களைப்பற்றிய கதைகளும் அதிகம். ஆரம்பத்தில் பார்த்த புஷிடோவின் வழிகாட்டுதலில் சாமுராய்களின் ஆத்மாவானது அவர்கள் பயன்படுத்தும் கடனா என்ற முக்கியமான வாளில் இருப்பதாக சொல்லப்பட்டது. அதேபோல் சாமுராய்கள் அந்த வாளுக்கு கட்டுப்பட்டவர்கள், அவர்களை வழிபடுத்துவதின் ஒரு முக்கிய பங்கு அவர்களின் வாளிற்கு உண்டென்பதைப்போன்ற தத்துவங்கள் ஜப்பானில் நிறைய இருந்துவந்துள்ளது.

இந்த கடானா என்றழைக்கப்படும் வாளை உருவாக்குவதற்கு சில குறிப்பிட்ட முறைகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர் சாமுராய்கள். அதன் நீளம், அகலம், வலிமை பற்றிய நிறைய விதிமுறைகள் இருந்துவந்துள்ளது. சாமுராய்களைப்போலவே கடானாவின் வடிவமும் ஆரம்பக்காலத்தில் இருந்தே நிறைய மாறுபாடுகளை சந்தித்துவந்துள்ளது.

இந்த கடானாவைத்தவிர வில், பிச்சுவா, சிறிய கத்திகள் போன்றவற்றை சாமுராய்கள் பயன்படுத்திவந்துள்ளனர்.

த லாஸ்ட் சாமுராய்

இந்தப்படம் 2003ல் வெளிவந்தது, பெரும்பாலான டாம் படங்களைப்போலவே இந்தப்படத்தையும் நான் வெளியான சில வாரங்களில் பார்த்திருந்தேன். சில படங்கள் நமக்குள் தீவிரமான ஒரு அதிர்வை உருவாக்கும் என்னைப்பொறுத்தவரை என்னில் கொஞ்சம் அதிர்வை உண்டாக்கிய படம் இந்த த லாஸ்ட் சாமுராய்.

இந்தப்படம் நான் பார்த்த டாம் படங்களில் மிகச்சிறந்ததொன்றும் கிடையாது, போர்க்காட்சிகள் சம்மந்தபட்ட காட்சிகளின் படியும் நான் பார்த்த மிகச்சிறந்த படமாக இதைச்சொல்லமுடியாது. ஆனால் இதையெல்லாம் மீறிய ஒன்று இந்தப்படத்தில் எனக்குப்பிடித்திருந்தது.

நாதன் அல்கெரன், ஜார்ஜ் ஆர்ம்ஸ்டிராங் கஸ்டர்(உண்மை கதாப்பாத்திரம்) என்னும் கமெண்டரின் கீழுள்ள இராணுவத்தின் ஒரு தளபதி, படத்தில் அவருடைய மிகப்பிரபலமான ‘பாட்டில் ஆப் லிட்டில் பிக்ஹார்ன்’ ல் பங்குபெற்றதாக அறியப்படுபவர். இவர்களுடைய ராணுவம் அமேரிக்க சிவில் யுத்தம் மற்றும் இந்தயப்போர்களில் பங்குபெற்றது. குறிப்பிட்ட அந்தப்போரில் மிகக்குறைவான தன்னுடைய படையை அமேரிக்கப்பழங்குடியினரின் பெரும் படையை எதிர்த்து போரிடவைக்க அவரின் படை நிர்மூலமாக்கப்பட்டது. தோல்வி முன்பே தெரிந்திருந்தும் இந்தப்போரில் கலந்துகொண்ட கஸ்டரின் ஒரு படைப்பிரிவு தளபதி தான் நாதன் அல்கெரன். நன்றாகத்தெரிந்தும் இப்படி சக போர்வீரர்களை இழந்ததால் தன்னுடைய ஏதோவொன்றை தொலைத்ததைப்போல் இருக்கும் அல்கெரன் தன்னுடைய தளபதி பதவியில் இருந்து விலகி, துப்பாக்கிகள் பற்றிய காட்சிகளை நடத்துபவராக இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ஜப்பானின் மன்னர், தன்னுடைய படைகளுக்கு துப்பாக்கி பயிற்சியளிக்க விரும்ப அதற்காகச் செல்லும் அல்கெரனின் மற்றுமொறு முன்னால் கமெண்டர் அவரையும் தன்னுடன் வருமாறு அழைக்க சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அல்கெரன் ஜப்பான் வருகிறார். இங்கே தொடங்கும் கதை.

இங்கே ஜப்பான் வந்ததும் மன்னரின் படைகளுக்கு அல்கெரன் பயிற்சியளித்துக் கொண்டிருப்பார். பயிற்சியின் ஆரம்ப நிலையிலேயே மன்னர் தன்னுடைய படைகளை தன்னுடைய எதிரியான சாமுராய் கட்ஸுமோட்டோவிற்கு எதிராக போர்புரிய அனுப்புவார். அல்கெரன் எவ்வளவோ தடுத்தும் அனுப்பும் படைகள், துப்பாக்கிகள் கைவசம் இருந்தும் சண்டையில் சாமுராய்களின் வாள், அம்பு, மற்றும் வேல்களுக்கு பலியாகி பாதிபேர் சண்டையிலிருந்த உயிர்பிழைக்க ஓடிவிடுவார்கள். கடைசிவரை சண்டை செய்யும் அல்கெரனை கொல்ல வரும் சாமுராயின் மருமகன் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் அல்கெரனால் கொல்லப்படுவார்.

பின்னர் அல்கெரனை பழிக்குப்பழி வாங்காமல், சாமுராய் கட்ஸுமோட்டோ தன்னுடன் பிணைக்கைதியாக அழைத்து சென்றுவிடுவார். பின்னர் சாமுராய்களின் இடத்திற்கு வந்ததும் அவருக்கு சண்டையில் கிடைத்த காயங்களை குணப்படுத்தப்பட்டு, சிறிது சிறிதாக அவர் சாமுராய்களின் நல்லெண்ணத்தைப்பெறுவார். பின்னர் கடைசியில் சாமுராய்களுக்கும் மன்னரின் படைகளுக்கும் இடையில் நடக்கும் சண்டையில் சாமுராய்களின் சார்பாய் பங்கேற்பார். சண்டையில் அல்கெரன் தவிர மற்ற அனைவருமே கொல்லப்படுவார்கள் சாமுராய் உட்பட. இதுதான் கதை.

எனக்கு இந்தப்படத்தில் டாமின் நடிப்பைவிட, கட்ஸுமோட்டோவாக நடித்த கென் வாட்டனபேவின் நடிப்பு பிடித்திருந்தது. தன்னுடைய இருப்பை மிகப்பிரமாதமாக படத்தில் வெளிப்படுத்தியிருப்பார் வாட்டனபே, அதுவும் குறிப்பாக அல்கெரனுக்கும் கட்ஸJமோட்டோவிற்கும் இடையில் நடக்கும் அந்த உரையாடல்களில் பிரமாதப்படுத்தியிருப்பார். சாமுராய்களின் வாழ்க்கை முறைகளை இயக்குநர் மிகஅழகாக வெளிப்படுத்தியிருப்பார். இந்தப்படம் படமாக்கப்பட்ட விதத்திலும் அழகாகயிருக்கும்.

டாம் வாள்பயிற்சியில் ஈடுபட்டிக்கும் பொழுது செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி கட்ஸJமோட்டோவின் மகன், சொல்லும் விஷயங்கள் நன்றாக இருக்கும்.”Mind the sword, Mind the people, Mind the Enemy, three many minds.” அதேபோல் தனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு உதவி செய்துவருவது. சண்டையில் தான் கொன்ற சாமுராயின் மனைவிதான் எனத்தெரிந்து கொண்டவுடன் டாம் படும் அவஸ்தைகள் நன்றாகயிருக்கும்.

கட்ஸுமோட்டோவை அவருடைய இருப்பிடத்தில் வந்து கொல்ல முயலும் காட்சியின் பொழுது நடக்கும் சண்டையும், பின்னர் ஜப்பானிய மன்னரிடம் சென்று தன்னுடைய சேவையைப் பெற்றுக்கொள்ளக்கேட்கும் கட்ஸுமோட்டோவைக் கைது செய்து வைத்திருக்க அவரைக்காப்பாற்ற நடக்கும் சண்டையும் இந்தப்படத்தில் எனக்குப்பிடித்த சண்டைக்காட்சிகள். இந்தப்படம் பெரும்பான்மையான இடங்களில் அல்கெரன் கதைசொல்வதாக நகரும். கடைசியில் அவருடன் ஜப்பானுக்கு வரும் டிமோத்தி ஸ்பெல் சொல்வதாக முடியும், டிமோத்தியின் கதாப்பாத்திரமும் மிகஅழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். படத்தின் இயல்பிற்கு மிகஅழகாக இவர் செய்யும் சில நகைச்சுவைக்காட்சிகள் இருக்கும்.

சாமுராய்களைப்பற்றிய என்னுடைய ஆர்வமும் இந்தப்படம் எனக்கு பிடித்திருந்ததற்கான ஒரு முக்கிய காரணமம். முன்பே சொன்னதுபோல் படமாக்கப்பட்ட முறைதான் இந்தப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒருமுறை நிச்சயமாக பார்க்கவேண்டிய படம்தான் த லாஸ்ட் சாமுராய்.

இயக்கம் எட்வேர்ட் ஸ்விக், கதை ஜான் லோகன், மார்ஷல் எர்க்ஸ்கோவிட்ஸ், எட்வேர்ட் ஸ்விக், கதை ஜான் லோகன் எழுதிய ஒரு கதையின் தழுவலில் எடுக்கப்பட்டது. டாம் குரூயிஸ், டிமோத்தி ஸ்பெல், கென் வாடனபே, கொயுகி ஆகியோர் இந்தப்படத்தில் நடித்திருந்தனர்.

சின்டிரெல்லா மேன்

சின்டிரெல்லா மேன், இந்த படத்தைப்பற்றிய எதிர்பார்ப்பு சிலகாலமாகவே இருந்து வந்தது, இதற்கு முக்கியமான சில காரணங்களும் உண்டு. ரான் ஹோவார்ட் இயக்கத்தில், ரஸல் குரோ நடிப்பதால் வந்த எதிர்பார்ப்பு. இவர்களின் சேர்க்கையில் வந்த ‘A Beautiful Mind’ படம் எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததால். இந்த படத்தையும் பார்க்கவேண்டும் எண்ணம் ஆரம்பத்திலேயே எழுந்தது.

இது அமேரிக்காவின் டிப்ரஷன் எராவில் நடந்த ஒரு குத்துச்சண்டை வீரனைப்பற்றிய உண்மைச் சம்பவத்தைப்பற்றிய படம். அமேரிக்க மக்கள் முட்டிக்காலில் நின்றுகொண்டிருந்த பொழுது அவர்களை தன் பாக்ஸிங் திறமையால் நுனிக்காலில் நிற்கவைத்தவர் என்ற பெருமை பெற்ற ஜேம்ஸ் பிராட்டாக் பற்றிய உண்மைச் சம்பவங்களை உள்ளடக்கிய படம் தான் சின்டிரெல்லா மேன்.

படத்தின் தலைப்புக்கு கவித்துவமான விளக்கம் உண்டு, அதாவது ஜேம்ஸ் பிராட்டாக் சிறிய அளவிலான பாக்ஸராக இருந்து உலகத்தின் ஹெவிவைட் சாம்பியனானது ஒரு கற்பனைக்கதையைப் போன்றதாகவே இருந்தது. தன்னுடைய முப்பதாவது வயதில், பாக்ஸிங் ரிங்கில் தன்னுடைய தாக்குதலால் இரண்டு நபர்களை கொன்றதாக பெயர்பெற்ற மாக் பியரரை வென்றது ஹெவிவைட் பாக்ஸிங்கில் இன்றும் குறிப்பிடப்படும் ஒரு மிகப்பெரிய வெற்றி. போட்டிக்கு முன்பு 1/10 மட்டுமே வெல்வதற்காக பெற்றிருந்த பிராட்டாக் வென்றது பாக்ஸிங்கின் மிகப்பெரிய அப்செட் இன்றைக்குவரைக்கும்.

மில்லியன் டாலர் பேபியைப்போன்றோ, இல்லை அதற்கு முன் வந்த பாக்ஸிங் படங்களில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டது இந்த சின்டிரெல்லா மேன். படத்தில் பாக்ஸிங் இடம்பெற்றிருந்தாலும். ஜேம்ஸின் வாழ்கையைத்தான் இயக்குநர் வெகுவாக படமாக்கியிருப்பார். அவருடைய ஏழ்மை, அமேரிக்காவின் தொழில் முடக்கம் இப்படியாக.

படம் 1929ல் ஜேம்ஸ் லைட்வைட் சாம்பியன்ஷிப்பிற்காக மோதும் போட்டியில் தொடங்கும். அப்பொழுது அவர் குடும்பம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ தேவையான பணத்தை சம்பாதித்துக்கொண்டு இருக்கும் பிராட்டாக், பிறப்பில் ஒரு ஐரிஷ். பின்னர் நடக்கும் அமேரிக்க ஸ்டாக் மார்க்கெட் இழப்பில் சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் அளவிற்கு போய்விடும். பின்னர் சாப்பாட்டிற்கு கூட காசில்லாமல், தன்னுடைய வலது கையில் அடிபட்டிருக்கும் நிலையிலும் சண்டையில் பங்கேற்று கையை உடைத்துக்கொள்ளும் பிராட்டாக்கின் பாக்ஸிங் லைசன்ஸ் ரத்துசெய்யப்படும்.

இந்தச் சமயத்தில் அவர் குடும்பம் மின்சாரத்திற்கு கூட பணமில்லாமல் வீட்டில் இருந்து இணைப்புத்துண்டிக்கப்படும். இப்படியாக மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு பாக்ஸிங் வீரரின் முன்னறிவிப்பில்லா விலகலில் மீண்டும் பாக்ஸிங் செய்ய பிராட்டாக்கிற்கு ஒருவாய்ப்பு வழங்கப்படும். பின்னர் அந்தப்போட்டியில் வெற்றி பெற்று பிராட்டாக் எப்படி உலக ஹெவிவைட் சாம்பியன்ஷிப்பிற்கான போட்டியில் மாக்ஸ் பியரரை வெல்கிறார் என்பதே கதை.

கொஞ்சம் மென்மைத்தன்மையுள்ள பாக்ஸராக பிராட்டாக்கின் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஆஸ்கர் வின்னர் ருஸல் குரோ, குறிப்பாக சில காட்சிகளில் வசனங்கள் இல்லாமல் தன்னுடைய முகபாவத்திலேயே பேசும் பொழுது பின்னுகிறார். அவருடைய மனைவியாக மற்றொருமொறு ஆஸ்கர் வின்னர் ரெனி ஷெல்வேக்கர் கொஞ்சம் ஓவராகத் தெரிந்தாலும் பரவாயில்லை செய்திருக்கிறார், கொஞ்சம் கஷ்டமான கதாப்பாத்திரம், இருந்தாலும் பரவாயில்லை லெவல்தான். பிராட்டாக்கின் மேனேஜராக பவுல் கிமாட்டி நடித்திருக்கிறார் அவரின் திறமை பல காட்சிகளில் பளிரிடுகிறது. பாக்ஸிங் போட்டிகளில் காமிராவின் கோணங்கள் எனக்கு கொஞ்சம் புதியதாய்ப்பட்டது. மற்றபடி இயக்குநரின் திறமை படமாக்களில் தெரியத்தான் செய்கிறது.

தன் மகன் சாப்பாட்டிற்காகத் திருடிவிடும் சூழ்நிலையில், எக்காரணம் கொண்டும் அவனை மனைவியின் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு அனுப்பமாட்டேன் என்று சொல்லும் காட்சி நன்றாய் இருக்கும். பிறகு ஹெவிவைட் சாம்பியன்ஷிப்போட்டிக்கு முன் நடக்கும் பேட்டியில், தான் சண்டையிடுவதும் வெற்றிபெறுவதும் தன் குடும்பத்திற்கு தேவையான பாலை(சாப்பாட்டை) தரவே என்று சொல்லும் காட்சியும் நன்றாய் இருக்கும்.

இதுபோல இயக்குநரின் டச் சில இடங்களில் தெரியும், பாக்ஸிங் படமாதலால் கொஞ்சம் கெட்டவார்த்தைகள் நிரம்பிய படம் தான் இதுவும்.

பிராட்டாக் அந்தப்போட்டிக்கு பிறகு, இரண்டாண்டு கழித்து தன் ஹெவிவைட் சாம்பியன்ஷிப்பை ஜான் எஹுன்றி லீவிஸிடம் இழந்தார். ஆனால் அந்தப்போட்டியில் கிடைத்த பணத்தில் கடைசிவரை அவர் வாழவழிகிடைத்தது. அதன்பிறகு அவர் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வுபெற்றார். இவருடைய திறமையைக் கருத்தில் கொண்டு அமேரிக்க அரசு இவருடைய படம் இடம்பெற்றுள்ள தபால்தலையை வெளியிட்டது.

இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் போட்டியில் ரஸல் மற்றும் ரோன் ஹோவார்ட் இருக்கிறார்கள் இந்தப்படத்திற்காக கிடைக்குமா தெரியவில்லை. மற்றபடிக்கு ரோன் ஹோவார்டுக்காகவும் ரஸல் குரொவுக்குமாக ஒருமுறை நிச்சயமாய்ப் பார்க்கலாம்.

References

http://movies.yahoo.com
http://en.wikipedia.com
http://www.jamesjbraddock.com