déjà vu

மோகனுடைய காத்திருப்பு ஒரு முடிவுக்கு வந்திருந்தது. இன்றோடு அவன் காத்திருக்கத் தொடங்கி சரியாய் ஏழாண்டு நிறைவடைகிறது. இன்று அவனுக்கு விடுதலை நாள், தான் செய்த கொலைக்கான தண்டணைக்காலம் இன்றோடு முடிவடைகிறது என்பதற்காக மட்டும் அவன் இந்த நாளுக்காக காத்திருக்கவில்லை. அவன் செய்த கொலையையே இல்லாமல் செய்துவிடும் வல்லமை பெற்ற நாள்தான் என்பதற்காகவும்தான்.

இன்னும் அந்த நாள் பசுமையாக அவன் மனதில் இருக்கிறது. அவனுடைய நண்பனுக்கும் அவனுக்குமிடையில் ஏற்பட்ட தொழில்முறை பிரச்சனைகளின் காரணமாக, ஒரு அசாதாரணமான சூழ்நிலையில் மோகன் அவன் நண்பனை கொன்றுவிட்டான். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒரு நிமிட குழப்பத்தில் அவன் அந்தக்கொலையை செய்துவிட்டான். அணுஆயுதப்போரால் உலகமே பேரழிவுக்கு உட்பட்டிருந்த காலமது. உயிரின் மதிப்பு மிக அதிகமாகயிருந்தது. அவனுடைய நண்பன் அவனை ஏமாற்றியிருந்த பொழுதும் அது சரிவர நிரூபிக்கப்பட்ட பொழுதும் அவனுக்கு ஏழாண்டு காலம் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. மனித குலமே அழிவின் பிடியில் இருந்ததால், உலகின் எல்லா நாடுகளிலுமே மரணதண்டனை இல்லாமல் இருந்தது.

முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் என்று மோகன் படித்திருந்த உலகப்போர்கள் நடந்துமுடிந்த மூன்றாவது நூற்றாண்டில் பூமியை பெரும் ஆபத்திற்குள்ளாக்கிய அணுஆயுதயுத்தம் நடைபெற்றது. ஒரு நூற்றாண்டாகவே எதிர்பார்க்கப்பட்ட யுத்தம் நடந்தது பலருக்கு வியப்பை அளித்திருக்கவில்லை. ஆனால் அதன் பிறகு கணிணித்துறை மிக அபரிமிதமான வளர்ச்சியை அடைந்திருந்தது. ஐன்ஸ்டினின் புவியீர்ப்பு விசையையும், க்வாண்டம் சக்திகளையும் ஒரே சமன்பாட்டில் ஒருமித்து அறியும் ஆசை நிறைவேறியிருந்தது. க்வாண்டம் கம்ப்யூட்டர்கள் செயல்பாட்டிற்கு வந்திருந்தன.

ஸ்டிரிங் தியரி என அறியப்படும் பல பரிமாணக் கொள்கை அதன் எல்லைகளைத் தொட்டிருந்த காரணத்தினால், வார்ம்«?£ல் எனப்படும் மனிதன் கடந்த காலத்தை நோக்கி பயணம் செய்யும் உதவும் இயந்திரங்கள் உருவாக்கபட்டிருந்தன. இதன் காரணமாக ஐன்ஸ்டனின் சில கோட்பாடுகள் தவறானவை என்றும் நிரூபிக்கப்பட்டிருந்தன. அதாவது விண்வெளி வளைந்திருக்கிறது என்று சொன்ன ஐன்ஸ்டின் விண்வெளியை நீட்டவோ மடக்கவோ முடியுமென்றார். ஆனால் விண்வெளியை சிறிய அளவில் வெட்டுவதென்பது முடியாதென்று நம்பியிருந்தார். ஆனால் ஸ்டிரிங் தியரி விண்வெளியை சிறிய அளவில் வெட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை நிரூபித்திருந்தது. நாம் சாதாரணமாய் அறிந்திருந்த முப்பரிமாணங்களை விடவும் அதிகமான பரிமாணங்களாலும் நாம் இதுவரை அறிந்திராத இடங்களாலும் நாம் சூழப்பட்டிருக்கிறோம் என்பதான ஒன்றை ஸ்டிரிங் தியரி விளக்கியது.

கடந்த காலத்தை நோக்கி பயணம் செய்யும் ஊர்திகள் கண்டறியப்பட்டிருந்தாலும், அதன் துணை கொண்டு வரலாற்றை மாற்ற நினைக்கும் முயற்சிகளை அடியோடு நிறுத்திவிடும் எண்ணத்தால் இதன் அத்தனை செயல்பாடுகளும் கணிணிமனிதர்களால் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. அதாவது ஆரம்பக்காலத்தில் நடைபெற்ற பரீட்சிதார்த்த முயற்சிகள் உட்பட்ட, மனிதனால் நடைபெறக்கூடிய சிறு தவறுகளும் நடைபெற்று விடாமல் இருப்பதற்காக கணிணிமனிதர்களால் கட்டுப்படுத்தப்பட்டு, வரலாறு மாற்றப்படுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, சோதனை முயற்சியாக கொலைகள் நடந்து அதற்கான தண்டனையை கொலைசெய்த நபர் அனுபவித்துவிட்ட நிலையில் கடந்த காலத்திற்கு செல்லும் ஊர்திகளைப் பயன்படுத்தி அந்த கொலை நடந்ததற்கு சில விநாடிகளுக்கு முன்னர் சென்று அந்தக் கொலைகளை நிறுத்திவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டுவந்தன. ஆனால் இதிலும் சில விதிமுறைகள் இருந்தது, அதாவது கொலை செய்த மனிதனின் மனதிலிருந்து, அவன் கடந்த காலத்தில் கொலை செய்த அந்த நொடியிலிருந்து சோதனை முயற்சிக்கான காலம் வரையிலான நினைவுகள் அகற்றப்படும். அவன் அந்தக்கொலை செய்த குறிப்பிட்ட நிமிடத்தில் எப்படிப்பட்ட மனநிலையில் இருந்தானோ அதே மாதிரியான ஒருமனநிலையை அவர்கள் உருவாக்குவார்கள்.

வரலாற்றை தாங்களாகவே மாற்றாமல் அந்த மனிதனின் மனம் அந்த குறிப்பிட்ட சூழ்நிலையில் தானாகவே மாறி கொலை செய்வது தடுக்கப்படுகிறதா? இரண்டாவதாக ஒரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கொலை செய்யாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் எப்படிப்பட்டவை என்பதற்கான ஆராய்ச்சி நடந்துவந்தது. அப்படி அந்த சூழ்நிலையில் கொலை செய்யாமல் இருந்தால் அவர் அந்த நொடியிலிருந்தே தன்னுடைய வாழ்க்கையை மீண்டும் வாழலாம். அப்படியில்லாமல் மீண்டும் கொன்றுவிட்டால், அவர் தண்டனைக்காலம் முடிந்த நொடியிலிருந்து தன் வாழ்க்கையை தொடரலாம். இதனுடைய ஒரே பயனாக அந்த கொலை செய்த நபரின் சமுதாய மதிப்பு மாற்றப்படும். அதாவது அவர் கொலை செய்யாதவராக சமூகத்தில் மீண்டும் வாழ்வதற்கான ஒரு சூழ்நிலை அமையும்.

ஆனால் இதுவரை ஏறத்தாழ ஆயிரம் மனிதர்களிடம் நடைபெற்ற இந்த சோதனையில் இதுவரை எவருமே மீண்டும் அந்தக்கொலையை செய்யாமல் இல்லை. ஆனாலும் ஒவ்வொரு கொலையாளியும் அந்த முயற்சியை செய்யவே விரும்பினர், மோகனைப்போல.

“நீங்கள் சோதனை முயற்சிக்குத் தயாரா?” கணிணிக்காவலர்கள் கேட்டதும், ஒருவழியாய் மீண்டும் சுயநினைவிற்கு வந்தான் மோகன்.

அவன் தயார் என்று சொல்ல அந்த கணிணிக்காவலர்கள் மோகனை வார்ம்«?£ல் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். மோகன் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தான். அந்த முயற்சி இதுவரை வெற்றியை சந்தித்திருக்காத நிலையில் கூட அவன் முழுமனதாக தான் அந்த கொலையை மீண்டும் செய்துவிடமாட்டோம் என்று நம்பினான்.

அதற்காக அவன் தீவிரமான மனப்பயிற்சி எடுத்துவந்தான். தன்னுடைய நினைவை அவர்கள் அழித்துவிடுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும். இருந்தாலும் மனதை ஒருவிதமாகப் பக்குவப்படுத்திவிட்டால் அந்த கொலைசெய்யும் நேரத்தில் மனமானது அன்னிச்சையாக கட்டுப்பட்டுவிடும் என்று நினைத்திருந்தான். இதற்காக அவன் இது போன்ற ஒரு சோதனை முயற்சி செய்கிறார்கள் எனத்தெரிந்த நாளிலிருந்தே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறான். மோகனை பொறுத்தவரை அவன் கொலை செய்தது சற்றும் எதிர்பாராமல் நடந்த ஒரு தவறு. சூழ்நிலைக்கைதியாக அவன் அன்று கொலை செய்துவிட்டான் ஆனால் இன்னொறு சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த கொலை நிச்சயமாக நடக்காது என்று அவன் மனம் கணக்குப்போட்டது.

மோகன் இவ்வாறு மனதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது சிறை நிர்வாகத்திற்கே தெரிந்திருந்தது. அவர்களுக்கும் ஒருவாறு இந்தமுறை அவன் நிச்சயமாய் சூழ்நிலையை வென்றுவிடுவான் என்றே தோன்றியது. அப்படி அவன் வென்றுவிட்டால் வரலாற்றை மாற்றிய முதல் மனிதன் என்ற பெயர் அவனுக்குக் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக அரசாங்கம், சிறை நிர்வாகம், கடந்த காலத்திற்கு செல்வது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அனைவருமே ஒருவாறு இந்த நாளுக்காக காத்திருந்தனர். அவன் அப்படி சூழ்நிலையை வென்றுவிட்டால் என்ன நடக்கும் என்பதைப்பற்றி கடந்த சில மாதங்களாகவே விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். கேயாஸ் தியரியின் படி ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்புக்கூட பெரும்மாற்றத்தை உருவாக்கிவிடும் சூழ்நிலையில் அந்த கொலை இல்லாமல் போனால் என்னாகும் என்பதற்கான ஆராய்சிகள் தீவிரமாக நடந்துவந்தது.

அந்த சோதனை முயற்சியின் பொழுது இரண்டு கணிணிமனிதர்கள் அவனுடன் கடந்த காலத்திற்கு வருவார்கள். அவன் அந்த கொலையை மீண்டும் செய்துவிட்டால் மீண்டும் அவனை நிகழ்காலத்திற்கு கொண்டுவரும் பொறுப்பு அவர்களுடையது. இதுவரை நடந்த முயற்சிகள் அனைத்திலும் இது சற்றும் தவறில்லாமல் நடந்துள்ளது. கணிணி மனிதர்கள் மோகனை அழைத்துக்கொண்டு வார்ம்«?£லிற்கு வந்திருந்தார்கள். அந்த வார்ம்«?£லின் ஒரு பகுதியை அதிநுட்பம் வாய்ந்த விண்வெளி ஊர்தியின் மூலமாக ஒளியின் வேகத்திற்கு முடுக்கிவிடப்பட்டு பின்னர் சாதாரணமான நிலைக்கு வரும், இப்பொழுது கிடைக்கும் நேரயிடைவெளியின் பயனாய் மற்றொரு பக்கம் இருக்கும் மோகன் பழங்காலத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறாக மோகனும் அந்த இரண்டு கணிணி மனிதர்களும் கடந்த காலத்திற்கு வந்திருந்தனர். மோகனின் நினைவுகள் அந்த நிமிடம் வரை மட்டும் விட்டுவிட்டு மற்றவை முழுமையாக அழிக்கப்பட்டிருந்தது. மோகனைப்பொறுத்த வரை நிகழ்காலத்திற்கு வந்திருந்தான், அவனுக்கு மற்ற சம்பவங்கள் முற்றிலுமாக நினைவில் இல்லை. கோபமாக தன்னை ஏமாற்றிவிட்ட நண்பனை பழிதீர்ப்பதற்காக, அவனுடைய அடுக்கு மாடி குடியிறுப்பை நெருங்கிக் கொண்டிருந்தான். மோகன் நிச்சயமாய் அவனுடைய நண்பன் இப்படிச் செய்வான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. இதன் காரணமாக ஏற்பட்டிருந்த நஷ்டத்தை அவனால் பலகாலம் கடுமையாக உழைத்தாலும் அடைக்க முடியாதென்பது நன்றாகத் தெரிந்துவிட்டது.

நண்பனுடைய அறைக்குள் நுழைந்தவன் நேராய் அவன் கொண்டு வந்திருந்த ஆதாரங்களைக் காட்டினான்.

“ஏன் என்னை ஏமாத்தின, உன்னை எவ்வளவு நம்பியிருந்தேன் தெரியுமா?” அவன் கேட்க நண்பனால் பதிலெதுவும் சொல்லமுடியவில்லை.

“என்னை மன்னிச்சிறு மோகன், தெரிஞ்சு நான் இதை செய்யலை. நான் போட்டிருந்த கணக்குகள் தப்பாயிடுச்சி. இன்னும் ஒரு வருடம் டைம் கொடு எல்லாவற்றையும் சரிசெய்து தர்றேன்.” அவன் சொல்லிக் கொண்டிருக்க மோகனுடைய கோபம் அளவுக்கதிகமாகியது. தன்னை தெரிந்தே ஏமாற்றியது மட்டுமில்லாமல் இவ்வளவு நடந்தபிறகும் தன்னிடம் நடிக்கிறானே என்று நினைத்தவன் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைத்துப்பாக்கியை எடுத்தான்.

“உன்னையெல்லாம் மன்னிக்கவே கூடாது, நீ பண்ணினது நம்பிக்கைத் துரோகம் அதற்கு ஒரே ஒரு தண்டனை தான். அது நீ சாகறது மட்டும்தான்.” சொல்லியவன் அவனை நோக்கி துப்பாக்கியில் குறிவைத்தான். அந்த நிமிடம் அவன் மனது இந்த கொலை அவசியமா என் ஒருமுறை யோசித்துப்பார்க்க வைத்தது. ஆனால் அந்த நினைவுகளை ஓரங்கட்டியவனாய் துப்பாக்கியின் குதிரையை அழுத்தினான். மூன்று குண்டுகள் வலது தோல்பட்டையில் ஒன்றும், கன்னத்தில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாய்ப் பாய, அவனுடைய நண்பன் ரத்தச்சேற்றில் அந்த இடத்திலேயே உயிரிழந்தான்.

மீண்டும் ஒருமுறை மனிதனால் வரலாறு மாற்றப்படாமல் நிகழ்காலத்திற்கு மோகனுடன் திரும்பினர் கணிணிமனிதர்கள். மோகன் அவனுடைய தண்டனைக்காலம் முடிவடைந்ததால் விடுவிக்கப்பட்டான். முன்பு மோகனால் அவனுடைய நண்பன் கொல்லப்பட்டதற்கும் தற்சமயம் சோதனை முயற்சியில் கொல்லப்பட்டதற்குமான நிமிடக்கணக்கில் மைக்ரோ செகண்டுகளில் வித்தியாசம் இருந்தது. அதாவது மோகனுடைய பயிற்சியால் முன்பில்லாதது போல் தற்சமயம் ஒரு மைக்ரோ நிமிடம் அவனுடைய மனம் யோசித்தது. ஆனால் அதற்கான பலன் கிடைக்காவிட்டாலும் அந்த ஒரு மைக்ரோ நிமிட வேறுபாட்டை ஆராய்ச்சியாளர்கள் குறித்துக்கொண்டனர். பிற்காலத்தில் வேறுவொரு மனிதனால் வரலாறு மாற்றப்படுமா என்ற கேள்வியுடன் அவர்கள் தங்கள் ஆராய்ச்சியை இன்னும் தீவிரமாகத் தொடர்ந்தனர்.

Thinnai.com

செசன்ய குடியுரிமை கிடைக்குமா???

“வாழ்க்கை என்பது நாடகமேடை, அதில் நாம் அனைவரும் நடிகர்கள்.”

போனவாரம், பாக்கிஸ்தானின் ஜெனரல், பர்வேஷ் முஷாரப்பின் செவ்வியை ஐபிஎன்னில் பார்க்கமுடிந்தது. முன்பே சொன்னது போல ஐபிஎன் தன்னுடைய இருப்பை, செய்தியுலகில் கொஞ்சம் தீவிரமாகவே நிரூபித்துவருகிறது.முன்னர், சர்தேசாய் நடத்திய சோனியாவின் செவ்வியாகட்டும், கரன் தாப்பரின் முஷாரப்பின் செவ்வியாகட்டும் அருமை.

முஷாரப்பின் செவ்வியை மிகவும் ரசித்தேன், ஒரு ராணுவ ஜெனரலை இப்படியும் கேள்விகள் கேட்க முடியுமா என்று ஆச்சர்யமாகயிருந்தது. இதே சமயம் ஜெயலலிதாவின் இப்படியான ஒரு செவ்வி கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்தது. சோனியாவின் பேட்டியைப் பற்றி, அலெக்ஸ் பாண்டியனின் பதிவில் பின்னூட்டமிட்டிருந்தேன். சோனியாவின் உள்ளுணர்வைப்பற்றிய கேள்வியும், அதற்கான சோனியாவின் பதிலும் நன்றாக இருந்தது.

இப்படிப்பட்ட ஒரு விஷயம் அரசியல்வாதிகளிடமும், பத்திரிக்கையாளர்களிடமும் இருப்பது நலம்.

இந்தவாரம் ப.சி யின் செவ்வியும் அருமை, பைனான்சுக்கும் நமக்கும் காத தூரம் இருந்தாலும், கரன் தாப்பரின் நேர்கொண்ட பார்வையையும் ப.சிதம்பரத்தின் சில அழகான புன்னகைகளையும் ரசித்தேன். அவர்களுடைய இணையத்தளமும் நன்றாக வந்துள்ளது.

செசன்யாவின் தற்போதைய பிரதமமந்திரி, கொடுத்திருக்கும் ஒரு அறிவிப்பு வியப்பில் ஆழ்த்தியது. அவர்களின் ரஷ்யாவிற்கெதிரான போரில் அதிக அளவிலான வீரர்களை இழந்ததால், ஒரு ஆண் பல பெண்களை மணந்து கொள்வதை சட்டமாக கொண்டுவர கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு.

அதே போல் அறிவியல் ஆட்களுக்கு, சூரியக்குடும்பத்தில் உள்ள கோமெட் எனப்படும் சிறிய கோள், மலைகள், தூசி, மற்றும் பனிப்பாறைகளால் ஆனது. இதன் தூசிகளை சேகரிக்க நினைத்த நாசாவின் முயற்சி வெற்றியில் முடிந்துள்ளது. ஏழுவருட நீண்ட பயணத்தின் பயனாய் கிடைத்திருக்கும். இந்த கோமெட்டின் தூசிகளை வகைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

மேலும் செய்திகளுக்கு.

போபர்ஸ் பற்றியும் வலைபதிவு நண்பர்களிடையே பேச்சைக்காணோம். ஒட்டோவா குட்டோரோச்சியின் வங்கிக்கணக்கை திரும்பவும் திறக்கப்பட்டதில் சட்ட அமைச்சரின் தலை உருளுகிறது. மீண்டும் பூட்டப்படுமா தெரியவில்லை. இதன் அரசியல் விளையாட்டு வேடிக்கையாக இருக்கிறது. (சுப்பிரமணியசாமியைக்காணோம் அவரிருந்தால் நல்ல காமெடிக்கதையெல்லாம் சொல்வார். 🙂 )

பீகாரில் தலித் இல்லாத ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி, பஞ்சாயத்து பழிவாங்கியதைப்பற்றி பார்த்தேன் இன்னும் பீகாரின் வடக்கு மாகாணங்களில் பெண்ணுரிமை பற்றிய பேச்சே எழுப்பப்பட முடியாதென தெரிகிறது. வெட்கம்.

யாராகயிருந்தாலும் அவர்களுடைய நிறை, குறைகளுடன் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பவன் நான்.பெற்றவர்களை, சகோதர சகோதரிகளை, நண்பர்களை அப்படித்தான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அதை போலவே ஆசானையும், வரப்போகும் மனைவியையும் அப்படியே. இங்கே நிறை எது குறை எது என்ற வாக்குவாதம் வைக்கவில்லை. ஆனால் குறைகள் அற்ற நிறைகள் கிடைப்பதில்லை, கசக்கும் பொங்கலைப்போலவே. 🙂

மற்றபடிக்கு இணையத்தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல், மாட்டுப்பொங்கல், கன்னிப்பொங்கல்(காணும் பொங்கல்) வாழ்த்துக்கள்.

வருந்துகிறேன்

வருந்துகிறேன்,

சிறிது நேரத்திற்கு முன்னர் கேட்க நேர்ந்த செய்தி மனதை உருக்குவதாக இருந்தது.

மெக்காவில் ஹஜ் பயணம் மேற்கொண்டிருந்த இடத்தில் நடந்த துர்சம்பவத்தில் நூற்றுக்கணக்கில் முஸ்லீம் சகோதர சகோதரிகள் மரணமடைந்ததாக கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

அந்த மக்களின் உறவினர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

More news

credits: msn.com

ஆண்மை கொள் !!!

ஏய் இந்திய நாட்டின் புத்திரனே! அஞ்சுதல் அறியாமை இல்லாத நெஞ்சம் படைத்தோய், ஆண்மை கொள், துணிவு கொள், நான் ஒரு இந்தியன் என்று பெருமை பாராட்டு. நான் இந்தியன், ஒவ்வொரு இந்தியனும் என் சகோதரன் என்று சொல். ஏழை இந்தியன், பணக்கார இந்தியன், பிராமண இந்தியன், பாமர இந்தியன், பறைய இந்தியன் ஒவ்வொரு இந்தியனும் என் சகோதரன் என்று சொல்.

அவர்களைப்போன்றே உடுக்கக் கந்தையொன்றே எனக்குப் போதுமானது. இந்தியனே எனது உயிர், இந்திய நாட்டின் தேவதைகளே நான் வணங்கும் கடவுள்கள். பிள்ளைப்பருவத்திலே தொட்டிலாய் இருப்பதுவும் யௌனவத்தினிலே சந்தோஷம் துய்ப்பதற்கேற்ற நந்தவனமாய் இருப்பதுவும் முதுமைக்கேற்ற சொர்க்கமாய் இருப்பதுவும், இந்திய சமுதாயமே. நாட்டிற்கு நலம் தருவது எதுவோ அதுதான் நான் வேண்டுவதும்.

சுயநலத்தை பிற அணியிலும் பரநலத்தை முன் அணியிலும் சேர்த்து வாழவல்ல பரந்த எண்ணம் கொண்டவர்களே இந்தியநாட்டிற்கு தேவை. வாருங்கள் இளைஞர்களே! நம் சமுதாயத்தை காக்க அணிதிரள்வோம், மக்களின் அறியாமையை போக்கி அறிவு புகட்டுவோம். ஏற்கனவே மலிந்து கிடக்கின்ற சாதி பேதங்கள் பெருகுவதை தகுந்த கல்விமுறையால் ஒடுக்குவோம்.

வறுமையிலே உலன்று பிள்ளைகளைப்பெற்று அவர்களையும் வறுமையிலே உழலவிட்டிருக்கும் மூடர்களுக்கு பிரம்மச்சரியத்தை புகட்டுவோம். ஐரோப்பாவிலும் அமேரிக்காவிலும் அரசியல் லட்சியங்களே தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்குகின்றன் ஆனால் ஆசியாவிலோ மதலட்சியங்களே தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்குகின்றன. எனவே எதிர்கால இந்தியாவிற்கு நிறைவேற்றப்படவேண்டிய முதல் நிபந்தனை மத ஒருமைப்பாடே ஆகும்.

நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவரும் மன்னர் கொடுங்கோன்மையும் அன்னியர் அரசாட்சியும் உங்கள் சொந்த மக்களே உங்களுக்கு இழைத்த தீங்குகலும் சேர்த்து உங்கள் நரம்புகளையெல்லம் பிழிந்தெடுத்துவிட்டன. நரம்புகளற்ற புளுக்களைப்போல் ஆகிவிட்டீர்கள். வலிமை வலிமைதான் இப்பொழுது உங்களுக்குத் தேவை.

நான் ஆத்மா என்னை வாள்வெட்டாது, ஆயுதம் துளைக்காது நெருப்பு எரிக்காது காற்று உலர்த்தாது நான் எல்லாம் வல்லவன் என்னால் எதையும் சாதிக்கமுடியும் என்று கூறி புறப்படுங்கள்.

எழுமின் விழுமின் கருதிய கருமம் கைகூடும்வரை உழைமின்.

-சுவாமி விவேகானத்தா

பின்னூட்டத்தில் புதுப்பிரச்சனை

புதுப்பிரச்சனையை பூங்குழலி கிளப்பியிருந்தார். அதாவது அவர் பதிவில் போலிப்பின்னூட்டங்கள் அளித்த நபர் உடைய ஐபி முகவரியை கண்டறிந்தாக சொல்லி ஒரு ஐபி முகவரியை தந்திருந்தார்.

அது புனேவில் நான் வேலை செய்யும் அலுவலகத்தின் ஐபியாக இருப்பதால், சில பதில்களை தர விரும்பினேன் அதை அங்கே தந்துவிட்டேன் அதை இங்கேயும் தருகிறேன்.

//Maharashtra, Pune, India
punexc04.kanbay.com (203.197.90.136)

9th January 2006 12:28:47 PM//

பூங்குழலி, Just now I came to your site and saw the about mentioned statements.

That particular IP or whatever you are mentioning is a IP address of a particular company(which is containing more than 4000 employees in pune) which I am working now. And from this particular company 2 persons are blogging here in tamil(as per what I know), and tamilmanam.

one is me, Mohandoss Ilangovan

http://www.imohandoss.blogspot.com

other one is Gnanasekar.

http://jssekar.blogspot.com/

And I talked to that person also. He also told me that he didnt posted those comments. And actually I am reading your post for sometime now. But in this period of something I didnt posted any comments.

Please clarify our doubt. How did you got to know that, those comments are coming from that particular IP.

Once again I am clarifying here that I dont have any idea or whatsoever to do something like this.

Please clarify.

Thanks and Regards
Mohandoss Ilangovan.

இப்படி ஒரு விஷயத்தை பொதுவில் வைப்பதற்கு முன் அவருக்கு சந்தேகம் இருக்கும் பட்சத்தில் இப்படி இட்டிருக்கக்கூடாது(கேள்விக்குறி போட்டிருப்பதால்). இந்தப்பதிவின் மூலம் நான் சொல்லவருவது ஒன்றைத்தான். அந்தப்பதிவிலோ இல்லை, மற்ற இடங்களிலோ போலிப்பின்னூட்டமிடும். எண்ணம் எனக்குக் கிடையாது. அந்தமாதிரியான நபரும் நான் கிடையாது. முகம்மூடி வாழும் எண்ணமும் எனக்கு இருந்ததில்லை. அவர் எப்படி கண்டறிந்தார், எதனால் எழுதினார் என்பது போன்ற விஷயங்களை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். பூங்குழலி இதற்கான பதிலை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

———-

இதுவரை தான் நான் முன்பு எழுதியது.

இந்த பிரச்சனை மேலும் இழுத்துக்கொண்டே செல்வதால், இன்னுமொறு விஷயம்.

//4000 பேர் உழைக்கும் அலுவலகத்தில் இருந்து 2 பேர் தன்னுடைய கருத்துக்களை கொடுத்துவிட்டார்கள்.
ஆகவே என்னுடைய பின்னூட்ட கேள்வியை திருப்பப்பெறுகிறேன்.
//

தொடர்ந்து எங்களின் நிலை நக்கலடிக்கபடுகிறது. கொடுக்கப்பட்டது தவறான ஒரு செய்தி. அப்படி சரியாக இருக்கும் பட்சத்தில் அதன் லாக் டீடெய்ல்களையும் இன்னபிற விவரங்களையும் தரவேண்டியிருக்கும். இதில் தனியாக கேள்விவேறு. பின்னூட்டத்தை அழிக்கவேண்டுமா. வலைத்தளத்தில் தவறான செய்தி பரப்புவது குற்றமே.

2 பேர் பதிலளித்திருக்கிறார்களென்று நக்கல் வேறு தனியே. அங்கே வேலைபார்க்கும் மற்ற நபர்களும் இவருக்கு பதில் தரவேண்டுமென்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. நான் பதிலளித்ததே அவருடைய தவறை சரிசெய்யவே. அப்படி குறிப்பிட்டால் தான் அழிப்பார் என்றால் என்ன செய்ய? அது யாருடைய தவறு, அவருடைய பதிவை படிப்பவருடைய தவறா புரியவில்லை.

நானும் சரி, ஞானசேகரும் சரி இதற்கான எங்கள் பக்கத்தை நியாயமான முறையில் வைத்திருப்பதாகத்தான் படுகிறது எனக்கு.

//நான் குறிப்பிட்ட ஐபி முகவரி நீண்ட நாட்களாகவே எனது பக்கங்களை கண்டுகொள்கிறது.

நீங்கள் இருவரும் இப்போதுதான் எனது குழப்பங்களை பார்க்க வந்திருப்பதால்,உங்கள் இருவரைத்தவிர வேறு யாரேனும் கூட இருக்கலாம்.
//

இதைப்பற்றி நான் ஒன்றும் சொல்ல முடியாது ஆனால் நான் சிறிது காலமாகவே இந்தப்பதிவை படித்துவருகிறேன். ஆனால் நிச்சயமாகப்பின்னூட்டம் அளிக்கவில்லை. இது பெரும்பாலும் நான் செய்வதே. நான் மட்டுமல்ல பலரும். நல்ல விஷயங்கள் என்றும் பின்னூட்டம் அளிக்கவேண்டுமென்றும் விரும்பும் பக்கங்களுக்கு மட்டும் தான் நான் பின்னூட்டம் அளிப்பது வழக்கம்.இது பெரும்பாலும் பலருக்கு தெரிந்திருக்கும். இதில் குழப்பம் என்ன புரியவில்லை.

இனி இதுபற்றி அவருடைய பதிவில் பதிலளிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன்.எனவே எந்த கேள்வியானாலும் இந்த பக்கத்தில் கேட்டால் பதிலளிப்பேன்.

நன்றி மற்றும் வணக்கங்களுடன்
மோகன் தாஸ்

அண்டசராசரத்தில் அதிவேகமானது எது???

நீங்கள், ஒளியோ அதன் அண்ணா, தம்பிகளான எக்ஸ்ரே, மின்காந்த அலைகளையோ(நன்றி சுஜாதா :-)) சொல்லியிருந்தால் மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.(PS – உண்மையில் அவைகள் தான்.)

ஒவ்வொரு வருடமும் அமேரிக்காவின், அமேரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோனாட்டிக்ஸ், மற்றும் அஸ்ட்ரோநாட்டிக்கிஸ்(AIAA), அந்த வருடத்துடைய சிறந்த அறிவியல் சம்மந்தப்பட்ட ஆராய்ச்சிப் பேப்பருக்கு பரிசு வழங்குவதுண்டு, இந்தாண்டு பரிசு வழங்கப்பட்ட ஆராய்ச்சியின் படி, நீங்கள் இன்னிக்கு மதியம் சாப்பாட்டை பூமியில் சாப்டுட்டு இராத்திரி சாப்பாட்டுக்கு நிலவுக்கு போய்விடலாம்.

மீதியை நீங்களே படித்துக்கொள்ளுங்கள், ஹிஹி.

…Last year’s winner in the nuclear and future flight category went to a paper calling for experimental tests of an astonishing new type of engine. According to the paper, this hyperdrive motor would propel a craft through another dimension at enormous speeds. It could leave Earth at lunchtime and get to the moon in time for dinner.

இன்னும் படிக்க…

ஒரு அற்புதமான படத்திற்காக காத்திருக்கிறேன். அபர்ணா சென்னின் இயக்கத்தில், ராகுல் போஸ், சப்னா ஆஸ்மி, கொங்கனா சென், வகீதா ரஹ்மான் நடித்து வரவிருக்கும் 15, Park Avenue படம்தான் அது.

மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் அய்யர், படத்தின் தாக்கத்தால் ஏற்ப்பட்டது இது. புனேவில் இந்தவாரம் வெளியீடா என்று தெரியவில்லை. இருந்தால் நிச்சயமாக பார்க்கவேண்டும்.


அப்புறம் இன்னொரு படம், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் முனிச்(Munich), இந்தப்படம் டிசம்பரில் வெளிவந்தது இந்தியாவில் புனேவில் வருவதற்காக காத்திருக்கிறேன்.

1972 ஒலிம்பிக்கில் விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்க, இஸ்ரேலிய மொஸாட் உளவுத்துறை நடத்திய விஷயங்களை சொல்கிறது இப்படம்.

Credits: geetham.net, ibnlive.com, newscientist.com

ஆங்கிலப்புத்தாண்டு, சொர்க்கவாசல் மற்றும் சில எருமைமாடுகள்

ஆங்கிலப்புத்தாண்டு, சொர்க்கவாசல் மற்றும் சில எருமைமாடுகள்
“டேய் எருமைமாடு ஹாப்பி நியூயியர்”

இப்படித்தான் ஆரம்பித்தது இந்த புதுவருஷம், பிறகு இன்னும் சில அன்பு நாயேக்களும் எருமைமாடுகளுக்கும் பிறகுதான் நல்ல வாழ்த்துக்களே வந்தது.

எல்லா வருடங்களையும் போல இந்த வருடமும் டான்ஸ் ஆடுவதற்கென்று கிளம்பியிருந்தோம். ஆனால் கொஞ்சம் விஷேஷமாக மும்பைக்கு “Essel World” என்ற இடத்திற்கு சென்றிருந்தோம்.


Elephanta Caves


Elephanta Caves


Essel World

பிறகு அப்படியே, எலபெண்டா கேவ்ஸ் போய்விட்டு வீடு திரும்பினோம். இடையில் டான்ஸ் ஆடும் பொழுது மூன்று முறை கண்ணாடி கீழே விழுந்தும் உடையாததால் நல்ல அதிர்ஷ்டமான வருடமாக(???? அதிர்ஷ்டமான வருஷமோ இல்லையோ, கண்ணாடி உடையலை அது பெரியவிஷயம், கண்ணாடி அணிபவர்களுக்குத்தான் அதைப்பற்றித்தெரியும். போட்டிருக்கும் கண்ணாடி உடைந்தால் நான் ரொம்பவே அப்செட் ஆகிவிடுவேன்.) இருக்கும் என்று நம்புகிறேன்.

சுமார் ஐயாயிரம் பேர் இருந்த அந்த இடத்தில் டான்ஸ் கலைகட்டியது, பெரும்பாலும் புனேவிலுருந்தும் மும்பையிலிருந்தும் ஜோடிகள் வந்திருந்ததால் கொண்டாட்டமாகவேயிருந்தது. எனக்கென்னவே அன்றைக்கென்று பார்த்து சொர்க்கவாசல் நினைவில் வந்தது. உண்மையில் இது போன்ற டான்ஸ் பார்டிகளுக்கும் சொர்க்கவாசலுக்கும் சென்றிருப்பவர்களுக்கு நான் சொல்லவருவது விளங்கலாம்.

எஸ்ஸெல் வேர்ல்ட் பற்றி சில வார்த்தைகள், நீங்கள் குடும்பத்துடன் பாம்பே சென்றால் பார்க்கக்கூடிய மிக நல்ல இடங்களில் இதுவும் ஒன்று. குடும்பத்துடன் போய் ஒருமுறை அனுபவித்துவிட்டு வாருங்கள். அதேபோல் எலிபெண்டா கேவ்ஸ், கடலின் நடுவில் இருக்கும் ஒரு தீவில் மிக நல்ல சிற்பங்கள் இருக்கின்றன. முகலாயர்களின் ஆட்சியில் சில சிற்பங்கள் அழிக்கப்பட்டதாக அங்கிருந்த கைடு சொன்னார்.

ஒருமுறை நிச்சயமாக பார்க்கவேண்டிய இடம்தான் இரண்டுமே. மற்றபடிக்கு போனபதிவில் பிக் பேங்க்ஸ் பற்றியும், ஸ்டிரிங் தியரி பற்றியும் சொல்லியிருந்தேன். அதைப்பற்றிய டாக்குமெண்டரிகளை இந்தியாவிலிருந்து பார்க்க கீழே கிளிக்கவும்.

Documentry

எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் தான் இந்த டாக்குமெண்டரிகள்.

மற்றுமொறு முறை அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.