செவ்வாய் கிரகத்தில் வீடு பார்க்கணுமா????

கூகுளைப்பற்றி பெரியதொரு விவாதம் போய்க்கொண்டிருப்பதாக நினைக்கிறேன். இருந்தாலும் கூகுளின் சர்வீஸ்களை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

கூகுளின் இன்னொரு இதுபோன்ற சர்வீஸ், கூகுள் மார்ஸ். முன்னால் கூகுள் எர்த் வெளியிட்டதைப்போன்று இப்பொழுது கூகுள் மார்ஸ் இதன் உதவியுடன் மார்ஸின் படங்களைப்பார்க்க முடியும்.

நான் எனக்கான வீடு கட்டுவதற்கு வீடு தேடிக்கொண்டிருக்கிறேன். நீங்களும் பாருங்கள்.

அதே போல் அமேசான், இப்பொழுது இருப்பதை விடவும் தொழில் நுட்பத்தில் உயர்ந்த தரமுடைய இன்டெர்னெட் ஸ்டோரேஞ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அருமை சொந்தமாக வெப்சைட் வைத்து உபயோகித்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும், பேண்ட்வித், விலை போன்ற பல விஷயங்களின் பயனளிக்கும் என நினைக்கிறேன். இன்னொரு நாள் விரிவாக முயற்சிக்கிறேன். ஆனால் இப்பொழுது இந்த சேவையை பணம் கொடுத்துத்தான் பெற முடியும். இன்னும் சில மாதங்களில் கூகுள் இதே போன்ற சேவையை இலவசமாக கொடுக்க வாய்ப்பிருப்பதாக, தகவல்கள் கிடைக்கின்றன. இன்னும் படிக்க.