தாதா கண்ணில் காந்தி! – ஞாநி

காந்தியை எல்லோரும் மறந்துவிட்ட வேளையில், இந்திப் படம் ‘லகே ரஹோ முன்னாபாய்’ மறுபடியும் அவரைப் புதிய தலை முறையின் ஹீரோவாக முன்னிறுத்தி இருக்கிறது என்று ஆங்கிலப் பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன.

இது போல, சினிமாவால் ஒரு சமூகத்தில் நல்ல மாற்றங்கள் வர முடியுமா என்ன?

‘முன்னாபாய் எம்.பி.பி.எஸ்’ படத்தைவிட இது இன்னும் பெரிய ஹிட் என்பது உண்மை. மும்பை தியேட்டர்களில் படம் முடிந்ததும் ஆடியன்ஸ் மொத்தப் பேரும் எழுந்து நின்று கை தட்டியதை நேரில் பார்த்தபோது கமர்ஷியல் சினிமாவுக்குள் நுழையத் தயங்கும் எனக்கே, இதை உடனே சென்னை சென்று அடுத்த வாரமே தமிழில் தயாரித்து இயக்கி வெளியிட்டுவிட வேண்டுமென்று பரபரப்பு ஏற்பட்டது (ரீ-மேக் உரிமை விலை 6 கோடியாம்).

எளிமையான கதை. ஆனால், மிகவும் புத்திசாலித்தனமாகவும் சுவாரஸ்யமாகவும் அமைக்கப்பட்ட திரைக்கதை. பண்பலை வாயாடியான (எஃப்.எம். ரேடியோ ஜாக்கிக்கு தமிழ்!) ஹீரோயினை(வித்யாபாலன்) கவர்வதற்காக, அவள் நடத்தும் காந்தி பற்றிய லைவ் க்விஸ் நிகழ்ச்சியில், சரியாகப் பதில்கள் சொல்ல தாதா முன்னாபாய் தன் அதிரடி வழிகளில் முயற்சிக்கிறான். ஜெயிக்கிறான். காதலுக்காக காந்தியில் காட்டிய ஆர்வம், அவனை காந்தியவாதியாகவே ஆக்கிவிடுகிறது.

இன்றைய நடைமுறை பிரச்னைகளுக்கெல்லாம் எப்படி காந்தியைப் பின்பற்றலாம் என்று ரேடியோவில் யோசனைகள் சொல்கிறான். (பென்ஷன் பேப்பரில் கையெழுத்திட லஞ்சம் கேட்கும் அதிகாரியிடம், ஒரு முதியவர் தன் ஜட்டி தவிர, எல்லா உடைகளையும் அவிழ்த்துக் கொடுத்துவிடுகிறார். வீட்டுச் சுவரில் தினசரி வெற்றிலை எச்சில் துப்பும் மாடி வீட்டுக்காரரிடம் சண்டை போடாமல், தினமும் அவர் துப்பியதும் சுவரைக் கழுவிவிடும் காந்தியம், எச்சில் பார்ட்டியை வெட்கப்படுத்தித் திருந்தவைக்கிறது.) ஹீரோவின் காந்திய யோசனைகள் எல்லாம் ஒர்க் அவுட் ஆகின்றன. கடைசியில் காதலியை மட்டுமல்ல, வில்லனையும் காந்திய வழியில் ஜெயிக்கிறான்.

இந்தக் கதையில் ஹீரோ சஞ்சய் தத்தும், அவரது அடியாளாக வரும் அர்ஷத் வார்சியும் நடிப்பில் கலக்குகிறார்கள். படத்தின் ஹை லைட்… ஹீரோவை அசல் காந்தி வந்து அடிக்கடி சந்தித்து யோசனைகள் சொல்வதுதான்! அவன் கண்ணுக்கு மட்டும் காந்தி தெரிகிறார். எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்துவிட்டால், ரொம்ப நல்லது என்பதுதான் படத்தின் மெஸேஜ். இந்த சீரியஸான மெஸேஜை காமெடியாகச் சொல்லியிருப்பது ஆடியன்ஸ§க்குப் பிடித்து விட்டது.

பல ஆங்கிலப் பத்திரிகைகள், மும்பை யின் அன்றாடச் சிக்கல்களுக்கு எப்படி காந்தி வழியை முன்னாபாய் ஸ்டைலில் பின்பற்றலாம் என்று வாசகர்களுக்குப் போட்டிகள் வைத்திருக்கின்றன. ஆட்டோ சிக்கல் முதல் ஆபீஸில் லஞ்சம் வரை வாசகர்கள் பல காந்தியத் தீர்வுகளை எழுதி அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். மும்பைப் பேச்சு மொழியில் இருக்கும் இந்தப் படம், மும்பைவாசி களுக்கு மிகவும் பிடித்துவிட்ட நிலையில், மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் (ஆயுதம் வைத்திருந்த தாகக்) குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் சஞ்சய் தத்துக்கான அனுதாபம் அதிகரித்து வருகிறது. சஞ்சய் தத் அசலாகவே ஓர் இளகிய மனதுடைய காந்தியவாதிதான் என்று கூடப் பலரும் நம்புகிறார்கள்.

இதே போல ஒரு நல்ல மெஸேஜை தெலுங்கு சினிமாவின் கார மசாலாவுடன் குழைத்துச் சொல்லியிருக்கும் ஒரு படத்தையும் அண்மையில் பார்த்தேன். சிரஞ்சீவி நடித்திருக்கும் ‘ஸ்டாலின்’. தமிழ்நாட்டு ஏ.ஆர் முருகதாஸ் படைப்பு. மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் எம்.எல். எம். ஐடியாவை சமூக அக்கறையுள்ள விஷயத்துக்குப் பொருத்திப் பார்த்திருக்கிறார்.

ஸ்டாலின், எல்லா சக மனிதர்களுக்கும் நெருக்கடியான நேரத்தில் உதவி செய்யும் சுபாவம் உள்ளவன். உதவி பெற்றவர் ‘தேங்க்ஸ்’ சொன்னதும், ‘தேங்க்ஸ் சொல்லாதே! நெருக்கடியான சூழலில் இருக்கும் மூன்று பேருக்கு உதவி செய். இதே யோசனையை அவர்களுக்கும் சொல்லி அனுப்பு!’ என்கிறான்.ஒவ்வொருத்தரும் தலா மூன்று பேருக்கு… அந்த மூவரும் தலா மூன்று பேர் வீதம் ஒன்பது பேருக்கு என இந்த உதவி செய்யும் கலாசாரம் பெருகி, முழு சமூகத்தையும் அரவணைத்து விட்டால் எவ்வளவு நல்லது என்பது ஒரு சுகமான கனவு!

அதைத் தெலுங்கு ஸ்டைல் அடிதடி, குலுக்கல் ஆட்டங்களுடன் சொல்லியிருப்பது மசாலா ஆடியன்ஸ§க்கு நிறை வாகிவிட்டது.

இந்தப் பாணி படங்கள் பெரும் வெற்றி அடைவதற்கு அடிப்படையான காரணம், நம் சமூ கத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் மக்களைக் கைவிட்டு விட்டதுதான். எனவே, வேறு ஏதாவது ஒரு அதிசயம் நடந்துவிடாதா என்று ஏங்கிக்கிடக்கும் மனங்களுக்கு இவை ஆறுதலாக இருக்கின்றன.

சுமார் 30 வருடங்கள் முன்பு இந்தியில் வெளியான ‘சத்யகாம்’ (தமிழில் ‘புன்னகை’) படத்திலும், ஹீரோ காந்தியவாதிதான். எந்த நிலையிலும் உண்மை தான் பேசுவேன், நேர் மையாகவே இருப்பேன் என்று சொல்லும் அந்த ஹீரோ, படம் முழுக்க அடுக்கடுக்கான கஷ்டங்களையே அனுபவிப்பான். ஆனால், முன்னாபாய்&2 நம் அன்றாடக் கஷ்டங்களை எல்லாம் காந்தி வழியில் தீர்க்கலாம் என்று காட்டுகிறான். கஷ்டப் படுகிற ஹீரோவை யார் ரோல் மாடலாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள்? ‘அதெல்லாம் காந்திக்கு தான் முடியும். நமக்கு முடியாது’ என்கிற சராசரி ரியாக்ஷனைத் தலைகீழாகப் புரட்டியிருக்கிறார் முன்னாபாயின் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி.

சஞ்சய் தத் & அர்ஷத் ஜோடி போல தமிழில் முன்னாபாய்&2 செய்ய யார் இருக்கிறார்கள்? மறுபடியும் கமல் & பிரபு? அல்லது, ரஜினி & வடிவேலு? விஜய் & விவேக்? அஜீத் & ரமேஷ்கண்ணா? ம்ஹ¨ம்! என் சாய்ஸ்… ஸாரி, நல்ல தயாரிப்பாளர் கிடைத்தால் மட்டுமே சொல்லு என்கிறார் என் அருகே உட்கார்ந்திருக்கும் காந்தி!

படத்தைப் பற்றிய என் விமர்சனம்

‘மென்டாலிட்டி’ மாற்றப்படுமா?

ஒரு மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலைப் பார்ப்பதால் ‘மென்டாலிட்டி’ மாற்றப்படுமா?

இந்தக் கேள்விக்கு நேரடியாக வருமுன்னர், நான் டெல்லிக்கு சென்ற பொழுது எப்படியிருந்தேன் என்பதைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம். அது ஒரு கல்லூரி வகுப்பு நாள் தமிழாசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார், அப்படியானால் இரண்டாம் ஆண்டாக இருக்கவேண்டும். அவர் பெயர் ‘கோடையிடி’ கோபாலகிருஷ்ணன், தமிழில் டாக்டரேட் வாங்கியவர்(அவர் சொன்னது உண்மையென்னும் பட்சத்தில் இன்னும் பலர் வாங்க பேப்பர் எழுதிக்கொடுப்பவர்.) திருச்சி பட்டிமன்றங்களில் நீங்கள் சர்வசாதாரணமாய் கேள்விப் பட்டிருக்கக்கூடிய ஒருவர்.

எடுத்துக்கொண்டிருந்த பாடம், “தமிழர்களின் வீரம்” உதாரணம் சொல்லிக்கொண்டிருந்தது கம்பராமாயணத்தின் ராமனைப் பற்றி, கொஞ்சமும் கவலைப்படாமல் நான் கேட்டேன் ‘சார் தமிழனுக்கும் ராமனுக்கும் என்ன தொடர்பு’ என்று. இது உண்மை நடந்தந்து. அப்பொழுதெல்லாம் பட்டிமன்றங்களில் பேசிக்கொண்டிருந்தவன். பாரதிதாசனின் ‘தென் திசையைப் பார்க்கின்றேன்’ என்ற பாடலின் மொத்த வரிகளையும் சொல்லி வேறேதொபாடலில் வரும், ‘மறைந்திருந்து அம்பெய்திய ராமனின் வீரத்தைப் பாரட்டுவதால் தான் நாம் கோழைகளாகிவிட்டோம்’ என்று வரும் பாடல் வரிகளையும் சொல்லி ராமனின் வீரத்தை எப்படி தமிழனின் வீரத்துக்கு மதிப்பிடலாம் என்று கேட்டேன்.

நான் அந்தக் காலத்தில் ரொம்ப ‘ரா’வானவன். அதற்கு அந்த ஆசிரியர் சொன்ன பதில் ஒருபக்கம் இருக்கட்டும் இன்று இதே போன்ற ஒரு சூழ்நிலை ஏற்படுமானால் ‘முகத்தில் ஒரு அலட்சிய புன்னகை’ ஏற்படுமே ஒழிய நிச்சயம் எதிர்த்து கேட்டிருக்க மாட்டேன். இது உண்மை, அந்த நிகழ்ச்சியால் நான் இழந்தது அதிகம் அந்த பேராசிரியர், வெளியில் என்னைத் தட்டிக் கொடுத்து தம்பி நீ இதை என்னிடம் தனியில் கேட்டிருக்கணும் உன்னை பெரிய அளவில் பட்டிமன்றத்தில் அறிமுகப்படுத்தியிருப்பேன், அற்ப சந்தோஷத்துக்காக ஸ்டூடண்ஸ் மத்தியில் பெயர் எடுப்பதற்காக அங்கே சொல்லி ஒரு நல்ல வாய்ப்பை இழந்திட்ட’ இதுவும் அவர் சொன்னது. உண்மை சுட்டது என்னை அவர் என்னிடம் பேசிய இந்த வார்த்தைகள் மாணவர்களிடம் பரப்பட்டது, அவர் தமிழில் பாடம் எடுக்க முடியாத அளவிற்கு நான் பிரிபேர் செய்து வந்து தமிழில் கேள்விகள் கேட்பேன்.

நல்ல வேடிக்கையாய் இருக்கும், இருவரும் பாடல்களால் சண்டை போட்டவாரு இருப்போம். ஆனால் இன்று வேதனையாக இருக்கிறது, நான் இழந்தது என் கண்ணில் தெரிகிறது.(இதற்கும் காரணம் டெல்லிதான்.)

நான் இப்படிப்பட்டவனாய்த் தன் டெல்லிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஏறினேன், ‘ரா’வாக, என்னை ஒரு பொரடக்ட் ஆக மாற்றியது டெல்லி, மற்றும் டெல்லி வாழ் உறவினர்கள், அந்த பழக்கவழக்கங்கள்.

அதுவரைக்கும் அடுப்பாங்கரைப் பக்கமே போகாத எனக்கு நான் சாப்பிட்ட தட்டை கழுவக் கூட கற்றுக்கொடுத்தது டெல்லிதான், ருசியில்லாத சாப்பாடாயிருந்தாலும் சாப்பிட்டால் தான் உயிர் வாழமுழியும் என்ற வாழ்க்கையின் ரகசியம் சொல்லித்தந்தும் டெல்லிதான். மனிதர்களிடம் பழகுவதற்கும் ஒரு பிரச்சனையை அணுகும் விதத்தை சொல்லித்தந்ததும் டெல்லிதான்.

ரோட்டில் சிகரெட் குடிக்கும் பெண்ணை உங்களால் மரியாதையாய் பார்க்க முடியுமா? புருஷனுடன் சேர்ந்து போட்டிப்போட்டுக்கொண்டு தண்ணியடிக்கும் ஒரு கொலிக்கை தப்பான பார்வையில்லாம் பார்க்க முடியுமா? மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் அய்யர் பார்த்துட்டு அந்தப் பெண் ‘தேவிடியா’ இல்லைன்னு வாதாட முடியுமா? இது எல்லாம் நடந்தது எனக்கு. நான் ஒன்றும் சினிமாவில் வருவது போல ஒரு பாடலில் மாறிவிடவில்லை நிச்சயமாய். அடிபட்டு உதைபட்டு, பித்துபிடித்தவைப் போல் அலைந்து திரிந்து எனக்கு வாக்கப்பட்டுது இவைகள். இன்னும் இவைகள் பலருக்கு தவறானவைகளாக இருக்கமுடியும் தான்.

டெல்லி ஒரு வித்தியாசமான நகரம், கேளிக்கைகள் நிறைந்தது, வெகுசுலபமாக பெண்டாளும் வாய்ப்பு கிடைக்கும் ஒரு ஊர் தான். தனிமனித உரிமைகள் என்ற ஒரு விஷயம் எனக்கும் அடிமுதல் கற்பிக்கப்பட்ட ஊர். புருஷன் பெண்டாட்டி இடையே கூட இந்த உரிமைகளை எதிபார்க்கும் மக்கள் இருக்கும் ஊர். என் அம்மா அப்பாவை, அம்மா அப்பாவாகத்தான் எனக்குத் தெரியும். அவர்களையும் கணவன் மனைவியாக அறிமுகம் செய்து வைத்த ஊர். என் அப்பாவிடம் அம்மாவைப் பற்றி இருக்கும் ‘பொசசிவ்நஸ்’ புரிய வைத்த ஊர். அவர்களுடைய தனிமனித உரிமைகளில் தலையிடுவதை சுத்தமாக விரும்பாத பல மனிதர்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நான் அவர்களுடைய உறவினனாக இருந்த பொழுதிலும் பல விஷயங்களில் என் தலையீட்டைக் கூட விரும்ப மாட்டார்கள் தான்.

இதை புரிந்து கொள்வது கஷ்டம், என் மாமா, என் அத்தை என்பதே கிடையாத ஒரு ஊரில் என் தமிழன் என்பதை தேடிக்கொள்வதை என்னவென்று சொல்வது. டெல்லி மாதிரியான ஒரு நகரத்தில் பெரிய வேலையில், அரை லட்சம்(நன்றி குழலி) மேல் மாத சம்பளம் வாங்குபவர்கள் கூட சனிக்கிழமைகளில் வேலை பார்க்கவேண்டியிருக்கும். அவர்களை பொறுத்தவரை மீதமுள்ள விடுமுறையை கொஞ்சமும் பாழாக்க விரும்பமாட்டார்கள் அது என்னவாக இருந்தாலும். நாம் சென்று ‘நான் டெல்லிக்கு வந்து ஒரு மாசம் கூட ஆகலை, இந்தியும் அவ்வளவா தெரியாது, இங்கிலீஷும் மெதுவடை(நன்றி ‘செந்தழல்’ ரவி) மாதிரி, நார்த் டெல்லியில் இன்டர்வியூ இருக்கு கொஞ்சம் வந்து உதவ முடியுமா?’ என்பது போன்ற கேள்விகள் டெல்லியில் முட்டாள்த்தனமானவை தான். கையில் மேப்பைக் கொடுத்து வண்டி நம்பர்களை கொடுத்து, என்ன பேசவேண்டும் எப்படி பேசவேண்டும் என்பதையும் எழுதிக் கொடுப்பார்களே ஒழிய வந்து வெயிட் பண்ணி உங்களை இன்டர்வியூ முடித்து அழைத்துச் செல்ல மாட்டவேமாட்டார்கள்.

அவர்களுக்கு உங்கள் மீது பாசம் கிடையாதா என்றால் அப்படியில்லை அந்த பாசத்தை விடவும் முக்கியமான விஷயம் இருக்கிறது பார்ப்பதற்கு என்பதுதான் அதற்கு பொருள். இப்படியிருக்க ‘சார் நான் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன், இங்கிருக்கிற தமிழ்ச்சங்கம் எங்கேயிருக்குன்னு தெரியலை கொஞ்சம் வண்டியில் இறக்கி விட்டுர்றீங்களா?’ என்பது போன்ற கேள்விகளுக்கு எந்த மாதிரியான ரியாக்ஷன் கிடைக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

நான் ஆரம்பத்தில் இருந்தே ஒரு விஷயத்தை எழுதி உணர்த்தவில்லை அது நான் டெல்லி வரும் மக்களிடம் தமிழில் உரையாடுவேனா உதவுவேனா என்பதைப் பற்றியது அதற்கான விடையை நான் சொல்லாமல் நீங்களே ஊகித்துக்கொள்ள விட்டுவிடுகிறேன். ஆனால் ஒரு விஷயம் இந்த ‘தனிநபர்’ கான்சப்டை அவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ள முடியாதுதான்.

நான் இளங்கன்றாய் இருந்தாலும் எதைப்பற்றியுமே ஒரு ஒப்பீனியன் பெரும்பாலும் இல்லாமல் இருந்ததாலும் அந்த சூழலுக்கு மாறிக்கொள்ள முடிந்தது. தமிழ்நாட்டு சூழலில் தாம்பத்தியம் நடத்தி பின்னர் டெல்லி வந்தால் வரும் பிரச்சனைகளை என்னால் சொல்லாமலே விளங்கிக்கொள்ள முடிகிறது.

உண்மைதான் இங்கிருக்கும் டெல்லி வாழ் மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு(குறிப்பாக பெண்களுக்கு) டெல்லி வாழ்க்கை முறை தெரிந்த, இங்கே வாழ்ந்தவர்களின் பையனைத்தான் விரும்புகிறார்கள். வண்டியில் ஒன்றாய் பயணம் செய்வது, ஹக்கிக் அண்ட் கிஸ்ஸிங் வெற்ய்ம் எழ்யுத்தாய் இருக்காமல் சர்வ சாதாரணமாய் இருக்கும் ஊர் பெண்களை தமிழ்நாட்டு பாரம்பரிய மணமகன் புரிந்துகொள்வதில் உள்ள பிரச்சனை அவர்களுக்கு நன்றாகத் தெரிந்து தான் இருக்கிறது.

இதைத் தான் நான் மங்கையின் பதிவில் மென்டாலிட்டி மாறாமல் டெல்லியில் வாழ்வது வேஸ்ட், நீங்களும் கஷ்டப்படுவீர்கள் மற்றவர்கள்யும் கஷ்டப்படுத்துவீர்கள் என்று கூறினேன். பல சமயங்களில் இந்த விஷயத்தை புரிந்து கொள்வதற்கு உங்கள் படிப்பறிவு போதாது பட்டறிவு அவசியம்.

ஒரு பெண் இன்று என்னுடனும் அடுத்த நாள் இன்னொரு பையனுடனும் பைக்கில் பயணம் செய்வதும், என்னுடனும் அந்தப் பையனுடனும் உரசிப் பேசுவதும் உங்களுக்கு தேவிடியாத்தனமாகத் தெரியலாம். ஆனால் அந்த ஊரில் வளர்ந்த பெண்ணுக்கு அது சர்வ சாதாரணம்.

நான் இந்தப் பதிவில் எங்கேயும் கற்பைப்(???) பற்றி குறிப்பிடவில்லை. அதுமட்டுமில்லாமல் இவைகள் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் மட்டுமே, இதை பொதுப்படுத்த முடியாது. ஒன்றே ஒன்று, இவையெல்லாம் இல்லாமல் தமிழ் தமிழ் என்று உயிரைக் கொடுக்கக்கூடியவர்கள் டெல்லியில் மிக அதிகம் பேர் இருக்கிறார்கள். மிக அதிகம் பேர், அவர்கள் ஏன் அப்படியிருக்கிறார்கள் என்று கேட்பதுவும் தவறு, மற்றவர்கள் ஏன் அப்படியில்லை என்று கேட்பதுவும் என்னைப் பொறுத்தவரையில் தவறுதான்.

அவன் கண்விடல்

அன்று ஒரு அதிர்ஷ்டமான நாள் என்பதற்கான அறிகுறி காலையிலேர்ந்து தெரியவில்லை, பாட்டரி தீர்ந்திருந்ததால் நின்று போன அலாரம் க்ளாக், தலைநகரின் டிசம்பர் மாதக் குளிரில் குளிக்க அயர்ன் ராட் போட்டுவிட்டு ஞாபகமறதியில் சுவிட்சை அணைக்காமல் சூடுபார்க்கிறேன் பேர்வழி என்று கையில் நறுக்கென்று வாங்கிய மின்சாரக்கடி, இனிமேல் ஆபிஸ் போனாலும் அரைநாள் விடுப்புதான் எனத் தெரிந்தாலும் பார்க்கவேண்டிய வேலை பாக்கிக்காக, அவசரஅவசரமாக எடுத்த பல்ஸர் பெட்ரோல் இல்லாமல் பங்கிற்கு 100 மீட்டர் முன்பே நின்றுவிட நான் நிச்சயமாய் நினைக்கவில்லை இன்று அதிர்ஷ்டகரமான நாளாக இருக்குமென்று. எல்லாம் மாறியது ஒரு நொடியில்.

வெள்ளை சுகிதாரில், குளிருக்கு இதமாய் கருப்புநிற ஸ்வெட்டர் அணிந்த பஞ்சாப் கோதுமை நிற பிகரொன்று ரோட்டோரத்தில் லிப்ட் கேட்க, நான் யோசித்துப் பார்த்தேன் டெல்லி டிபார்ட்மெண்ட் ஆப் ரிஸர்ச் அண்ட் டெவலப்மெண்ட்டில் வேலைக்குச் சேர்ந்த இந்த இரண்டு வருடத்தில் எத்தனை நாட்கள் கனவு கண்டிருப்பேன் இதுபோல் பிகரொன்றை பல்ஸரில் ஏற்றிக்கொண்டு வீதிஉலா வரவேண்டும் என்று, நான் விட்ட பெருமூச்சை அவள் உணர்ந்திருப்பதற்கானச் சாத்தியக்கூறுகள் குறைவுதான். அவளருகில் வண்டியை நிறுத்தினேன் அவள் எங்கே போகவேண்டும் என்கிறாளோ அங்கே போவதற்கான முடிவை எடுத்தவனாய், ஹெல்மெட்டைக் கழட்டினேன்.

“சவுத்எக்ஸ்-பே டிராப் கர்ஸக்தா க்யா? தோடாஸா அர்ஜண்ட் காம் ஹை. பஸ் நை மில்ர” அவள் கெஞ்சும் பாணியில் கேட்க, “நோ ப்ராப்ளம்” என்று சொல்லாமல் தோளைக் குலுக்கிக் காட்டியவனாய் மீண்டும் ஹெல்மட் தலைக்கு நான் மாற்றும் நேரத்தில் பட்சி வண்டியில் கெத்தாய் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து பிடிமானத்திற்காய் தோளில் கை வைத்தாள். சாதாரணமான விஷயமாக அவள் செய்த இதை சாதாரணமா நான் எடுத்துக்கொள்ள நிறைய நேரம் பிடித்தது. நான் அணிந்திருந்த ஜெர்கின், ஆஃப் ஸ்வெட்டர், சட்டை, பனியன் இதையெல்லாம் தாண்டி அவள் உள்ளங்கையின் வெப்பம் உடலைத்தாக்குவதாய்ப் பட்டதை உள்மனம் மட்டும் மாயை என்று சொல்லியது. அதை அடக்கி இன்ஜினை விரட்டினேன்.

கிட்டத்தட்ட ஐஐடி டெல்லி, ஹவுஸ்காஸ் எல்லாம் நொடியில் தோன்றி மறைந்து அய்ம்ஸை நெருங்கும் சமயத்தில் பக்கத்தில் வந்து கொண்டிருந்த மாருதி ஜிப்ஸி ஒன்று இன்டிகேட்டர் சிக்னல் ஒன்றும் கொடுக்காமல் பட்டென்று வலதுபக்கம் திரும்ப டிஸ்க் பிரேக்கையெல்லாம் தாண்டியும் என் வண்டி குடைசாய்ந்தது.

“குத்தே கம்மினே…” நான் திட்டிக் கொண்டே முதலில் அந்த கார்க்காரனை அடிக்கக் கிளம்பினேன், பின்னர் தான் ஞாபகம் வந்தது பின்னால் உட்கார்ந்து வந்துகொண்டிருந்த தேவதையின் நினைவு. அவளும் கீழே விழுந்திருந்தாள் முழுங்கையில் நல்லஅடி நெற்றியில் லேசாய்ச் சிராய்ப்பு. அந்த நிமிடத்தை மீண்டும் நினைவில் கொண்டு வந்த எனக்கு அவள் பின்பக்கமாய் விழுந்திருக்க வேண்டுமென்பது புரிந்தது. பின்பக்கத்தில் நல்ல அடி பட்டிருக்க வாய்ப்புண்டு. சமீபத்தில் சிக்னல் இருந்ததால் கொஞ்சம் ஸ்லோவாய் வந்ததால் பெரிய காயம் ஒன்றும் இருக்க வாய்ப்பில்லைதான். ஆனாலும் பெண்ணல்லவா கையைக் கொடுத்து தூக்கிவிட்டேன்.

“ஸாரிஜி, உஸ்கா கல்தி ஹை.” மன்னிப்பு கேட்கும் மனோபாவத்தில் நான் தாமதித்த சில நிமிடங்களில் ஜிப்ஸிக்காரன் எஸ்க்கேப் ஆகியிருந்தான்.

முழங்கையில் இருந்து வழிந்த இரத்தத்தை துடைக்க ஜீன்ஸிலிருந்து கர்சீப்பை எடுத்துக்கொடுத்தேன். “தேங்க்ஸ்” சொல்லி வாங்கிக் கொண்டவளை, எதிர்பக்கம் இருந்த எய்ம்ஸிற்கு கூட்டிக்கொண்டு வந்தேன். அடுத்த அரைமணிநேரத்தில் டிரஸ்ஸிங் முடிந்து கையிலும், தலையில் கட்டுப் போட்டிருந்த வாக்கில் கேன்டீனில் உட்கார்ந்து டீ ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

“நீங்க தமிழா?”

எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை, அவள் தமிழில் பேசியதைக் கேட்டதும்.

“நீங்க தமிழா? உங்களுக்கு எப்டி தெரியும் நான் தமிழ்னு?”

“நீங்க அந்த மாருதிக்காரனை திட்டினீங்க தமிழில்.”

ஆஹா திட்டினீங்களா, அவனைக் காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தேன். நல்ல தமிழாவா இருக்கும் எல்லாம் மோசமானத் தமிழ் தான். ஒரு பிகரைக் கூட்டிக்கொண்டு போகும் நல்ல சந்தர்ப்பத்தில் இப்படி ஆக்ஸிடெண்ட் பண்ணி மானத்தை வாங்கிட்டானேன்னு நல்ல நல்ல கெட்ட வார்த்தைகளால் திட்டியிருந்தேன். அதுவரை கண்களை மட்டும் பார்த்து பேசிக் கொண்டிருந்தவனுக்கு அதன் பின் கண்களை பார்க்க முடியாமல் போனது. திரும்பத்திரும்ப என்ன கெட்டவார்த்தை ப்ரயோகித்தேன் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

“எங்க அப்பா ஒரு பஞ்சாபி, அம்மா தமிழ்க்காரங்க அதனால எனக்குத் தமிழ் தெரியும்.” அவள் சொல்ல,

“நீங்க பஞ்சாபியாத்தான் இருப்பீங்கன்னு நினைச்சேன்…” சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டேன். என்னவோ புரிந்தவளாய்ச் சிரித்தவள் “எப்டி அப்டி நினைச்சீங்க…” அவள் கேட்டதற்கு பதிலெதுவும் சொல்லாமல் தரையையும் கையில் இருந்த டீ கப்பையயும் பார்த்துக் கொண்டிருந்தவன், ஏதோ நினைவுக்கு வந்தவனாய்,

“முக்கியமான வேலை இருக்கிறா சொன்னீங்க. இல்லையா?”

அப்படியும் ஈர்க்கும் அந்தக் கண்களைப் பார்ப்பதை தவிர்க்கமுடியாமல் பார்த்தவனுக்கு தெரிந்தது அவளிடம் இருந்த தமிழ் அழகுகள். இதை எப்படி அப்பொழுது கவனிக்காமல் போனேன் என்று நினைத்தேன். பின்னர், பார்க்கவேண்டியதைப் பார்க்காமல் வேற எதையாவது பார்த்துக் கொண்டிருந்தது நினைவில் வந்தது, பார்த்ததை வைத்து மாநிலத்தை மட்டுமல்ல எதையுமே கணிக்க முடியாதென்று நினைத்தவனாய் மெலிதாய் சிரித்தேன்.

என் மனதில் ஓடுவதை படிப்பவளைப் போல் கண்களையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தவள்,

“என்ன சிரிக்கிறீங்க?” கேட்க,

“இல்ல அந்த மாருதிக்காரனுக்கு தேங்க்ஸ் சொல்லியிருக்கணும்னு நினைத்தேன் சிரிப்பு வந்தது.” சொல்லிவிட்டு சிரித்தேன்.

கண்களை முடிந்த அளவிற்கு விரித்து, அதன் ஓரத்தில் ஒரு கேள்விக்குறியை நிறுத்தியவளுக்கு பதிலாய்,

“இல்லாவிட்டால் இந்நேரம் உங்களை சவுத்எக்ஸில் இறக்கி விட்டுட்டு ஆபிஸ் போயிருப்பேன். உங்கக்கூட பேசிக்கிட்டிருக்கிற இந்த சந்தர்ப்பம் கிடைச்சிருக்குமா அதான்.”

தாஸ் நீ எங்கேயோ போய்ட்டடா, நீதானா நீதானா இப்படி. மனதின் உள்ளிருந்து எனக்கு மட்டும் காதுகிழியும் அளவிற்கு சப்தமாய்க் கேட்கும் சப்தத்தை உதறித்தள்ளியவனாய், அவளுடைய மறுமொழியை அறிந்து கொள்ளும் ஆவலில் அவளை நிமிர்ந்து பார்த்தேன். அழகாய் உதடு பிரிக்காமல் சிரித்தவள்.

“நல்லா பேசுறீங்க, தமிழ்ல பேசிக் கேட்டு ரொம்ப நாள் ஆகுது. அதுவும் உங்கள மாதிரி வேடிக்கையா பேசிக்கேட்டு ரொம்ப வருஷம் ஆகுது.” சிரித்தாள்.

சிறிது நேரம் இப்படி வேடிக்கையாய் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவனுக்கு அவள் கேட்கப்போய்தான் நினைவில் வந்தது வேலைக்கு போகாமல் இங்கே உட்கார்ந்திருந்தது, என்னதான் இவ்வளவெல்லாம் பேசினாலும் மொபைல் நம்பர் கேட்க தைரியமில்லாமல் குட்பையுடன் முடிந்தது அந்தச் சந்திப்பு.

ஒட்டுமொத்த என்னுடைய ஐந்தாண்டு வெளிமாநில அனுபவத்தில் பெண்களுடன் அதிகப்படியாக பழகியது அதுதான் முதல் முறையாக இருக்கும். எப்படியிருந்தாலும் கொஞ்ச நேரத்தில் பிரியப்போகிறவள் தானே என நினைத்ததால் என்னுடைய ஈகோ கொஞ்சம் உறங்கியிருந்த சமயத்தில் நடந்த சந்திப்பில் முழுதாய் பறிகொடுத்துவிட்டதாய் உணர்ந்தேன் ஏதோ ஒன்றை.

இது நடந்த இரண்டாவது நாளில் மற்றொரு அதிர்ஷ்டமான நேரத்தில் நேரு ப்ளேஸின், இருபத்தைந்தடுக்கு பில்டிங்கின் லிப்ட் ஒன்றில் அவளைச் சந்தித்தேன், அதுவும் தனியாய் நானும் அவளும் மட்டும். ஆச்சர்யங்கள் எப்பொழுதும் நடப்பதில்லைதான் ஆனால் எனக்கு நடந்தது. நான் மனதின் ஓரத்தில் நினைத்ததை தேவர்கள் கேட்டு ‘ததாஸ்து’ சொல்லியிருக்க வேண்டும் லிப்ட் அரைகுறையாய் நின்றது நடுவில்.

என்னைப் பார்த்து அவள் அடைந்த ஆச்சர்யத்தை அவள் கண்கள் படம் போட்டுக் காட்டின.

“வாட் அ ப்ளஸண்ட் சர்ப்ரைஸ், இன்னிக்கு காலையில் தான் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். அன்னிக்கு உங்க போன் நம்பர் கூட வாங்கலைன்னு அதற்குப் பிறகு தான் ஞாபகம் வந்தது.”

அவள் சொல்லச்சொல்ல எனக்கு தேவர்கள் பூமாறி பொழிவதாகத் தோன்றியது, அதன் பிறகு நடந்ததாகத்தான் இருக்க வேண்டும் அந்த ததாஸ்து சம்பவம். நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை, அவளும் கொஞ்சம் கூட பயப்படாமல்,

“இங்க இப்படித்தான் அடிக்கடி லிப்ட் பெயிலியர் ஆயிரும். அஞ்சு பத்து நிமிஷத்தில் சரியாயிரும்.”

என்னவோ நான் அது சரியாக வேண்டும் என்று கவலைப்படுவதாய் நினைத்து. அதைப் பற்றிய ப்ரக்ஞையே இல்லாமல் நான் இரண்டு நாளாக கனவில் அவளுடன் பேசியதில் நினைவாக்க எந்த ஒன்று நன்றாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

லிப்ட் கடகடவென சப்தத்துடன், மெதுவாய் ஒருமுறை ஆட அதுவரை சாதாரணமாய் எதிரே நின்று பேசிக்கொண்டிருந்தவள் பயந்துபோய் அருகில் வந்து ஒட்டி நின்றுகொண்டாள். எனக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது இருந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை, ஆனால் இருவருக்குமே பேச்சு வரவில்லை, சிறிது நேரத்தில் கரெண்ட் கட்டாகிப் போய் இன்னுமொறுமுறை லிப்ட் ஆடத்தொடங்க, பக்கத்தில் நின்று கொண்டிருந்தவள் பயந்துபோய் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள், அந்தப் பயங்கரமான சூழ்நிலையிலும் அவள் போட்டுக்கொண்டிருந்த செண்டின் வாசம் என்னை அலேக்காகத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டது. நான் அவளுக்கு தைரியத்தை ஏற்படுத்த நினைப்பவனாக ஒரு கையை அவள் தோளைச் சுற்றிப் போட்டு இறுக்கிப் பிடித்தேன். அப்பொழுது தான் அவளுக்கும் எனக்குமான உயர வித்தியாசம் தெரியவந்தது அப்படியே எங்கள் இருவருக்குமான நிறங்களின் வித்தியாசமும். அன்று அவள் ஸ்லீங்லெஸ் ஜாக்கெட் அணிந்து புடவை கட்டியிருந்தாள்.

“ப்ரார்த்தனா பயப்படாதீங்க, இதே பில்டிங்கில் நம்ம பிரண்டொருத்தன் இருக்கான் அவனைப் பார்க்கிறதுக்காகத்தான் வந்தேன். ஒரு நிமிஷம் போன் செய்து அவனைப் பிடிக்கிறேன்.”

தோள்களில் இருந்து கைகளை எடுக்காமல் இடது கையாலேயே மொபைலை எடுக்க துரதிஷ்டிர வசமாக சிக்னல் கிடைக்கப்போய், அவனிடம் நாங்கள் இருக்கும் நிலையை விவரித்து, அவன் வருகைக்காகவும் உதவிக்காகவும் காத்திருந்த சமயங்கள் மிகவும் அழகானவை சொல்லப்போனால் போதையானவை. அவளுடைய அருகாமை என்னுள் பெரும் மாற்றத்தை உருவாக்கியிருந்தது. அருகாமையென்றால் ஒருவருடன் ஒருவர் உரசிக்கொண்டு இருந்ததில் எதையோ ஒன்றை இழந்து கொண்டிருந்தேன் என்பது தெளிவாக விளங்கியது.

ஒருவழியாய் லிப்டை மேலே தூக்கி நாங்கள் வெளியில் வந்ததும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக்கூட வெட்கப்பட்ட நாங்கள் ஒரு மணிநேரத்தில் டெல்லியின் பிரபலமான ஒரு ஹோட்டலில் அருகருகே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

“அட நீங்க ஒன்னுங்க லேப்டாப் ரொம்ப செக்யூர்டா இருக்கணும்னு கவர்மெண்ட் செக்யூர்ட் கீ கான்பிகர் பண்ணிக்கச் சொல்லி இங்க அனுப்பினாங்க. அந்த செட்டப் எல்லாம் முடிச்சி இரண்டு மூணு தடவை யூஸ் பண்ணிப் பார்த்துட்டு வர்றதுக்கு ஒரு மணிநேரம் ஆய்டுச்சு. ரொம்ப லேட் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்.”

நான் முதல்முறை அவளைச் சந்தித்த பின் தான் நினைவில் வந்தது அன்று லாப்டாப் என்னிடம் இல்லாதது, டிஆர்டிவோவில் லேப்டாப் கொடுத்ததும் சந்தோஷமாய் வாங்கியதற்கு ஒரே காரணம். இனிமேல் ரோட்டில் சீன் போடலாம் என்றுதான். அன்றைக்கென்று பார்த்து லேப்டாப் கையில் இல்லாததை ஒரு பெரிய குறையாக நினைத்தேன். என்னை அவளிடம் சரியாய் லேப்டாப் அறிமுகம் செய்து வைக்கும் என்று நினைத்தே அந்தப் பேச்சை இழுத்தேன். அப்படியே வேலை செய்தது.

செக்யூர்டு கீயை இன்னொரு முறை சோதனை செய்து பார்ப்பவனைப் போல் ஹோட்டலிலேயே அவளுக்கு செய்முறை விளக்கம் செய்து காட்ட அவள் முகம் பிரகாசமடைவதை உணரமுடிந்தது. அவளும் ஆர்வமாய் சில கேள்விகள் கேட்க, அவளுடைய கம்ப்யூட்டர் திறமையை ஆச்சர்யத்துடன் கவனித்தேன். முதல் முறையைப் போலில்லாமல் அவளுடைய பர்ஸனல் விவரங்களை அடுக்கியவள் மறக்காமல் மொபைல் நம்பரை கொடுத்து என்னுடையதை பெற்றுக்கொண்டு சென்ற ஒரு வாரத்தில் எல்லாம் எங்களுக்கிடையேயான இடைவெளி குறைந்திருந்தது, எவ்வளவென்றால் ஆடையின் அவசியம் எங்களுக்கிடையில் இல்லாமல் போகுமளவிற்கு.

இது எனக்கும் ஆச்சர்யமான விஷயம் தான். டெல்லி போன்ற ஒரு சிட்டிக்கு வேலைக்கு வந்து இரண்டு வருடங்களாக பிரம்மச்சரியத்தையும் ஆஞ்சநேயரையும் சைட் அடிப்பது என்ற ஒரே ஒரு எக்ஸம்ஷனுடன் காப்பாற்றி வரும் நான் இப்படி ஆனது வேதனையுடன் சேர்த்து சந்தோஷத்தையும் அளித்தது. யாரிடமோ எதையோ ப்ரூவ் பண்ண நினைத்தவன் வெற்றுடம்புகளின் வெம்மைப் பரிமாற்றத்தில் அதை சாதித்ததாய் உணர்ந்தேன். ஆனால் உள்மனம் யாரோ ஒரு பெண்ணை அவளுடைய பெற்றோரை ஏமாற்றுவதாய் உளறிக்கொட்ட, ப்ரார்த்தனா ஒன்றும் சின்னப் பெண் கிடையாது அவள் செய்வது எத்தகையது என்பதைப் பற்றி அவளுக்குத் தெரியும் என்று சமாதானம் செய்து கொண்டிருந்தேன்.

அத்தனை நாள் பிரம்மாண்டமாய் தோற்றமளித்த அவள் குறிப்பாய் அவள் உடல் பற்றிய எண்ணங்கள் நிர்வாணத்தில் கரைந்து கொண்டிருந்தன. அத்தனை நெறுக்கும் பயத்தையும் அவளின் மீது பச்சோதாபத்தையும் ஏற்படுத்தியது. அசந்து தூங்கிக் கொண்டிருந்தவளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவன் எப்பொழுது தூங்கினேன் என்றே தெரியாமல் தூங்கிக்கொண்டிருக்க இன்டலிஜென்ஸ் பீரோ ஏஜன்டுகள் வந்து எழுப்பி “இராணுவ சம்மந்தமான தகவல்களை வெளியானதற்காக” கைது செய்வதாய் சொன்னதும் தான் ஒரு வாரம் நடந்தவைகளை திருப்பிப் பார்த்தேன் ஒரு திருத்தப்பட்ட குறளுடன்.

இதனை இதனால் இவன்செய்வன் என்றாய்ந்து
“அவளை” அவன் கண்விடல்.

(புகைப்)படம் பார்த்துப் (படம்)பெயர் சொல்லு

இவைகள் ஆங்கிலப் படத்தின் பெயரை மறைமுகமாகச் சொல்லும் புகைப்படங்கள், இந்தப் புகைப்படங்கள் குறிக்கும் படங்களை சொல்லுங்களேன் பார்க்கலாம். ஆனால் பரிசெல்லாம் ஒன்னும் கிடையாது.

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

இந்தி இந்தியாவின் தேசிய மொழியா???

இது பெரும்பாலும் இந்தியாவின் வடமாநிலங்களில் வேலை பார்த்த அனைத்து தமிழ் நாட்டு மக்களுமே தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது யாராவது அவர்களிடம் கேட்டிருக்ககூடிய கேள்விதான். என்னிடமும் இந்தக் கேள்வி பலமுறை கேட்கப்பட்டிருக்கிறது. தேசிய மொழி தெரியலைன்னு சொல்ரியே கேவலமாயில்லையான்னு, நிறைய முறை மறுத்து பேசியிருக்கிறேன் என்றாலும் மனதின் ஒரத்தில் ஒரு முழுமையான நிறைவு இல்லாமல் தான் அப்படி பேசியிருப்பேன் காரணம்.

ஒரு வகையில் சொந்தமாக இந்தி படித்துவிட்டு, சும்மா பேருக்கு இந்தியை எதிர்த்துக்கிட்டு ஆனால் சொந்தக்காரங்களை இந்தி படிக்கவைக்கும் சில அரசியல் வாதிகளுக்கும் எனக்கும் பிறகு என்ன வித்தியாசம் இருக்க முடியும். ஆனால் முட்டாள்த்தனமாக இந்திக்காரர்கள் இந்தி தெரியாதவனை கேவலமாப் பேசினா எதிர்த்து சண்டை போட்டிருக்கேன், போட்டுக்கொண்டிருக்கிறேன் நிச்சயம் இனிமேலும் போடுவேன்.

ஆனால் யாரோ ஒரு ப்ளாக்கர் சொன்ன மாதிரி, அமேரிகாவுக்கு போறிங்கன்னா கொஞ்சமாவது இலக்கணப் பிழையில்லாம ஆங்கிலம் பேசக்கத்துக்கிட்டு போறது பெட்டர் மாதிரி. உங்களுக்கு தேவையிருக்கும்னு தெரிஞ்சால், பிற்காலத்தில் உங்களுக்கு இந்தியாவின் வட மாநிலங்களில் வேலை கிடைக்கும் வாய்ப்பாவது இருக்கும்னு தெரிந்தால் இந்தி படித்து வைத்துக்கொள்வது நல்லது. ஆனால் தமிழ்நாட்டிலிருந்து நேராய் அமேரிக்கா போகும் அளவிற்கு தகுதியிருப்பவர்களுக்கு இந்தப்பிரச்சனையெல்லாம் கிடையாது.

உண்மையை சொல்றேனே, நான் படிச்சது பிஎஸ்ஸி, நான் மெட்ராஸில் தான் வேலைக்கு போவேன்னு உட்கார்ந்திருந்தால் ஒருவேளை என் திறமைக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டு வேலை கிடைத்திருக்கும். ஆனால் நானெல்லாம் முடிச்ச சோட்டுல, டெல்லியைப்பார்க்க போய்ட்டேன். சுலபமா வேலை கிடைத்தது. முதலில் எனக்கு பிஎஸ்ஸி முடித்ததும், மாஸ்டர்ஸ் படிக்காமல் வேலைக்கு போய்விட முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தது என்னுடைய கணிணித்திறமையென்றால், அதற்கு உதவியது டெல்லியில் இருக்கும், இருந்த என் சொந்தக்காரர்கள் என்றால், ஒரு சதவீதமாவது உதவியது என்னுடைய, டெல்லியில் எனக்குத்தெரிந்த இந்தி பேசி சமாளித்துவிடமுடியும் என்ற ஒரு கான்பிடன்ஸ்.

நீங்கள் தமிழ்நாட்டில் உட்கார்ந்திருந்தால் வேலை கிடைக்காதென்றொ இல்லை கஷ்டப்படுமென்றோ சொல்லவில்லை. ஆனால் நீங்கள் தமிழ்நாட்டில் வேலை கிடைக்காமல் இருக்கும் சமயத்தில் டெல்லிக்கு சென்று வேலை தேட நினைக்கிறீர்களா? டெல்லியில் உங்களுக்கான வேலை காத்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா? இந்தி தெரிந்தால் ஒரு மாதம் யோசிக்கும் நீங்கள் அந்த முடிவை இன்னும் சீக்கிரத்தில் எடுக்க முடியும்.

அதற்கு எனக்கு உதவியது டெல்லியில் இருக்கும் உறவினர்கள் கொஞ்சம் என்றாலும் நானெல்லாம் தைரியமாய் அம்மா, அப்பாவை விட்டு தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் உட்கார்ந்தது நாலு வார்த்தை இந்தியில் பேசி சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தான். இதேபோல் கூட இல்லை என்னை விட மேல் படிப்பு படித்துவிட்டு வேலையில்லாமல் உட்கார்ந்திருக்கும் என் உறவினர்களையும் அழைக்கத்தான் செய்கிறார்கள் டெல்லியிலிருந்து. ஆனால் போகாமலிருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் என்றால் அதில் இந்தி தெரியாதென்பது ஒன்றாகயிருக்கிறது.

அங்கே போய் இந்தி படித்துக்கொள்ளலாம் என்பதெல்லாம் உண்மைதான். இதெல்லாம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் முன்னுக்கு வரணும் என்று நினைக்கும் கேட்டகிரியினருக்கு சரிவரும். சி, சி++, ஜாவா படித்தாலே வேலை கிடைக்கும் நிலை இன்றும் இருக்கும் பொழுது, அதன் அட்வான்ஸ்ட் டெக்னாலஜிக்களை படித்து வைத்துக்கொள்வதில்லையா, J2EE, Struts, EJB இப்படி.

இதெல்லாம் வேலையில் சேர்ந்த பிறகு படிக்க முடியாதா என்றால். நிச்சயம் முடியும். எனக்குத்தெரிந்து எத்தனை பேர் வட இந்தியாவில் மூன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் வேலைசெய்துவிட்டும் கூட இந்தியில் நாலு வார்த்தை பேச முடியாமல், துணிவாங்கணும்னா, கடையில் போய் காய்கறி வாங்கணும்னா, சலவைக்கு போட்ட துணிகளை திரும்ப வாங்கணும்னா, இல்லை ஆட்டோவில் போகணும்னா, நாலுவார்த்தை இந்தி தெரிந்த ஆட்களை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழ்நிலையை நிறையப் பார்த்திருக்கிறேன்.

இன்னும் ஒரு விஷயம், என்னுடன் வேலை செய்த எத்தனையோ நண்பர்களுக்கு அவர்களுக்கு கிடைப்பதை விட, கூடுதலாய் 30% ஹைக், டெல்லிக்கு வந்தால் கிடைக்கும் என்ற நிலையில் டெல்லிக்கு போக மனமில்லாமல், இங்கேயே இருக்கிறார்கள் சிலசமயம் அவர்களுடைய மனநிலை வினோதமாகயிருக்கும். புனேவில் சமாளித்துவிட முடியும் என நினைத்து வருபவர்கள் கூட டெல்லிக்கு போக பயப்படுகிறார்கள். கேட்டால் இது பக்கம் என்று பதில் வேறு.

இன்றும் நான் வேலை செய்யும் கம்பெனியில் அது ஒரு இன்டர்நேஷனல் கம்பெனியாக இருக்கும் பொழுதும், எங்களுடைய டீம் மீட்டிங்கள் இந்தியில் போய்க்கொண்டிருப்பது தான் உண்மை, சில சமயம் ஆன்சைட் குவார்டினேட்டர்களுடனான மீட்டிங்குகள் கூட, தமிழ் நாட்டில் மீட்டிங்குகள் தமிழில் செல்வதாக நான் கேள்விப்பட்டதில்லை(நான் இதுவரை தமிழ்நாட்டில் வேலை பார்க்கவில்லை).

ஒரு ப்ரொஜக்ட் டீமில் இருக்கும் எட்டு ஒன்பது பேரில் ஒருவர் தமிழராக இருக்கப்போய், அவருக்காக அந்த டீம் முழுவதும் இந்தியை விட்டுவிட்டு கம்பெனியின் மொழி ஆங்கிலம் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசுவார்கள் செய்துகொண்டு வரும் தமிழர்கள் படும் பாடு வேடிக்கையாகயிருக்கும். ஒரு விஷயம் மட்டும் அப்படிப்பட்ட சூழ்நிலையில் நிச்சயமாக நடக்கும் அது அவர்கள் டீமிலிருந்து தனிமைப்படுத்தப்படுவார்கள். சிறுபான்மை சமுதாயம் எங்கும் உண்டு அதாவது அப்படி ஒருவர் இருக்கும் பொழுது ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கும் டீம் லீடுகள் இங்கேயும் உண்டு ஆனால் பர்சன்டேஜ் குறைவு. மிகவும்.

என்னைப் பொறுத்தவரை. இன்று வடமாநிலத்தில் இருக்கப்போகிறேன் என்று தெரிந்ததால் இந்தி கற்றுக்கொண்டது போல் நாளை ப்ரான்சிற்கொ இல்லை ஜெர்மனிக்கோ போக நினைக்கும் பொழுது அந்த மொழிகளை கற்றுக்கொள்ள நிச்சயம் முனைவேன். அந்த மொழியில் மாஸ்டர் ஆக நினைக்காமல் நாலுவார்த்தை பேசவும் அந்த மொழியை புரிந்து கொள்ளவும் என்னால் ஆன முயற்சி நிச்சயமாக செய்யப்படும் அது ப்ரான்ஸிற்கோ இல்லை ஜெர்மனிக்கும் போன பிறகாக நிச்சயம் இருக்காமல் இங்கிருக்கும் பொழுதே செய்யப்படும் முயற்சியாக இருக்கும்.

யாரையும் இந்தி படிக்கச் சொல்லும் படி நான் நிச்சயமாக வலியுறுத்தவில்லை, இன்று வரை என்னை பொறுத்தவரை இந்தி இந்தியாவின் தாய்மொழி கிடையாது தான். நிச்சயமாக. ஆனால் உங்களுக்கு தேவையிருக்குமானால் அது இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் கற்றுக்கொள்வதில் தவறேதும் இல்லை.

ஹாஞ்ஜி அச்சாஜி டீக்கேஜி

//அவசியத்தை உணர்ந்து ஒரு மீள்பதிவு, இது மொத்தம் இரண்டு பாகமா நான் எழுதியது. நாளை மற்ற பாகத்தை மீள்பதிவிடுகிறேன். அவசரமென்றால் தேடிப் பார்த்துக்கொள்ளலாம்.

தலைப்பு இந்தி இந்தியாவின் தேசிய மொழியா?//

கொஞ்சம் இந்தியாவிற்கு மேல்புறமாய் வேலை செய்திருப்பவருக்கு இந்த மூன்றும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அச்சாஜியும் டீக்கேஜியும் கொஞ்சம் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருந்தாலும் ஹாஞ்சி பெரும்பாலும் தெரியாது. இது வட இந்தியாவில் குறிப்பாக டெல்லியில் அதிகமாய்ப் பயன்படுத்தப்படும் ஒரு இந்தி வார்த்தை.

நான் முதன் முதலில் டெல்லியில் போய் இறங்கியதும் எனக்கு சொல்லித்தரப்பட்டவை இந்த வார்த்தைகள் தான். இதற்கு பெரும் முன் உதாரணங்கள் எல்லாம் சொன்னார்கள். எப்படியென்றால், இந்த மூணே மூணு வார்த்தைகளை மட்டும் வைச்சிக்கிட்டு டெல்லியை சமாளிச்சிடலாம். பெரும்பாலும் தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு நாங்கள் இதைத்தான் முதலில் சொல்லித்தருவோம் என்று பெரும் பீடிகையெல்லாம் வேறு.

நான் ஒன்றும் இந்தி தெரியாதவன் அல்ல, எனது மாமாக்கள் டெல்லியில் முன்பே இருந்ததாலும் நான் கம்ப்யூட்டர் தான் படிக்கப்போகிறேன் என்பது நான் எட்டாவது படிக்கும் பொழுதே முடிவு செய்யப்பட்டதாலும், இந்தி படிக்கும் படி திணிக்கப்பட்டேன். ஏன்னா நமக்குத்தான் செகண்ட் லேங்குவேஜ் தேர்ட் லேங்குவேஜ் ஒரு இழவும் கிடையாதே. படிச்சதோ தமிழ்மீடியம், மேடைக்கு மேடை ‘தமிழ் பழித்தானை தாய் தடுத்தாலும் விடேன்’ ‘பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் திணையளவு நலமேனும் கிடைக்குமென்றால் செத்தொழியும் நாள் நன்னாள்’ இவைகளை சொல்லாமல் விட்டவன் இல்லையாகையால். எனக்கு முதலில் இந்தி என்மீது திணிப்பதாகவேப் பட்டது.

அதுவும் கிரிக்கெட்டின் மீதான கவர்ச்சி அதன் உச்சத்தில் இருந்த நேரம் எட்டாவது ஒன்பதாவது படிக்கும் நாட்கள். கொஞ்சம் விவரம் தெரிந்து வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படும் நாட்கள் அவை, அந்த சமயத்தில் சாயந்திரம் ஆறு டூ எட்டு இந்தி கிளாஸ்னு சொல்லப்போக, எதிர்கால, டெல்லி அதனைத்தொடர்ந்த அமேரிக்க வாழ்க்கையின் மோகத்தில் கொண்டு செல்லப்பட்டேன்.

அப்படி இப்படின்னு நானும் படிச்சேன் அதுக்கு பாடம் எடுத்த இந்தி டீச்சரும் ஒரு காரணம். அங்கேயும் ஒரு நல்ல ஆசிரியை. ஆனாலும் நான் பிராத்மிக் கூட முடிக்கலை.(அது இந்தியில் ஒன்னாம் வகுப்பு மாதிரி.) இருந்தாலும் எனக்கு எழுத படிக்க வரும். பேச மட்டும் தான் ஆரம்பகாலத்தில் டெல்லி போயிருந்தப்ப வராது.

அப்புறம் மறந்துட்டேனே அந்த மூன்று ஜீக்கள். இவங்க அஜித்தோட அண்ணா தம்பிகள் கிடையாது, (இதை சொல்வதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். ) இந்த மூன்று ஜீக்களுமே ஒருவாறு சுத்திவளைச்சு மையமா ஒரே மீனிங்தான் வரும்னு வச்சுக்கொங்களேன். யாரவது உங்கக்கிட்ட வந்து ஏதாவது கேட்டா இந்த மூன்று ஜீக்களில் எதையாவது ஒன்னை சொல்லணும் இப்படித்தான் முதலில் சொல்லித்தந்தாங்க. எப்படின்னா,

“ஆப் கஹான்சே ஆரஹேஹே?”(“நீங்க எங்கிருந்து வரீங்க?”)
ஹாஞ்ஜி. (ஒரு மாதிரி தமிழில் சரிங்க…. இல்லை ஆமாம்…)

“ஆப்கோ இந்தி ஆத்தா ஹேக்கி நஹி ஹே??”
டீக்கேஜி (ஒரு மாதிரி பார்த்தால் சரிங்க இல்லை ஆமாம்…)

து பாகால் ஹேக்க்யா( நீ பைத்தியமா….)
ஹாஞ்ஜி… (ஒரு மாதிரி தமிழில் சரிங்க இல்லை ஆமாம்.)

இப்படித்தான் ஆரம்பிக்கும் நீங்கள் மேற்சொன்ன வழியை பாலோ பண்ணினால், இந்திக்காரன் சாலே மதராஸி அப்படின்னு சொல்லிட்டு திரும்பிக்கூட பார்க்காம ஒட்டம் எடுத்துறுவான். ஆனால் சில சமயம் நீங்க நல்லா இந்தி பேசுறவறாக் கூட இந்த மூன்று வார்த்தைகளை மாற்றி பேசுவதால் சூழ்நிலை உருவாக்கிவிடும். அப்படித்தான் நிகழ்ந்தது நண்பர் ஒருவருக்கும் அதாவது, அவரும் அப்பொழுதுதான் படித்து முடித்துவிட்டு வேலை தேடி டெல்லி வந்திருந்தவர். ஆனால் பக்கா தமிழன் (நானெல்லாம் அரைவேக்காடு) அதாவது இந்தின்னா அப்படின்னான்னு கேக்குறவரு.

எங்க ஆளுங்க அவருக்கும் இதே மூணுவார்த்தையை சொல்லிக்கொடுத்திருக்க, ஒருநாள் முனிர்க்காவிலிருந்து கனாட்ப்ளேஸ் போகும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த நண்பரின் அருகில் ஒரு பஞ்சாபி உட்கார்ந்திருக்கிறார். நம்மாளோ பார்க்கிறது கொஞ்சம் மாநிறமா பீகார்க்காரங்க போல இருப்பாரு. அவனும் முதலில் ஏதோ கேட்கப்போய் இவரும் ஹாஞ்ஜின்னு சொல்லியிருக்காரு, இப்படி வைச்சுக்கோங்களேன்

ஆப் கனாட் ப்ளேஸ் ஜாரேக் கியா? (நீங்க கனாட் ப்ளேஸ் போறீங்களா?)
இவரு ஹாஞ்ஜீன்னு சொல்ல அப்ப ஆரம்பிச்ச கூத்து, சுமார் ஒரு மணிநேரம் பஞ்சாபி தன்னோட குடும்பக்கஷ்டத்தையெல்லாம் சொல்லப் போக இவரும் இந்த மூணு வார்த்தைகளை திருப்பி திருப்பி போட்டு பேசியிருக்காரு. அதுவும் சந்தர்ப்பம் ஒருமாதிரி ஒத்துப்போக போய்க்கிட்டிருக்கிறது. கடைசியில் கனாட்ப்ளேஸில் இறங்குவதற்கு முன்னர் பஞ்சாபிக்கு எப்படியோ சந்தேகம் வந்து விசாரிக்க நம்ம ஆளு இந்தி தெரியாதுன்னு ஒரு மாதிரி சொல்ல பஞ்சாபிக்கு பலமா கோபம் வந்து கீழே இறக்கிவிட்டு ஒரு அரைமணிநேரம் கெட்ட கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லி திட்டியிருக்காரு. நம்ம ஆளுக்குத்தான் அந்த மேற்சொன்ன மூணைத்தவிர வேறொன்னும் தெரியாதா இவரும் தேமேன்னு முழிக்க கொஞ்ச நேரம் திட்டிய பஞ்சாபி இது ஒன்னுக்கும் தேறாதுன்னு நினைச்சுக்கிட்டே போய்ட்டாராம்.

இதை நண்பர் எங்களிடம் சொல்லப்போய் பின்னர் ரொம்ப நாளைக்கு அந்த நபரை வம்பிழுத்துருக்கிறோம் இதைச்சொல்லி.

டெல்லியில் பெங்களூரில் புனேயில் என்று இந்தி பேசிக்கொண்டு மூன்றாண்டுகள் ஓடிவிட்டதால், எனக்கேற்ப்பட்ட சில இந்தி சார்ந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்துள்ளேன் ஆரம்பத்தில் காமடி பின்னர் மேட்டர். அடுத்த பதிவு காமடியாவா இல்லை மேட்டரான்னு முடிவு செஞ்சுட்டு அப்புறம் போடுறேன். அதுக்கு முன்னாடி கீழ்க்கண்ட பதிவுகளை படித்துக்கொள்ளுங்கள்.

holyox.blogspot.com/2006/01/blog-post_31.html
muthuvintamil.blogspot.com/2005/10/blog-post_28.html
kuzhali.blogspot.com/2005/08/blog-post_13.html