Bridge to Terabithia

இப்படி ஒரு படம் தமிழில் வராதா என்று நான் ஆச்சர்யப்படும் படங்கள், நான் லீனியர், டிரை லாஜி படங்களை மட்டுமில்லை. கொஞ்சம் ஜிம்மிக்ஸ் கலந்த ஆனால் திறமையான நடிகர்களால் நேரம் போவதே தெரியாமல் செய்யும் பிரிட்ஜ் டு தெரிபிதியா போன்ற படங்களையும் தான்.

மிகச் சாதாரணமானக் கதை, படத்தின் டிரைலரைப் பார்த்துவிட்டு கிராபிக்ஸால் பிரமாதப்படுத்தப்படப்போகும் ஒரு படத்தைப் பார்க்கும் ஆர்வம் தான் இருந்தது. அதுவும் “க்ரோகினிகல்ஸ் ஆப் நார்னியா” தயாரிப்பாளர்களிடமிருந்து. ஆனால் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் குறைவே. சொல்லப்போனால் தேவையான அளவே.

ஒரு அமேரிக்க விவசாயக் குடும்பத்தில் இருந்து ஆறாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனைச் சுற்றி நகர்கிறது படம். ஆச்சர்யப்பட வைக்கும் ஓவியத் திறமை அவனிடம் இருக்கிறது, கொஞ்சம் கஷ்டப்படுகிற பேமிலி, மூன்று அக்காக்கள் ஒரு தங்கச்சி. அவனுடைய சூழ்நிலை அவனை அவன் உடன்படிக்கும் மாணவர்களிடம் இருந்து விளக்கிவைக்கிறது இன்னும் சொல்ல வேண்டுமானால் அந்த மாணவர்களுக்கு வம்பிழுக்க கிடைக்கும் ஒரு ஆளாகவே இந்தப் பையன் இருக்கிறான்.

அந்த வகுப்பில் புதிதாக ஒரு பெண் வந்து சேர சூடுபிடிக்கிறது படம், அதுவும் அந்தப் பெண், அந்தப் பையனின் பக்கத்து வீட்டுக்காரியாக இருந்துவிட இருவருக்கும் நட்பு உருவாகிறது. பிறகு அவர்களுடைய நட்பு தான் படமே, அப்பா அம்மா இருவரும் கதாசிரியர்களாக இருக்கும் அந்தப் பெண்ணின் கற்பனையில் உருவாவது தான் தெரிபிதியா. அதையெல்லாம் விவரித்து படம் பார்க்கப்போகும் உங்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை.

அவர்கள் இது போன்ற படங்களில் கூட லாஜிக் உதைக்கக்கூடாதென்று நினைப்பது வியக்க வைக்கிறது. மற்றபடிக்கு நம் ஒவ்வொருவருக்கும் சிறுவயதில் இருந்த கனவுலகத்தை கொஞ்சமே கொஞ்சம் கிராபிக்ஸ் பயன்படுத்திக் காண்பிக்கிறார்கள். மியூசிக் டீச்சராக வரும் Zooey Deschanel நடிப்பு இயல்பாகயிருக்கிறது. நன்றாக கிதார் வாசிப்பார் போலிருக்கிறது? தெரியாதென்றால் நான் நிச்சயம் ஆச்சர்யப்படுவேன் அத்தனை அழகாக கார்ட் பிடிக்கிறார்.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுய ஒருவர், என்ன ஒருவர் ஒரு சின்னப்பொண்ணு படம் காண்பிச்சிருக்கு(Bailey Madison), கீழ்வரிசையில் ஒரு பல் இல்லாமல்(அந்த இடத்தில் பல் இல்லாத குழந்தைகளை நான் பார்த்ததுகிடையாது – தேடிப்பிடித்தார்களா? – அடித்து உடைத்தார்களா? – ஹிஹி) தன்னைத் திட்டிய பெண்ணை, சகோதரனும் அவன் தோழியும் சேர்ந்து பழிவாங்கும் பொழுது ஒரு சிரிப்பு சிரிக்குது பாருங்கள் அந்தப் பொண்ணு Simply Superb.

மற்றபடிக்கு Josh Hutcherson (அந்தப் பையன்), AnnaSophia Robb (அந்தப் பொண்ணு), மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள், அந்தப் பொண்ணு இறந்துவிட்டதாகத் தெரியும் பொழுது அந்தப் பையனின் தாவங்கட்டையெல்லாம் அழுகிறது. ம்ஹூம் நல்லா டிரையினிங் கொடுத்திருக்காங்க.

நிறைய விஷயங்களைப் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள், அந்த குட்டீஸ் வைத்திருக்கும் பிங்க் கலர் பை, அந்தப் பொண்ணின் உடை மற்றும் பை, அவற்றில் குத்தியிருக்கும் சின்ன சின்ன விஷயங்கள்(மணிஷா என்றொரு குட்டீஸைத் தெரியும் எனக்கு டெல்லியில் இருந்த பொழுது. படத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்ததைப் போலிருந்தது – இந்தக் குட்டீஸைப் பார்த்த பொழுது). சின்ன குழந்தகளை கவனிப்பவன் என்ற முறையில் நிறைய கவனித்துச் செய்திருக்கிறார்கள்.

என்ன சொல்ல இந்த மாதிரியான ஒரு படம் தமிழில் வருவதற்காக காத்திருக்கிறேன்.One thought on “Bridge to Terabithia

  1. மோகன் தாஸ்,

    இப்படி ரசித்த நல்ல படங்களை எல்லாம் பட்டியலிடுங்கள் ஐயா. புண்ணிய்மாகப் போகும். நம்ம ரசனை அளவையும் கொஞ்சம் உயர்த்திக்கலாமான்னு யோசிப்போம்

    சாத்தான்குளத்தான்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s