அழகிய தமிழ்மகன்

அம்மா அப்பா பெங்களூருக்கு தீபாவளிக்கு வந்திருந்ததால் ஏதாவது ஒரு தீபாவளி ரிலீஸ் படம் போகாலாம் என்று ப்ளான் இருந்தது. போனதடவை வந்திருந்த பொழுது சிவாஜி போகலாமான்னு கேட்டாங்க ஆனால் டிக்கெட் வாங்கச் சென்ற பொழுது நான் எதிர்பார்த்த சமயத்தில் சிவாஜி படம் பார்க்கமுடியாது என்று வந்துவிட்டதால் இந்தமுறை டிக்கெட் முன்பே வாங்கிவிட்டேன். INOXல் வெள்ளிக்கிழமை மதியம் தான் முதல் ஷோ. அதற்கு ரிஸர்வ் செய்து வைத்திருந்தேன், பதிவுகளில் விமர்சனம் என்ற பெயரில் இந்தப்படத்தைப் பற்றி எழுதியிருந்தாலும் அதைப்படித்து நான் இந்தப்படத்தைப் பார்க்கப்போகும் வாய்ப்புகள் எதுவும் குறையப்போவதில்லை என்பதால் அவைகளைப் படிக்கவில்லை; எல்லாம் ஒரு முன்னேற்பாடு தான்.

முதல் பாதி படம் நல்ல விறுவிறுப்பாகத்தான் இருக்கிறது, என்னக் கொடுமைன்னா படத்தின் ஆரம்பத்திலேயே படத்தில் ஏதோ ‘கதை’ சொல்ல வந்திருக்கிறார்கள் என்பதைப்பார்த்து ஆச்சர்யமாகத்தான் இருந்தது. என்னாது டாக்டர். விஜய் படத்தில் கதையா? அதுவும் பர்ஸ்ட் ஹாஃபிலா! ஆச்சர்யம்தான். படம் மலைக்கோட்டையில் தொடங்குகிறது, இதையும் ஏதோ சாமியார் சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கிறேன். இப்பல்லாம் நிறைய படத்தில் மலைக்கோட்டையை காண்பிச்சிட்டுத்தான் தொடங்குறாங்க.

விஜய் ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டுக்கொண்டு 100M ஓடுறார், எனக்குத் தெரிந்து BPBHSS(அதாங்க எங்க ஸ்கூல் Boiler Plant Boys Higher Secondary School)ல் நடக்கும் ஸ்கூல் லெவல் போட்டியில் கூட மக்கள் ஸ்பைக்ஸ் ஷூக்கள் போட்டுத்தான் ஓடுவார்கள். அண்ணாத்த காலையில் ஜாகிங் போகும் ஷூவில் வந்து 100M ஓட்டம் ஓடுகிறார். ஆனால் விஜய் படத்தில் இந்த அளவுக்கு லாஜிக் பார்க்கிறதெல்லாம் ரொம்ப ஓவர்னு எனக்கே படுவதால் எஸ்கேப்.

ஸ்ரேயா அக்கா வராங்க, கொஞ்சமா ட்ரெஸ் போட்டு ஆட்டம் ஆடுறாங்க, கொஞ்சம் கண்ணீர் விடுறாங்க கடைசி கிளைமாக்ஸில் சென்டிமென்ட் ஆகப்பேசி ‘கெட்ட’விஜய்யை திருத்துகிறார். ஹிஹி பெண்ணிய பக்வாஸ் விமர்சனம் ஒன்றை எதிர்பார்க்கலாம், ஒரிஜினல் விஜய்யையும் டூப்ளிகேட் விஜய்யையும் கண்டுபிடிக்கக்கூட முடியாத அளவிற்கு ஸ்ரேயாவை முட்டாளாகக் காண்பித்திருக்கிறார்கள் என்று ஆனால் படத்தில் பாதியில் கழட்டி விடாமல் ஷ்ரேயா அக்காவை கடைசி வரை இழுத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

விஜய்க்கு இரட்டை வேஷமாம், ஒரு இன்ச் கூட வித்தியாசம் இல்லாமல் இரண்டு வேடங்களிலும் விஜய், ஆனால் அதற்கேற்றார்ப்போல் கதையும் இரண்டும் பேரும் ஒரே மாதிரி. எனக்குத் தெரிந்து ஜீன்ஸ் என்று ஒரு படம் வந்தது அதில் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அதில் ஐஸ்வர்யாராயை உண்மையாகக் கல்யாணம் செய்துகொள்ளும் பிரசாந்திற்கு(அதாவது இரட்டையரில் ஒருவர்)த் தான் எல்லாப் பாடல்களும் இருக்கும் ஒரே ஒரு பாடலைத் தவிர, இதை ஏன் சொல்றேன் என்று கேட்கிறீங்களா? அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்ததும் வெளியில் என் வயசொத்த பையன்கள் ரொம்பவும் கவலைப்பட்டார்கள் கடைசியில் அந்த இன்னொரு பிரசாந்தைக் இப்படி செஞ்சிட்டாங்களேன்னு அதனால ரொம்பவும் வருத்தப்பட்டதாகவும் சொன்னார்கள்.

இப்படி எல்லாம் ரசிகர்கள் நினைப்பார்கள் என்று நினைத்தோ என்னமோ ‘கெட்டவன்’ விஜய்க்கு ஒரு பாட்டு, ஒரு ஹீரோயின், ஒரு ரேப் சீன்(அப்படியா?), ஒரு குழந்தை என சொல்லிக்கொண்டே வந்தவர்கள், இரட்டையரில் கெட்டவனான விஜய்யைக்கூட கடைசியில் திருந்துவதாகக் காட்டியிருக்கிறார்கள், கெட்டவனாக இருப்பவன் வாழ்க்கையில் நல்லவனாக ஆவதை எதிர்ப்பவனல்ல நான் என்றாலும் எனக்கென்னமோ இந்தப்படத்தை அவன் கெட்டவனாகவே கடைசியில் இருப்பதாக நினைத்து கிளைமாக்ஸ் வைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

‘பொன்மகள் வந்தாள்’ பாட்டு சொல்லப்போனால் கதைக்கு ஏற்றவகையில் ரீமிக்ஸ் செய்திருப்பதாகச் சொல்லலாம் தான், ரீமிக்ஸ் பாடல்களில் இது தனியாக நிற்கிறது – ரஹ்மானாம், கலக்கலாக இருக்கிறது பாட்டு. ஆனால் இன்னும் நல்லா செய்திருக்கலாம் இந்தப்பாடலின் டான்ஸ், அதுவும் விஜய் இருக்கும் பொழுது படம் காண்பித்திருக்கலாம். ம்ஹூம் ஒழுங்காக இந்தப்பாடலை எடுக்கவில்லை, விஜய்யின் ட்ரெஸ்ஸிங்கும் இந்தப்பாடலுக்குப் பொருந்தவில்லை சிம்புவிடமாவது கேட்டிருக்கலாம்(சிம்பு அந்த விஷயத்தில் சூப்பர், லூசுப்பெண்ணே எடுத்திருந்திருந்த விதமும் ட்ரெஸ்ஸிங்கும் அருமை).

மற்றபடிக்கு ஷகிலாவுடனான இரட்டை அர்த்த கிச்சுகிச்சு, ஷகிலாவின் Cleavage ஷாட்ஸ் வைக்கணும்னே ஷகிலாவை இழுத்திருப்பார்களோ என்னமோ இன்னொரு பாட்டில் ஷ்ரேயாவும் Cleavage காட்டிச் செல்கிறார் என்ன சொல்ல தியேட்டரின் முதல் சீட் வரிசையில் ஏற்கனவே கழுத்தை தூக்கி படம் பார்த்துக் கொண்டிருந்தேன் என் நிலைமை கவலைக்கிடம் ;).

சந்தானம், கஞ்சா கருப்புவும் கூட கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள் சில இடங்களில் சிரிப்பும் வருகிறது.

இரட்டையர் படம், கிராபிக்ஸ்க்கு இன்னும் கொஞ்சம்(நிறைய!!!) செலவு செய்திருக்கலாம். பக்வாஸா இருக்கு, ஜீன்ஸ் குறைந்தபட்சம் ஆளவந்தான் அளவுக்கு கூட கிராபிக்ஸ் இல்லை. விஜய் இந்த அளவுக்காவது ரிஸ்க் எடுத்து ஒரு கதை(!) இருக்கும் படத்தில் நடித்திருக்கிறாரே! பாராட்டலாம் ஏன் என்றால் இது போன்ற படங்கள் வெற்றி பெற்றால் தான் விஜய் இன்னும் கீழிறங்கி பக்வாஸ் படங்கள் எடுத்து அதையும் நூறு நாள் ஓட்டமாட்டாராயிருக்கும். படத்தின் பாதியிலேயே விஜயின் அம்மா, அப்பாவைக் காணோம். இரண்டு விஜயில் எது ஒரிஜினல் என்பதில் வரும் சந்தேகங்கள் என நிறைய லாஜிக் ஓட்டைகள் உண்டுதான் என்றாலும் விஜய்கிட்டேர்ந்து இந்த அளவு படம் வருவதே பெரிசுன்னு நினைச்சிக்க வேண்டியதுதான். விஜய் எப்படி படம் எடுத்தாலும் அவங்க அப்பா 100 நாள் ஓட்டுறார்ங்கிறதால இது மாதிரி படம் எடுக்கவாவது தோனிச்சே. எங்கப்பாவின் விமர்சனத்தை பொதுப்புத்தி சார்ந்த விமர்சனமாகப் பார்த்தால் படம் நல்லாயிருக்கு என்று தான் என் அப்பா சொன்னார். வேறெதுவும் நினைவில் வந்தால் பின்னால் இணைக்கிறேன்.


Fri, 09 Nov 2007 12:18:00 GMT

One thought on “அழகிய தமிழ்மகன்

  1. முடிந்தவரை இம்மாதிரி திரைப்படங்களை காசு குடுத்து பார்க்க தவிர்த்து விடுவதுண்டு. அப்படியும் எங்காவது மாட்டி கொள்வோம்.. டிவியில் போட்டால் கூட விவரம் அறிந்து எங்காவது ஓடி விட வேண்டும். இந்த நேரத்தில் போகோ பார்க்கலாம்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s