சுஜாதாவின் மேற்கண்ட கேள்வியை முன்வைத்து கணையாழி கடைசி பக்கங்களில் எழுதியதை முன்னமே கூட ஒரு முறை பட்டியலிட்டிருக்கிறேன், புத்தக விமர்சனம் வைக்கிறேன் பேர்வழியென்று.
“தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன” மனிதர் நிறைய தேடியிருக்கிறார். கண்டும் பிடித்திருக்கிறார்.
“தமிழில் ஆதியிலிருந்தே பார்த்தால் சங்கப்பாடல்கள் செக்ஸ் உணர்ச்சியற்று இருக்கின்றன. சில களவுப்பாடல்களில் உள்ள கலவையைப் பதம் பிரிப்பதற்குள் உயிர் போய் விடுகிறது. திருக்குறளில் காமத்துப்பாலில் உண்மையான காமம் கொஞ்சமே. மற்றவை பெருமூச்சுக்கள், ஊடல், வளை கழல்வது இன்ன பிறவே. தமிழில் ஏகமாகப் பரவிக் கிடக்கிற காவியங்களிலும் பிரபந்தங்களிலும் அவ்வப்போது தோன்றும் பெண்கள் யாவரும்(out of proportion) கொங்கைகளில் ஈர்க்கிடை போகாதாம். இல்லையென்றால் மலைக்குன்றுகளாம். இடை இல்லவே இல்லையாம்(உலோபியின் தருமம்) சமாளிக்கச் சிரமமான பரிமாணங்கள். அருணகிரிநாதர் சில சமயங்களில் Pure Porno.
அருக்கு மங்கையர் மலரடி வருடியும்
கருத்தறிந்து பின் அரைதனில் உடைதனை
அவிழத்தும் அங்குள…
மேலே ‘திருப்புகழில்’ தேடிக்கொள்ளவும்.”என்று போட்டிருக்கிறது, தேவைப்படுபவர்கள் தேடிக்கொள்ளவும் கண்டுபிடித்தவர்கள் ஒரு பின்னூட்டம் போடவும்.
சரி மனுஷன் சுத்திச் சுத்தி இலக்கியத்தில மாரைத்தான் தேடுறாருன்னு நினைச்சிக்கிட்டே அடுத்த பக்கத்தைத் திருப்பினால். நான் நினைத்ததை ஒரு முப்பத்திரண்டு வருஷத்துக்கு முன்னாடியே கேட்டது மாதிரி அடுத்தப் பக்கத்தில் விளக்கம் தருகிறார்.
“தமிழ் இலக்கியத்தில் போர்னோ என்று நான் தேடுவது முலைகளைப் பற்றிய பாடல்களை இல்லை. ஐம்பெரும்காப்பியங்களிலும் அகத்திலும், புறத்திலும் ஆழ்வார்களிலும் குங்குமம் கழுவின கொங்கைகளுக்குப் பஞ்சமே இல்லை என்பது எனக்குத் தெரியும் நான் தேடுவது இன்னும் கொஞ்சம் Subtle ஆன விஷயம். ஆழ்வார் பாடலிலிருந்தே உதாரணம் சொல்கிறேன்.
‘மையார் கண் மடலாச்சியார் மக்களை
மையன்மை செய்து அவர் பின்போய்
கோய்யார் பூந்துகில் பற்றித் தனிநின்று
குற்றம் பலபல செய்தாய்’என்பது ஆண்டாள் பாடல்களை விட Better Porno.”
ஏன் அந்த மாரைப் பற்றிய சந்தேகம் வந்ததுன்னா, தமிழ் சிபியில் முலைகளைப் பற்றிய ஒரு இலக்கியக் கட்டுரை நான் படித்த ஞாபகம் இருக்கிறது அதனால் தான் இதைப் போயா தேடினார்னு நினைச்சேன். ம்ம்ம் மனுஷன் பெரிய ஆள்தான்.
“இந்த நூற்றாண்டின் தமிழ் எழுத்திலும் அதிகம், போர்னோ கிடையாது. பாரதியார் இதைத் தொடவில்லை. பாரதிதாசனின் ஓடைக் குளிர் மலர்ப் பார்வைகள் தான் உண்ணத் தலைப்பட்டன. உடல்கள் இல்லை. புதுமைப்பித்தன், கு.ப.ரா, போன்றவர்கள் தலைவைத்துப் பார்க்கவில்லை. ஏன் புதுக்கவிஞர்களும் புது எழுத்தார்களும் கூட இந்த விஷயத்தில் ஜகா வாங்கியிருக்கிறார்கள். தமிழ்நாடனின் காமரூபம் சற்று வேறு ஜாதி. எடுத்துக்கொண்ட செக்ஸை நேராகச் சொல்வதில் எல்லோருக்குமே தயக்கம் இருந்திருக்கிறது. மார்பகம் விம்மித் தணியும், அதற்கப்புறம் என்னடா என்றால் இருவரும் இருளில் மறைந்தார்கள்? ஏன் மறைய வேண்டும்?”
கணையாழி கடைசி பக்கங்கள் பதிவில் இங்கே எழுதியிருந்தேன்.
—————————–
முன்னமே கூட தமிழ் சிஃபியில் ‘முலைகள்’ பற்றிய ஒரு கட்டுரை இருந்தது. கட்டுரை எழுதியவரைப் பற்றி மறந்து போய்விட்டது ஆனால் முலைகளின் வித்தியாசமான தோற்றங்களைப் பற்றி பேசியது அந்தக் கட்டுரை. தமிழ் சிஃபி அப்பொழுது யுனிக்கோடில் இல்லை, இப்பொழுது மாற்றிக் கொண்டிருந்தார்கள் மாற்றிவிட்டார்களா தெரியாது, மாற்றினால் ஒரு முறை தேடிப் பார்க்கலாம்.
தேடிப்பார்த்து கிடைத்தது. இங்கே
எப்பொழுதோ யாரோ எழுதிப் படித்தது, பழங்கால தமிழர்களுக்கு ஆண்குறியே இல்லை என்று*(இல்லை அதை ஒத்த ஒன்று – நினைவில் இருந்து எழுதுகிறேன்.) ஏனென்றால் அதைப் பற்றிய குறிப்பே இலக்கியத்தில் இல்லை என்று சொல்லியோ என்னவோ, தமிழ் இலக்கியத்தில் அத்தனை தூரம் பரீட்சையம் இல்லாதவன் நான். முலைகள் பற்றிய குறிப்புகள் இருக்கும் அளவிற்கு ஆண்குறிகள் பற்றிய குறிப்புகள் இருக்காது என்றே நினைக்கிறேன்.
——————————
நான் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய பொழுது ஒரு வழக்கத்திற்காகவே கொஞ்சம் ‘செக்ஸியாக’ எழுதிக் கொண்டிருந்தேன். பின்னர் நண்பர் ஒருவர் ‘ரமணி சந்திரன்’ கதை போல இருக்கிறது என்று சொல்ல, அதை விட உத்வேகம் ஒன்று வேண்டுமா அப்படி எழுதுவதை நிறுத்திவிட்டேன். 🙂
——————————-
‘அருப்பு ஏந்திய கலசத்துணை
அமுது ஏந்திய மதமா
மருப்பு ஏந்திய’ எனல் ஆம் முலை,
மழை ஏந்திய குழலாள்
கருப்பு ஏந்திரம் முதலாயின
கண்டாள் இடர்காணாள்
பொருப்பு ஏந்திய தோளனோடு
பொருந்தினள் போனாள். [ அயோத்தியா காண்டம். 1931][அரும்பு ஏந்திய அமுது நிறைந்த இணைக் கலசங்கள் போலவும் மதயானை தந்தங்கள் போலவும் முலைகளும் மேகம்போன்ற கூந்தலும் கொண்டவள் கரும்பு இயந்திரம் முதலியவற்றைக் கண்டபடி துயரங்களை அறியாமல் மலைகள் பொருந்திய தோள்கொண்டவனுடன் இணைந்து சென்றாள்]
இப்ப ஜெயமோகன் புகுந்து விளையாடுறாரு, அவருடைய காடு மற்றும் பின் தொடரும் நிழலின் குரல் ஏற்கனவே படித்திருக்கிறேன் என்பதால் புதிதாகத் தெரியவில்லை என்றாலும். ரொம்ப நாட்களாய் மனதிற்குள் ஊறிக்கொண்டிருந்த கம்ப ராமாயணம் படிக்கணும் என்ற ஆசையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
ஜெமோவின் கம்பனும் காமமும்…
——————————-
இதே போல R.P. ராஜநாயஹம் எழுதியிருக்கிறார், அதில் சௌந்தர்யலஹரி பற்றி சொல்கிறார் இப்படி,
‘சக்கரமையப்புள்ளி சக்தி உன் முகமாம்
கீழே தக்கதோர் இரு முலைகள்
தாவினால் அழகு யோனி ‘
இவருடைய Carnal Thoughts தமிழில் ஒரு நல்ல ஃபோர்னோ முயற்சி என்றே நினைக்கிறேன்.
பார்ப்போம்.
* – நன்றி அருட்பெருங்கோ
arumai 🙂
/எப்பொழுதோ யாரோ எழுதிப் படித்தது, பழங்கால தமிழர்களுக்கு ஆண்குறியே இல்லை என்று(இல்லை அதை ஒத்த ஒன்று – நினைவில் இருந்து எழுதுகிறேன்.) /
http://jeyamohan.in/?p=161
🙂
அருட்பெருங்கோ, நன்றி
வேர்ட்பிரெஸ் தமிழாக்கம் கருத்த உங்கள் கருத்துகள், வழு அறிக்கைகள், பங்களிப்புகளைத் தர http://groups.google.com/group/tamil_wordpress_translation குழுமத்துக்கு வரவேற்கிறோம். நன்றி.
குற்றால குறவஞ்சியிலும், சில குறத்தி பாடல்களிலும், கம்ப ராமாயணத்திலும், கொஞ்சம் முருக புராணத்திலும், நிறைய ஆண்டாள் பாசுரங்களிலும், சில புதுமை பித்தன் கதைகளிலும், கு.பா.ராவிடமும் படித்தியிரிக்கிறேன். ஆரோக்கியமான போர்னோ தமிழில் ரொம்ப குறைவு.. சில குழுமங்களில் ரசிக்கும்படி போர்னோ இருக்கிறது. மெல்லிய காதலும், தழும்பாத காமமும் கொண்ட இலக்கியங்களை இன்னும் மொழிபெயர்க்கப்பட்ட அயல்நாட்டு இலக்கியங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது.
இது பற்றி நான் பதிவு போட்டுள்ளேன், பார்க்க: http://dondu.blogspot.com/2007/12/blog-post.html
Dear Sir/Madam,
your efforts are very ATTRACTIVE; INNOVATIVE; And, INFORMATIVE ONE. And very colourful and useful one.You’re requested to come out the real facts anything about the UNTOLD STORIES FROM OUR TAMILIAN ERA often…..
best regards, balasubramanian@kattimedu-TIRUVARUR.