நான் பிறந்தது, வளரந்தது, படித்தது எல்லாமே திருச்சியில் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஊர். அப்பா, அம்மா இருவரும் ஆசிரியர்கள். ஒரே ஒரு அக்கா, மோகனவள்ளி. பெயர் மட்டும் இல்லை, எங்களிருவருக்கும் வேறு பல விஷயங்களில் ஒற்றுமை உண்டு, அதே போல் சில வேற்றுமைகளும்.
ஒன்றும் பணக்கார வீடு கிடையாது, சாதாரணமான நடுத்தர குடும்பம் தான் இன்னும் சொல்லப்போனால் சிறு வயது ஞாபகங்கள் கொஞ்சம் கஷ்டமானவைதான். ஆனால் அவை தேவையில்லை இங்கே. படித்தது அப்பாவினுடைய பள்ளியில் என்பதில் எவ்வளவு நன்மைகள் உண்டோ அதே அளவு தீமையும் இருந்தது. ஓரளவுக்கு நன்றாகப் படிக்கக்கூடிய மாணவன் நான். படிப்பை தவிர விளையாட்டு, பேச்சு, ஓவியம் ஆகியவற்றிலும் ஆர்வம் இருந்ததால். படிப்பில் முதன்மையானவன் இல்லையே தவிர என்றுமே நான் படிப்பில் பின் தங்கியதில்லை.
பத்தாம் வகுப்பில் நான் மதிப்பெண்களை அள்ளிக் குவித்துவிடுவேன் என்று எல்லோரும் நினைத்த பொழுது, 80 சதவீதம் மட்டுமே தான் வாங்கினேன். அதை விட மிகமுக்கியமான பன்னிரெண்டாம் வகுப்பில் 70 சதவீதம் வாங்கி பொறியியலின் அத்தனை வாய்ப்புக்களையும் நழுவ விட்டேன். இந்த முறையும் நான் அதிக மதிப்பெண்கள் வாங்குவேன் என்று எதிர்பார்த்தவர்கள் தான் அதிகம்.
பிறகு நான் வாங்கிய மதிப்பெண்ணுக்கு ஏற்றது போல் கிறிஸ்துராஜ் கல்லுரியில் இளம் அறிவியல் கணிப்பொறியியல் பாடப்பிரிவில் சேர்ந்தேன். மூன்றாண்டு கல்லூரி வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்டது அதிகம். படிப்பு முடிந்ததும் நான் சென்றது புது டெல்லிக்கு வேலை வாங்குவதற்காக! அங்கே நான் தங்கியிருந்தது என்னுடைய சித்தியின் வீட்டில். சாப்பாடிற்கு, தங்குவதற்கு என்று ஒன்றுமே கொடுக்காமல் தான் இருந்தேன். இங்கேயும் கற்றுக் கொண்டது அதிகம். வாழத் தெரிந்து கொண்டேன் என்றால் சரியாக இருக்கும். நான் இன்றிருக்கும் நிலைக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று என் புதுதில்லி வாழ்க்கை மிக முரடனாக இருந்த என்னை இன்றைக்கு நான் இருக்கும் அளவிற்காவது மாற்றியது என்றால் அது தில்லியில் நடந்த மாற்றம் தான்.
பிறகு அங்கிருந்து பெங்களுருக்கு, இங்கேயும் வேலை காரணமாகத்தான். இந்த முறை தங்கியது மாமாவின் வீட்டில். இங்கேயும் அனைத்தும் இலவசம், சாப்பாடு தங்குவது என. கொஞ்சம் போல் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள். பிறகு இப்போது கேன்பே சாஃப்ட்வேருக்காக புனேவில் ஒன்றரை ஆண்டுகள் வேலைசெய்து விட்டு இப்பொழுது திரும்பவும் பெங்களூர் வாசம். இந்தமுறை தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் நானே செலவழிக்க ஆரம்பித்திருந்தேன் சொந்தக்காரர்கள் என்று யாரும் அருகில் இல்லாத காரணத்தால்.
காலம் என் கால்களையும் கல்யாணம் என்ற அன்பால் கட்டிப் போட்டது, மகிழ்ச்சியான குடும்பம் – நன்மாறன் பொகுட்டெழினி என்றொரு பையனும் உண்டு. இரண்டாண்டு கால கூட்டுக் குடும்ப வாழ்க்கை, தொடர முடியாமல் அமெரிக்க வேலை காரணமாய், ராலே – நார்த் கரோலினாவில் தற்சமயம் வாசம். அன்பான மனைவி, அழகான குழந்தை, மனதையும் பையையும் நிறைவாக்கும் வேலை என்று என் கனவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
Hi , really wonderfull site in tamil , amazing , keep this good work going kundavai, proud of u for your tamil elegance,
nice introduction.
P.S>> your introduction repeats twice. check the content and remove the duplicate paragraph entry
நிச்சயம் செய்றேங்க
hello how to read ur stories??
i don’t know the password
Hi Mohana,
I used to read ur blog pages. Superb.
Now i have small problem. I do not have any idea how to view the password protected pages.
How do i need to get the password?
Help me out.
Cheers,
Kaman
வணக்கம் மோகன்,
தங்களது வலைபக்கத்தை “book mark” செய்து படித்து வருகிறேன்.தங்களது password protected பதிவுகளை படிப்பது எப்படி
R.Ganesh,Bahrain
காமன், கணேஷ்,
என் பாஸ்வேர்ட் ப்ரொடக்ஷன் பதிவுகள் கதைகளாகயிருந்தால், முடித்ததும் பாஸ்வேர்ட் ப்ரொடக்ஷன் எடுக்கப்பட்டுவிடும்.
ஹாலிவுட் விஷயமாகயிருந்தால், ஒரு சேகரிப்பிற்காக என் பதிவில் சேமித்துக் கொள்கிறேன் அவ்வளவே.
மற்றபடி யாருக்கும் பதிவின் பாஸ்வேர்ட் தருவதில்லை, இதில் நண்பர்கள் புதியவர்கள் என்ற வித்தியாசம் கிடையாது.
நன்றி
🙂
மிக அருமையான ஒரு வலைதளம் மேலும் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்
Vijay
Tamil Dictionary
http://www.jvmsofts.com/tamildict/tamildict.php
Hi. I started to read your blog recently. I must say it is very interesting. your tamil language flow is very perfect. i still see Sujatha’s effects in it – it is unavoidable with many bloggers. you are writing about many topics. i book marked the blog site and i am reading whenever i get time in evenings. i would like to keep in touch with you – if you are also interested. we can discuss about the topics you write. i am also having a blog. when time permits just visit and comment me. thanks. take care.
உண்மையில் இது ஒரு மிக அருமையான வலைத்தளம். நானும் திருச்சியை சேர்ந்தவன் தான். ஆனாலும் நான் இன்று இந்த வலைத்தளத்தில் சித்தன வாசல், மற்றும் குடுமியான்மலை – ஒரு சிற்ப அற்புதம் என்பது பற்றியும் படித்தவுடன் அவற்றை காண வேண்டும் என்ற அவா உண்டாகிறது. நம்முடைய சிற்பங்களை படம் பிடிக்க பல கோவில்களில் அனுமதி மறுப்பதால் நம் கலாசாரத்தை வெளி உலக்கு கொண்டு செல்ல முடியவில்லை. படங்களுடன் உள்ள சித்தன வாசல் மற்றும் குடுமியான்மலை மிக அருமையாக உள்ளது.
இன்னும் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்
Hi,
lovely pictures, can i request you to do a guest post on kudimiyanmalai for my site
rgds
vj
விஜே,
எனக்குப் பிரச்சனையில்லை. உபயோகிச்சிக்கோங்க.
XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்:
எனக்குப் புரியவில்லை. நீங்கள் யார்? மோகன்தாஸா? குந்தவையா? (ப்ளாக் எனக்கு நண்பனால் நண்பனாகி 6 மாதமே ஆகிறது. இன்னும் நிறைய ஹோம்வொர்க் மிச்சம் இருக்கிறது)
அன்புள்ள Bags,
என் பெயர் மோகன்தாஸ், நான் குந்தவை வந்தியத்தேவன் என்ற பெயரில் கதைகள் எழுதுவதுண்டு. என் புகைப்படங்கள் குந்தவை என்ற பெயருடன் வெளிவரும்.
வணக்கம் ,
நெடுங்காலமாக உங்கள் எழுத்துக்களை
மரத்தடியிலும் , தமிழோவியம் மூலமாகவும் படித்து வருகிறேன் ….
உங்கள் நடை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று….
படிப்பவருக்கு கொஞ்சம் கூட அலுப்பு த்தட்டாத வகையில்
கதை சொல்லும் உங்கள் பாங்கு எனக்கு மிக பிடிக்கும் !!!
உங்கள் வலைப்பூ எனக்கு இப்போது தான் அறிமுகம் ..
தொடர்ந்து எழுதுங்கள்….
அப்புறம் ஒரு விஷயம் ….
உங்கள் பெயர் (மோகன் தாஸ் , குந்தவை வந்தியதேவன்) மிக அருமை….
வாழ்த்துக்கள்
நவீன் . சோ
வணக்கம்,
உங்களுக்கு விருப்பம் இருந்தால், சிறுகதைகள்.காம் (http://www.sirukathaigal.com) என்ற எங்கள் தளத்தில் உங்கள் கதைகளை பதிவு செய்ய அழைகிறோம்.
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
என்றும் அன்புடன்,
ஆதரவுக் குழுமம், சிறுகதைகள்.காம்
தங்கள் முக நூல் பக்கத்தை அறிந்து கொள்ளலாமா