கடல் குதிரையும் சபிக்கப்பட்ட ஆண் ஜனமும்

 

வீட்டில் அக்கா உறங்கியதும் அனிமல் ப்ளானட் பார்ப்பது உண்டு. சமீபத்தில் நான் பார்த்த Most Extreme Mom’s & Dad’s(விலங்குகளில்) ஆச்சர்யப்பட வைத்த ஒன்று. விலங்கினங்களிலேயே குட்டியை வயிற்றில் சுமக்கும் ஆண் விலங்கு(மனிதனையும் சேர்த்துத்தான் – மனிதன் social animalலாமாம்) ஒன்றே ஒன்று தானாம். அதுதான் கடல் குதிரை, அதனால் Most extreme dad என்கிற பெருமை கடல் குதிரைக்குக் கிடைத்தது.

எங்கோ படித்த ஞாபகம் மனித இனத்தின் தொடக்கத்தில் இருந்தே பெண்களைக் கண்டு ஆண்கள் பயந்து வந்ததாக, எதனாலென்றால் பெண்ணால் மட்டும் தான் ஒரு உயிரினத்தை பிறப்பிக்க வைக்க முடிந்ததாகவும் அதனால் தான் அவன் பெண்களை தெய்வமாக வைக்க ஆரம்பித்தான் என்றும் எங்கே என்று நினைவில் இல்லை. கடவுள் மீது நம்பிக்கை இல்லாததால் இயற்கையின் மீது இந்த பழியை சுமத்துவதைத் தவிர வேறுவழியில்லை, ஆண்களிடம் இருந்து பிறப்பிக்கும் பாக்கியத்தை மறைத்துவிட்டதற்காக.

அறிவியல் உலகத்தின் அதிவளர்ச்சின் காரணத்தில் பிற்காலத்தில் ஆண்கள் குழந்தை பெற வைக்கும் சாத்தியம் நிறைவேறும் என்று நம்புவோம். கற்காலத்தில் இருந்த மனிதனால் இன்றைய சாட்டிலைட் உலகத்தை கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது அதைப்போலவே இன்று நாமும் இருக்கிறோம் அறிவியல் உலகம் படைக்கப்போகும் ஆச்சர்யங்களில் இந்த ஆண் பிரசவிக்கும் அதிசயமும் ஒன்றாக இருக்கவேண்டும்.

Men’s breasts do have milk ducts

Men’s breasts do have milk ducts, and their bodies produce oxytocin and prolactin, the hormones required for milk production. As of yet, there are no proven scientific examples of male breastfeeding, but there are reports of men who were able to produce milk through extensive stimulation of the breast and nipple. Yet this isn’t a viable option for feeding babies, especially as no one is certain if male breast milk would be of the same quality and composition as female milk.

கடல் குதிரையில் இருந்து டாபிக் எங்கேயோ ஹைஜாக் செய்யப்பட்டுவிட்டது. ஆண் இனங்களிலேயே பிரசவிக்கும் திறன்படைத்த ஒரே உயிரினம் கடல்குதிரைகள் தான்(இந்த ஃபேமிலியும் இன்னும் சிலரையும் சொல்லலாம் – கடல் டிராகன் ஒரு உதாரணம்). நிறைய பேர் அனிமல் ப்ளானட்டின் இந்த நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். Most extreme mom’s ம் கூட ஒரு நல்ல நிகழ்ச்சி தான் நான் மறுக்கவில்லை; ஆனால் எனக்கு இயல்பாகவே மற்றையது பிடித்திருந்தது.

ஆண்களாலும் பிள்ளை பெற முடியும் என்ற நிலை வந்துவிட்டால் உலகம் எப்படியிருக்கும் நிச்சயமாய் ஒரு சைன்ஸ் பிக்ஷன் கதை எழுத முடியும். சைன்ஸ் பிக்ஷன் என்றதும் நினைவிற்கு வரும் சுஜாதா ஐயாவை என்னால் ஒரு தீவிரமான ஆணாதிக்கவாதி என்று சொல்லமுடிந்தாலும் அந்த வம்பை இங்கே இழுக்கவில்லை. அதேபோல் சமீபத்தில் ஒரு நபர் நிறைய பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி ஏமாற்றியதைப் பற்றிய கேள்வி ஒன்றிற்கு குங்குமத்தில் ‘பெண்களை சுலபமாக ஏமாற்ற முடியும்’ என்பதை திரும்பவும் நிரூபித்திருக்கிறார் என்ற அவருடைய பதிலை தூக்கியெறிந்துவிட்டு மற்றொரு கேள்வியான பெண்கள் இல்லாத உலகம் பற்றிய கேள்விக்கான பதிலை எடுத்துக் கொள்ளலாம்.

அவர் சொல்லியிருந்த பதில் எவ்வளவு காலம் அப்படியிருக்க முடியும் ஒரு நூற்றாண்டுக்குள் உலகம் மடிந்துபோய்விடும்(Exact ஆன வரிகள் கிடையாது நினைவில் இருந்து சொல்கிறேன்) என்று சொன்னார். ஆனால் அறிவியல் இந்த அதிசயத்தைச் சாதித்தால் ஒருவேளை அந்த நபர் கேட்டிருந்த கேள்விக்கான பதிலாக சுஜாதா மற்றொன்றை சொல்லியிருப்பார் என்று நம்பலாம்.

ஆனால் உயிரினங்களில் சில அரியவகை உயிரினங்கள் அழியும் பொழுதே அவற்றைக் காப்பாற்ற பெரிய இயக்கங்கள் வரும்பொழுது இத்தனை நூற்றாண்டுகளாய் உலக இயக்கத்திற்கு வழி செய்த பெண்களை ஒழித்துவிடுவதும் கூட சைன்ஸ் பிக்ஷனிலேயே சாத்தியமாகலாம்.

Fri, 19 Oct 2007 04:40:00 GMT

அணுஆயுத யுத்தம்???

சமீபத்தில் நார்த் கொரியாவின் 60 ஆண்டு விழாபற்றிய ஒரு குறும்படம் பார்க்க நேர்ந்தது. உலகத்தின் மூன்றாவது மிகப்பெரிய ராணுவபலம் உடைய நாடாம் நார்த் கொரியா! உண்மையிலேயே ஒரு புதிய செய்திதான் எனக்கு.

அமேரிக்காவின் வெளியுறவுக்கொள்கையில் மாற்றம் ஏற்படும் வரை போருக்கான சூழல் மறையப்போவதில்லையென்றும். அமேரிக்கா நார்த்கொரியாவை தாக்கும் பட்சத்தில் நியூக்ளியர் போரை அவர்கள் துவக்குவார்கள் என்றும் நார்த் கொரியாவின் தந்தை(அதிபர்) சொன்னது எனக்குள் ஏதோவோரு விஷயத்தை உறுதிசெய்வதாய் இருந்தது.

ஈரான் உலகத்திலேயே அதிவேகமாய் நீரில் சென்றுதாக்கும் ஏவுகணையை சோதனை செய்துள்ளதைப்பற்றியும் ஒரு செய்தி படிக்க நேர்ந்தது தற்செயலான ஒரு நிகழ்வாகவே படுகிறது. அதுவும் இல்லாமால் தேவையில்லாத ஏதோவொன்றைப்பற்றி நான் அதிகமாய் கவலைப்படுவதாயும் படுகிறது. அதை விட்டுவிடுவோம்.

வேலையில் அதிகநேரம் செலவிடவேண்டியிருப்பதால், தேர்தல் சமயத்தில் எழுதமுடியுமா தெரியவில்லை.

என்னைப்பொறுத்தவரை இந்த தேர்தலில் திமுக கூட்டணி சுலபமாய் வென்றுவிடும் என்று தோன்றுகிறது. மற்றவர்கள் நினைப்பதுபோல் கூட்டணி ஆட்சியும் வராதென்று நினைக்கிறேன். ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஸ்டாலின் முதல்வராவதற்கும் சதவீதம் அதிகமாகவே இருப்பதாக படுகிறது. விஜயகாந்த் ஒன்றும் நிமிர்த்திவிடப் போவதாகப்படவில்லை. அதிகம் போனால் அவர் போட்டியிடும் தொகுதியில் வெற்றி வித்தியாசம் மிகக்குறைவாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் இவரின் வெற்றிவாய்ப்பு 50:50.